Published:Updated:

நடிகை ஜோதிலஷ்மி, பஞ்சு அருணாசலம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

Vikatan Correspondent
நடிகை ஜோதிலஷ்மி, பஞ்சு அருணாசலம் மறைவுக்கு  முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
நடிகை ஜோதிலஷ்மி, பஞ்சு அருணாசலம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
நடிகை ஜோதிலஷ்மி, பஞ்சு அருணாசலம் மறைவுக்கு  முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

சென்னை: பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை ஜோதிலஷ்மி,சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ஆகியோரின் மறைவுக்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில்," பிரபல திரைப்பட நடிகையும், நடனக் கலைஞருமான திருமதி ஜோதிலஷ்மி அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று (9.8.2016) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

திருமதி ஜோதிலஷ்மி அவர்கள் 1963-ம் ஆண்டில் வெளி வந்த"பெரிய இடத்துப் பெண்" திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி,  நான் நடித்த ‘அடிமைப்பெண்’, ‘நீரும் நெருப்பும்’, ‘தேடிவந்த மாப்பிள்ளை’, ‘கலாட்டா கல்யாணம்’ உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடினமான உழைப்பாளி, பழகுவதற்கு இனிமையானவர்.

நடிகை ஜோதிலஷ்மி, பஞ்சு அருணாசலம் மறைவுக்கு  முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார்.  திருமதி ஜோதிலஷ்மி  அவர்களின் மறைவு  திரைப்படத் துறையினருக்குப்   பேரிழப்பாகும்.
 
திருமதி ஜோதிலஷ்மி  அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல  இறைவனை பிரார்த்திக்கிறேன். 


பழம்பெரும் தமிழ்த் திரைப்பட திரைக் கதை ஆசிரியரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான திரு. பஞ்சு அருணாசலம் அவர்கள் இன்று (9.8.2016) உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்தும் நான் மிகவும் துயரம் அடைந்தேன்.


திரு பஞ்சு அருணாசலம் அவர்கள்,  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த "கலங்கரை விளக்கம்" திரைப்படத்தில் 'என்னை மறந்ததேன்....', 'பொன்னெழில் பூத்தது....' ஆகிய பாடல்கள் உள்ளிட்ட 200-க்கும்

நடிகை ஜோதிலஷ்மி, பஞ்சு அருணாசலம் மறைவுக்கு  முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

மேற்பட்ட சிறந்த திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். நான் நடித்த 'அவன் தான் மனிதன்'  திரைப்படத்தில் திரைக்கதை ஆசிரியராகப்  பணிபுரிந்துள்ளார்.

எளிமையானவரும், பழகுவதற்கு இனிமையானவருமான திரு. பஞ்சு அருணாசலம் அவர்கள் மறைவு தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு பேரிழப்பாகும். 

திரு. பஞ்சு அருணாசலம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல  இறைவனை பிரார்த்திக்கிறேன்." என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.