Published:Updated:

ஒலிம்பிக்கில் இந்தியா - டேட்டா ரீவைண்ட்

ஒலிம்பிக்கில் இந்தியா - டேட்டா ரீவைண்ட்
ஒலிம்பிக்கில் இந்தியா - டேட்டா ரீவைண்ட்

ஒலிம்பிக்கில் இந்தியா - டேட்டா ரீவைண்ட்

31-வது சர்வதேச ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நிறைவடைந்தது. ஒலிம்பிக் களத்தில் இந்தியா பதித்த தடத்தை பற்றிய ரீவைண்ட் இங்கே.

தனி ஒருவராக மைக்கல் பெல்ப்ஸ் வென்ற பதக்கங்கள் 28. ஒரு நாடாக இந்தியா பெற்ற பதக்கங்களும் 28.

1928-1980 முதல் ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி அசைக்க முடியாத பலமாக இருந்துள்ளது. 8 முறை தங்கப்பதக்கமும், ஒருமுறை வெள்ளியும், 2 வெண்கலப் பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது. 

5 இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றுள்ளனர். முதல் பதக்கம் வென்ற பெருமை பளுதூக்குதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியைச் சேரும்.

தடகள போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற ஒரே வீரர் நார்மன் பிரிட்சர்ட். 1900-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பெற்றோருக்கு மகனாக இருந்தாலும், இந்தியாவில் வளர்ந்து பணி புரிந்தவர்.

ஒலிம்பிக்கில் இந்தியா - டேட்டா ரீவைண்ட்

சுதந்திர இந்தியாவில் பதக்கம் வென்ற முதல் தனி நபர் கஷாபா ஜாதவ். 1952 ஹெல்சின்க்கி (ஃபின்லாந்து) ஒலிம்பிக்கின் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்றார். இந்தியா வென்ற வெண்கலப் பதக்கங்கள் மொத்தம் 9.

ஒலிம்பிக்கில் இந்தியா - டேட்டா ரீவைண்ட்
ஒலிம்பிக்கில் இந்தியா - டேட்டா ரீவைண்ட்

இது வரை இல்லாத அளவு ரியோ ஒலிம்பிக்கில் அதிகபட்சமாக 117 இந்தியர்கள் பங்கேற்றனர். அதில் ஆண்கள் 63 பேர். பெண்கள் 54 பேர்.

மொத்தமாக இந்தியா இது வரை 22 விளையாட்டுகளில் மட்டுமே பங்கேற்றுள்ளது.

இந்தியா பங்கேற்ற 24 ஒலிம்பிக்குகளில், பதக்கமின்றி நாடு திரும்பிய ஒலிம்பிக்குகள் 6. (1920,1924,1976,1984,1988,1992)


1932-ல் சீனா முதன்முதலில் ஒலிம்பிக்கில் பங்கேற்றது. ஆனால் அந்த ஒலிம்பிக்கில் சீனா பதக்கம் வெல்லவில்லை. இந்தியா ஒரு தங்கம் வென்றிருந்தது. 1984-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் தான் சீனாவால் முதல் பதக்கத்தை வெல்ல முடிந்தது. கலந்து கொண்ட 19 போட்டிகளில் 15 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்களுடன் எதிர்பாராத என்ட்ரி கொடுத்தது சீனா. அன்று தொடங்கி இன்று வரை டாப் 3-ல் சீனாவின் ஆதிக்கம் தான். ஆனால் 1900-ம் ஆண்டு, பதக்க கணக்கை தொடங்கிய இந்தியாவால் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக போராடியும் 28 பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்துள்ளது. 

ஒலிம்பிக்கில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகள் பெற்ற ரேங்கிங்கை கிராபில் காணலாம். 

1900-ம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் 17-வது இடம் பிடித்தது இந்தியா. அதன் பின் இன்று வரை சரிவில் இருந்து இந்தியா மீளவில்லை ( இரண்டாவது கிராபில் காணலாம்). 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 3, லண்டன் 2012 ஒலிம்பிக்கில் 6 என நல்ல முன்னேற்றங்கள் கண்ணுக்கு தெரிந்த போதும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரியோ ஒலிம்பிக்கில் வளர்ச்சி தொடரவில்லை. முதல் ஒலிம்பிக்கிலேயே தங்கம் வென்ற கொசோவோ, முதல் முறை பதக்கம், அதுவும் தங்கம் வென்ற ஃபிஜி ஆகிய நாடுகளை விட இந்திய பின் தங்கியுள்ளது.  இனி வரும் காலங்களில் சுதாரிப்பு தேவை.
ரெ.சு.வெங்கடேஷ்
வடிவமைப்பு: ஆரிஃப் முகம்மது
அடுத்த கட்டுரைக்கு