Published:Updated:

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்காக.. காத்திருக்கும் கருணாநிதி!

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்காக.. காத்திருக்கும் கருணாநிதி!

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்காக.. காத்திருக்கும் கருணாநிதி!

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்காக.. காத்திருக்கும் கருணாநிதி!

Published:Updated:
##~##

ழுகார் புயல்வேக வருகையைப் பார்த்​ததும் அவரது அவசரம் புரிந்தது!

 ''சொல்லும் தகவல்களை மொத்த​மாக அள்ளும்! காமராஜர் அரங்கில் கருணாநிதி புகழ் பாடும் அரங்கம் நடக்கிறது. தேர்தல் முடிவுக்குப் பிறகு நடக்கும் முதல் விழா என்பதால் எதிர்பார்ப்பு அதிகம்...'' என்றார் கழுகார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''உமக்கு முந்தி எமது நிருபர் அங்கு போய்​விட்டார்!'' என்றதும் சிரித்தபடி செய்தியைக் கொட்ட ஆரம்பித்தார்.

''தயாநிதி மாறனை மையப்படுத்தி டெல்லியில் சுழல் ஆரம்பித்து இருப்பது கருணாநிதியை மேலும் வருத்தப்பட வைக்கிறது. 'தயாநிதி ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று ஜெயலலிதா சொன்னதும், கருணாநிதி கொந்தளித்தாராம். 'இந்த அம்மாமேல இன்னைக்கும் பெங்களூருல வழக்கு நடக்குது. ராஜினாமா பண்ணிட்டாங்களா?’ என்று கேட்டாராம். அதையே தலைவர், அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று சுற்றி இருந்த சிலர் ஆலோசனை சொன்னார்களாம். விரக்தி அடைந்த மனதுடன், 'அதெல்லாம் வேண்டாம்யா’ என்றாராம். அதன்பிறகு முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம்

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்காக.. காத்திருக்கும் கருணாநிதி!

மற்றும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பெயரில் அறிக்கைவிடச் சம்மதித்​தாராம்...''

''துரைமுருகன், பொன்முடி ஆகியோர் ஆளுக்கு முந்தி அறிக்கை விடத் தயாராக இருப்பார்களே?''

''நிலைமைதான் சரியில்லையே... தங்கள் பெயரில் அறிக்கை வந்தால் ஜெ. கோபம் அதிகமாகும் என்று யோசித்திருப்பார்கள். அதனால் பதுங்கிவிட்டார்கள்'' என்று சிரித்தார் கழுகார்.

''கனிமொழிக்கு  பெயில் கிடைக்குமா?''

''கருணாநிதிக்கு இப்பவும் நம்பிக்கை கொடுத்து இருக்கிறார்கள். 'கண்டிஷன் பெயில் கிடைத்துவிடும்’ என்று டெல்லியில் இருந்து டி.ஆர்.பாலு தகவல் தந்தாராம். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமதுபடேல், குலாம் நபி ஆசாத் ஆகியோர்கூட இதற்கான முயற்சிகளில் இறங்கி  இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள் தி.மு.க-வில்! 'வழக்கு முடியும் காலம் வரை டெல்லியில் தங்கி இருங்கள் என்று கூடச் சொல்லட்டும். ஆளை வெளியே விட்டால் போதும்’ என்று நினைக்கிறது இந்த தரப்பு. ஆனால் டெல்லியில் என் சோர்ஸ் வேறுமாதிரிச் சொல்கிறார்...''

''என்னவாம்?''

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்காக.. காத்திருக்கும் கருணாநிதி!

''டெல்லி உயர்நீதிமன்றத்தில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை பெயில் கேட்ட அனைவருடைய மனுவும் தள்ளுபடி ஆகி உள்ளது.  கனிமொழிக்கு மட்டும் பெயில் கொடுத்தால் அதை வைத்தே மற்றவர்களும் வெளியில் வரத் துடிப்பார்கள். பிறகு வழக்கு விசாரணை

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்காக.. காத்திருக்கும் கருணாநிதி!

