Published:Updated:

'''என் தேசத்துக்காக நான் ஏன் ஓடக் கூடாது?'' - பிரதமர் மோடிக்கு ஒரு தடகள வீராங்கனையின் மடல்

'''என் தேசத்துக்காக நான் ஏன் ஓடக் கூடாது?'' - பிரதமர் மோடிக்கு ஒரு தடகள வீராங்கனையின் மடல்

'''என் தேசத்துக்காக நான் ஏன் ஓடக் கூடாது?'' - பிரதமர் மோடிக்கு ஒரு தடகள வீராங்கனையின் மடல்

Published:Updated:

'''என் தேசத்துக்காக நான் ஏன் ஓடக் கூடாது?'' - பிரதமர் மோடிக்கு ஒரு தடகள வீராங்கனையின் மடல்

'''என் தேசத்துக்காக நான் ஏன் ஓடக் கூடாது?'' - பிரதமர் மோடிக்கு ஒரு தடகள வீராங்கனையின் மடல்

'''என் தேசத்துக்காக நான் ஏன் ஓடக் கூடாது?'' - பிரதமர் மோடிக்கு ஒரு தடகள வீராங்கனையின் மடல்


க்‌ஷா பந்தன் விழாவையொட்டி முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனை சாந்தி செளந்திரராஜன் பிரதமர் மோடிக்கு சகோதரத்துவ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், ''என்னுடைய மூத்த சகோதரராக உங்களை நான் பார்க்கிறேன். ரக்‌ஷா பந்தன் வாழ்த்துத் தெரிவித்த இந்தத் தங்கையை ஏன் மறந்துவிட்டீர்கள்? அநீதி இழைக்கப்பட்ட எனக்கு என்ன பரிசுப்பொருள் கொடுக்கப் போகிறீர்கள்'' என்று கேட்டுள்ளார்.


''நான் மட்டும் ஏன் புறகணிக்கப்பட்டுள்ளேன்?''

''என்னைப்போன்று பாலினச் சோதனையில் சிக்கியவர் ஒடிசா வீராங்கனையான டூட்டி சந்த். அவர், தனது தடைக்கு எதிராகச் சர்வதேச

விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்தத் தடை விலக்கப்பட்டு, அவர் தற்போது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். இருவருக்குமே ஒரே பிரச்னைதான். ஆனால், அவருக்கு மட்டும் நீதி கிடைத்துள்ளது. நான் மட்டும் ஏன் புறக்கணிக்கப்பட்டு உள்ளேன். டூட்டி சந்தின் நியாயமான போராட்டத்துக்கு அந்த மாநிலம் முழுவதுமாக ஒத்துழைப்பு அளித்தது. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக விவாதங்கள் நடைபெற்றன. என் தடை மீது மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு மட்டும் ஏன் இன்னும் நீதி  கிடைக்கவில்லை?


ரக்‌ஷா பந்தன் விழாவை நீங்கள் கொண்டாடி வருகிறீர்கள். என் சகோதரா... உங்களிடம் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். என்னை மட்டும் ஏன் மறந்துவீட்டீர்கள்? 10 வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால், என் நீதிக்கான கேள்விகளுக்கு மட்டும் இதுவரை ஏன் பதில் கிடைக்கவில்லை. பாலினச் சோதனையால் சிறந்த வீரர்கள் தடை விதிக்கப்படுகிறார்கள். 'எனக்குத் தடை விதிக்கவில்லை' என்று  இந்திய விளையாட்டு ஆணையம் சொல்கிறது. அவ்வாறு எனக்கு தடை விதிக்கவில்லை என்றால், என் தேசத்துக்காக நான் ஏன் ஓடக் கூடாது? இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளை எண்ணும்போது மிகவும் அதிருப்தி அளிக்கிறது. ஒரு விளையாட்டு வீரருக்கு ஊக்குவிப்பும், மற்றொரு விளையாட்டு வீரருக்குத் தடைவிதிப்பும்தான் இந்த நாட்டின் நீதியா? வீளையாட்டு வீரர்களுக்காக Run with Rio  போன்றவற்றைச் செயல்படுத்தி வருகிறீர்கள். உங்களிடம் கேட்கிறேன்... என்னுடைய போராட்டத்துக்கான நீதியைக் காப்பற்றுங்கள். இந்தச் சகோதரியை ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று மோடிக்கு சாந்தி கடிதம்  எழுதியுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் பாலின விதிகளை எதிர்த்துப் போராடிவரும் கோபிசங்கர், ''ஒடிசாவைச் சேர்ந்த தடகள வீராங்கனையான டூட்டி சந்துக்கு டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாகக் கூறி, அவரைத் தகுதி நீக்கம் செய்தது இந்திய தடகள சம்மேளனம். தடகளப் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘ஒருவரை ஆண் என்றும், பெண் என்றும் எவ்வாறு நிர்ணயம் செய்கிறீர்கள்? ஹார்மோன்களை அடிப்படையாகவைத்து மட்டும் பாலினத்தை நிர்ணயம் செய்வது முற்றிலும் அறிவியல் பூர்வமற்றது. பெண் தன்மையை உறுதி செய்வதற்காகத் தற்போதுள்ள விதிமுறைகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது. எனவே, சர்வதேச தடகள விளையாட்டுச் சம்மேளனம், பாலினப் பரிசோதனை முறை மற்றும் விதிமுறைகள் பற்றி 2 ஆண்டுகளுக்குள் திருப்தி அளிக்கும் வகையில் பதில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில், பாலினப் பரிசோதனை நடைமுறை ஒட்டுமொத்தமாக நீக்கப்படும்’ என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில், ஓர் ஆண், தான் ஓர் ஆண்தான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. ஆனால், பெண்கள் மட்டும் தங்களைப் பெண் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த விதிமுறையால் சர்வதேச அளவில் இதுவரையில் 75 வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். டூட்டி சந்து விவகாரத்துக்குப் பிறகு சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தின் புதிய உத்தரவு மூலம் விளையாட்டுத் துறையில் பாலினச் சமத்துவம் நிலை நாட்டப்பட்டுள்ளது. டூட்டி சந்துக்கு 2 ஆண்டுகளுக்குள் நீதி கிடைத்துள்ளது. அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தடை விலகிவிட்டது. கடந்த 2006-ம் ஆண்டு இதே விதியின் அடிப்படையில்தான் சாந்தி செளந்திரராஜனிடம் பதக்கங்கள் பறிக்கப்பட்டதோடு, போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. அவருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லையே'' என்றார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட தகவல்கள் குளறுபடியா?

