Published:Updated:

ஆளுங்கட்சிக்கு செக் வைத்த ஆப்ரேஷன் ''எஸ்''

ஆளுங்கட்சிக்கு செக் வைத்த ஆப்ரேஷன் ''எஸ்''
ஆளுங்கட்சிக்கு செக் வைத்த ஆப்ரேஷன் ''எஸ்''

ஆளுங்கட்சிக்கு செக் வைத்த ஆப்ரேஷன் ''எஸ்''

ஆளுங்கட்சிக்கு செக் வைத்த ஆப்ரேஷன் ''எஸ்''

துதான் மு.க. ஸ்டாலின் வைத்த பெயர். கடந்த ஆகஸ்டு 17-ம் தேதியன்று வீட்டு வசதி வாரிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் போது அவையில் அமளி ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் தனபால், தி.மு.கழக எம்.எல்.ஏ-கள் 79 பேரை, ஒருவாரம் சஸ்பெண்டு செய்தார். இந்த நிலையில், மறுநாள் சட்டசபைக்கு வந்த சஸ்பெண்டு எம்.எல்.ஏ-கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மூன்றாவது நாளான 19ம் தேதி...

தி.மு.கழக எம்.எல்.ஏ-கள் மீண்டும் சட்டபைக்கு வந்தனர். அவர்களை உள்ளே விடவில்லை. இதுமாதிரி நடக்கும் என்றே எதிர்பார்த்து, அதிரடியில் இறங்கினர். இந்த அதிரடியின் காரணகர்த்தா..மு.க.ஸ்டாலின். சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில எம்.எல்.ஏ-களை அழைத்து ஆப்ரேஷன் 'எஸ்' பற்றி சொல்லியிருக்கிறார். அதாவது 'எஸ்' என்றால், செகரட்டிரியேட் என்று அர்த்தம். இதன்படி, செகரட்டிரியேட்டில் போட்டி சட்டமன்ற கூட்டம் நடத்துவது என்பது அவர்களின் ரகசிய பிளான். தை செயல்படுத்தும் வகையில், சுமார் 4 கார்களின் டிக்கிகளில் தலா 20 பிளாஸ்டிக் சேர்களை(கைப்பிடி இல்லாதவை) தலைமைச்செயலகம் உள்ளே கொண்டுவந்தனர். எம்.எல்.ஏ-களின் கார் என்பதால், சோதனை அதிகமில்லை.

இதேபோல், பேட்டரியில் இணைக்கப்பட்ட மைக்குகள் சிலவற்றை துணிப் பைகளில் மறைத்து தலைமைச் செயலகத்தின் உள்ளே கொண்டுவந்தனர் சென்னை எம்.எல்.ஏ-கள். இப்படியாக, சுமார் 80 சேர்கள் உள்ளே வந்ததும், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் எதிரில் சேர் போட்டு அமர்ந்து போட்டி சட்டமன்றக் கூட்டத்தை விறுவிறுவென ஆரம்பித்தனர். இந்தக் கூட்டம் ஒரு மணி நேரம் நடந்தது. இதை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் அதிர்ந்தனர். மீடியாக்கள் கூடி நின்றதால், போட்டிக்கூட்டத்தை கலைக்க முடியாமல் தவித்தனர். தலைமைச் செயலக வளாகத்தில் அனுமதியின்றி இந்தக் கூட்டம் கூட்டியதற்காக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேநேரம், தலைமைச் செயலகத்தை உள்ளடக்கிய பூக்கடை பகுதியின் துணை போலீஸ் கமிஷனர் சக்திவேல் சரிவர கடமையை செய்யவில்லை என்று சொல்லி, உடனடியாக அவரை ராமநாதபுர கடலோர காவல் படை பிரிவுக்கு மாற்றிவிட்டனர்.

இதுபற்றி தி.மு.கழக எம்.எல்.ஏ ஒருவர் கூறும்போது, 'எப்படியோ நாங்கள் போட்ட திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டோம். ஆளுங்கட்சியை திக்குமுக்காட வைத்துவிட்டோம்' என்றார்.

- ஆர்.பி.

அடுத்த கட்டுரைக்கு