தொடர்பாக சி.பி.ஐ. முன்னேற முடியாமல் போகும். ஜூலை மாதம் கடைசியில் இந்த வழக்கின் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் ஆக உள்ளது. அதுவரைக்கும் யாரையும் விடுவிக்கமாட்டார்கள் என்பதே என் சோர்ஸின் தகவல். ஜூலை முதல் வாரத்தில் இந்த வழக்கு தொடர்பான முழு அறிக்கையை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. அந்த சமயம் பலரும் வெளியில் வந்துவிட்டால், உச்சநீதிமன்றம் புதுசாக ஒரு குட்டுவைக்கும் என்று சி.பி.ஐ. கருதுகிறதாம்.''

''சிக்கலுக்கு மேல் சிக்கலாக இருக்கிறதே?''

''இதற்கு மத்தியில், ஆ.ராசா ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப் போகிறாராம். அவருக்கும் பிரதமருக்கும் நடந்த ஆலோசனைகளை மையமாக வைத்துப் பரிமாறப்பட்ட கடிதங்களை கோர்ட்டில் கொட்டி, அவரே வாதாடவும் போகிறாராம். காங்கிரஸ் வட்டாரம் இப்போதுதான் லேசாக ஜெர்க் ஆக ஆரம்பித்துள்ளது!'' என்ற கழுகாரை வேறு சப்ஜெக்ட்க்கு மாற்றினோம்!

''கொத்துக்கொத்தாக அதிகாரிகளை முதல்வர் ஜெயலலிதா மாற்றி வருகிறாரே?''

''வழக்கமாக அரசாங்கம் மாறும்போது நடக்கிற சம்பிரதாயம்தான். ஆனால், தி.மு.க. ஆட்சியில் நடந்த முக்கியத் துறைகளின் ஊழல்களை ஜெயலலிதா விமர்சித்தபோது, அந்தத் துறைகளின் தலைவர்களாக செயல்பட்ட சிலர் இந்த ஆட்சியிலும் முக்கியப்பதவிகளில் வந்து உட்கார்ந்து விட்டார்கள் என்பதுதான் ஆச்சர்யம். உதாரணத்துக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சராக நேரு இருந்தபோது, உதிரிபாகங்கள்

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்காக.. காத்திருக்கும் கருணாநிதி!

வாங்கியது, பஸ்களுக்கான சேஸிஸ் கட்டியது... என்று பல்வேறு  வகையில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக ஜெயலலிதா குற்றம்சாட்டினார். அந்தக் காலகட்டத்தில் நேருவின் நிழலாக போக்குவரத்துத்துறை செயலராக இருந்தவர் தேபேந்திரநாத் சாரங்கி. அவர்தான் இப்போது தலைமைச் செயலாளர். சி.ஐ.டி. காலனியின் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் முக்கியமான ஒருவர், 'சாரங்கி என் ஆத்ம நண்பர்' என்று தி.நகர்  ஏரியாவில் மாலை நேரங்களில் சொல்லி வருவதையும் அ.தி.மு.க-வினர் கவனித்து அப்செட் ஆகியிருக்கிறார்கள். அப்படியிருக்க, சாரங்கி​யிடம் சென்சிடிவ் ஆன லஞ்ச ஒழிப்புத் துறையின் கமிஷனர் பதவியை கூடுதல் பொறுப்பாகக் கொடுத்திருப்பதால்... நண்பர்களிடம் அவருக்கு ரொம்ப கவனம் தேவை என்று நினைக்கிறது ஆளும் கட்சி வட்டாரம்!''

''ஓ!''

''இதேபோல், போக்குவரத்துத்துறை கமிஷனராக இருந்தவர் ராஜாராமன். இவர் தற்போது செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர். மின்வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார். அந்த காலகட்டத்தில் மின்வாரிய சேர்மன் பதவியில் இருந்தபடி, ஆற்காடு வீராசாமி நம்பிக்கையைப் பெற்றிருந்தார் ஹன்ஸ் ராஜ் வர்மா. அவரே இந்த ஆட்சியிலும் மின்வாரிய சேர்மன் என்பதில் சீனியர் அ.தி.மு.க. தலைகளும்கூட திகைத்துதான் போயிருக்கின்றன!''

''இந்த பதவியில் ஸ்வரண்சிங் நியமிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் படித்தேனே?''