சாந்தி, டூட்டி சந்த் இருவருக்குமே ஒரே பிரச்னைதான். இதில், ஒருவருக்கு நீதி கிடைத்துள்ளது. மற்றொருவருக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை சாந்திக்கு பாலினச் சோதனை ரிப்போர்ட்கூட கொடுக்கப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தேசிய விளையாட்டு ஆணையம், மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகிய அமைப்புகளிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சாந்திக்கு ஒரு பதிலும்... சாந்தி சார்பாக மற்றொருவர் கேட்ட கேள்விக்கு வேறொரு பதிலும் வந்துள்ளது.


தகவல் உரிமைச் சட்டத்தில் சாந்தி கேட்ட கேள்விக்கு வந்துள்ள பதில்!

1. பாலினச் பரிசோதனை அறிக்கை எனக்கு வழங்க வேண்டும்?
உங்கள் அடையாளத்தை நிரூபித்துவிட்டு, இந்திய தடகள சங்கத்திடம் இருந்து அறிக்கையை வாங்கிக்கொள்ளுங்கள்.  
2. என்னைப் பாலினச் பரிசோதனை செய்த அறிக்கையை நீங்கள் எப்படி நியாமான ரிபோர்ட் என்று நம்புகிறீர்கள். அதற்குப் பதில் கொடுங்கள்? எதைவைத்து, செல்லும்... செல்லுபடியாகாது என்ற முடிவுக்கு வந்தீர்கள்?  
அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தம் இல்லை.  
3. பாலினப் பரிசோதனையில் தோல்வி அடையும் வீராங்கனைகள் தேசிய அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்று தடை இருக்கிறதா? அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா... அந்த ஆணையைக் கொடுங்கள்?
அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்மபந்தம் இல்லை.
4. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதா?
இந்திய ஊக்க மருந்து தடுப்புக் குழுவின் விசாரணைக்கு நீங்கள் வராததன் காரணமாக அதைப் பற்றி நாங்கள் மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியவில்லை.

இந்தக் கேள்விகளை சாந்தி சார்பாக மற்றொருவர் கேட்டபோது சில கேள்விகளுக்கு பதில்கள் மாறியுள்ளன. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 'தடை விதிக்கவில்லை' என்று பதில் அளித்துள்ளனர். ஆனால் சாந்தியின் கேள்விக்கோ, 'இந்திய ஊக்க மருந்து தடுப்புக் குழுவின் விசாரணைக்கு நீங்கள் வராததன் காரணமாக அதைப் பற்றி நாங்கள் மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியவில்லை' என்று கூறியுள்ளனர். இந்தப் பதிலுக்கு சாந்தி  தரப்பில், ''அதுபோன்ற அழைப்பு தமக்கு வரவில்லை என்றும், விசாரணையும் நடைபெறவில்லை'' என்றும் கூறுகின்றனர்.

சாந்திக்கு தடை செய்யப்பட்ட விவகாரத்தில், ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தை ஆய்வுக்கு உட்படுத்தினால் மட்டுமே ஓர் உண்மையான வீரரின் அடையாளம் வரலாற்றில் பதிவாகும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

- கே.புவனேஸ்வரி