சின்ன விஷயங்களே சிதைக்கும்!

கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்குவதாக ஆளும்

கட்சியினர் டோக்கன் வழங்கினர். டோக்கனை ரேஷன் கடையில் கொடுத்து அரிசி வாங்கியபோது, ''இம்மாத கோட்டாவில் 10 கிலோ முடிந்தது. மீதி 10 கிலோவை காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்!'' என்று கடைக்காரர் சொன்ன போதுதான் பொதுமக்களுக்கு உறைத்தது. மழைக்காக நமக்கு 10 கிலோ அரிசி கூடுதலாகக் கிடைக்கும் என்று நினைத்தவர்களை ஏமாற்றி.... ஏற்கெனவே வழங்கப்பட வேண்டிய அரிசியில் இருந்து கழித்தது மழை நேரத்தில் மக்களுக்கு ஏற்படுத்திய சோகம் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற அடிப்படையில் பார்த்தால் இது 10 ரூபாய் சலுகை. இதைக் கொடுப்பதற்கு இத்தனைக் களே பரங்கள் தேவையா என்ன? 10 ரூபாய் நிவாரணம் என்பது மக்களை அவமானப்படுத்தும் காரியம் அல்லவா? இதை ஆளும் கட்சியினர் துணிச்சலாகச் செய்வது எப்படி? கடலூரில் நடப்பது யாருக்கும் தெரியாது என்ற எண்ணமா?

இந்தச் செய்தி வெளியான நாளிதழின் அருகில் இன்னொரு செய்தி யும் வெளி வந்துள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் தே.மு.தி.க. பிரமுகர் ஒருவருக்கும் ஆளும் கட்சி ஆள் ஒருவருக்கும் மோதல். அவர் குடியிருந்த அபார்ட்மென்ட்டில் நிறுத்தி இருந்த அனைத்து வாகனங்களையும், சாலையில் நின்ற ஆட்டோக்களையும்கூட அடித்து நொறுக்கி இருக்கிறார் அந்த ஆளும் கட்சிப் பிரமுகர். காவல் துறை நடவடிக்கை இல்லை. மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கிய ஆளும் கட்சி அம்பத்தூர் கவுன்சிலரின் மகனுக்கு இன்று வரை என்ன தண்டனை கொடுக்கப்பட்டது?

அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் சின்னப் பிரச்னைகள்தானே என நினைக்காதீர்கள். இதுபோன்ற துரும்பான பிரச்னைகள்தான் ஆளும் கட்சியின் அச்சாணியையே முறிக்கும்!

- அ.யாழினி பர்வதம், சென்னை-78