''நீர் படித்தது வாஸ்தவமே! சிலநாட்கள் பதவியிலும் இருந்தார். மின்வாரிய ஊழியர்களை அழைத்து எந்தெந்த நேரத்தில் மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் பவர் கட் செய்யலாம் என்று சர்வே செய்திருக்கிறார். டி.வி-யில் சீரியல் வரும் நேரத்தில் மட்டும் கட்டாயம் 'கட்' வேண்டாம் என்று பெரும்பாலான ஊழியர்கள் சொன்னது கேட்டு வியந்தாராம். இருந்தாலும், அதில் உள்ள நிதர்சனம் உணர்ந்து அதற்கேற்ப அவர் உத்தரவாகப் போட பேனா தேடுவதற்குள், மாறுதல் ஆர்டர் வந்துவிட்டது. ஹன்ஸ்ராஜ் வர்மாவை புதியதாக நியமித்து உத்தரவுகள் வர, நொந்துபோய் கிளம்பினாராம் ஸ்வரண்சிங்!''

''சரி...ஹன்ஸ் ராஜ் வர்மாவை நியமித்தது எந்த சக்தி?''

''எனர்ஜி துறையில் அவர் ஒரு எக்ஸ்பர்ட். மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், தனது அணுகுமுறைக்கு சரியானவர் என்று வர்மாவைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார்கள். இன்றைய கரன்ட் கட் பிரச்னையை தனக்கே உரித்தான ஸ்டைலில் சரிசெய்யக்​கூடியவர் என்கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள்.''  

''உள்துறை செயலாளர் ஷீலா ராணி சுங்கத்..?''

''போலீஸ் பாலிடிக்ஸை கரைத்துக் குடித்தவர். ஏற்கெனவே அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இதே பதவி​யில் இருந்தவர்தான். அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவின் அபிமானத்தை பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவருக்கு  ஐ.பி.எஸ். நியமனம் தொடர்பாக சலுகை காட்டும்படி சொல்ல... இவர் மறுத்தார். உடனே அங்கிருந்து தூக்கி அடிக்கப்பட்டார். தற்போது கூட, போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை முக்கியப் பதவிக்கு  சிபாரிசு செய்து நியமித்துவிட்டார்கள். அவரைப் பற்றி கேள்விப்பட்ட ஷீலா ராணி சுங்கத், நேராக முதல்வரிடம் போய் 'அவர் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்' என்று சொல்லி ஃபைலில் கையெழுத்து வாங்கிவந்து அறிவித்துவிட்டாராம். பாவம், அந்த உயர் அதிகாரி டம்மி பதவிக்கு இடம் மாற்றப்பட்டார்.''

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்காக.. காத்திருக்கும் கருணாநிதி!

''கொங்கு மண்டலத்தை சேர்ந்த எட்டு பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் ஜெயலலிதா. அதேபோல், அந்த சமூகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கும் முக்கியப் பதவிகளைக்  கொடுத்தாரா?''

''எங்கே... கடந்த ஆட்சியில் இருந்த சில அமைச்சர்கள் வெறுப்பாகப் பார்த்த ஒருவரை, நல்ல பதவியில் முதல்வர் போட நினைத்தபோது, 'இவர் கொ.மு.க-வுடன் தொடர்பில் உள்ளவர்' என்று யாரோ கொளுத்திப் போட்டார்களாம். சேலத்தில் டம்மியான பதவிக்கு மாற்றப்பட்டாராம். உண்மையில், சாதி அமைப்புகள் அரசியலுக்கு வருவதை வெளிப்படையாக எதிர்ப்பவராம் இவர். இவரைப் போலவே, கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஐந்து உயர் அதிகாரிகள் அரசியல் காரணங்களுக்காகவே டம்மி ஆக்கப்பட்டார்களாம். இன்னொரு பக்கம், சென்னை காவல்துறை வட்டாரத்தில், குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த அதிகாரிகளே பெருமளவில் 'கீ போஸ்ட்'களில் அமர்த்தப்பட்டதை மற்ற சமூகத்து அதிகாரிகள் ஏக்கமாகப் பார்க்கிறார்கள்.''

''மாற்றம் என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதுதானே!''

''ஜெயலலிதாவைப் பொறுத்தவரையிலோ அது நொடிக்கு நொடிகூட மாறலாம்!'' என்று புன்னகைத்தார் கழுகார். பிறகு, ''ரஜினியின் உடல்நிலை தேறிவருவதாக பலரும் சொல்கிறார்கள். பல நாட்டு மருத்துவர்கள் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையை நோக்கி குவிய ஆரம்பித்து இருக்கிறார்கள். முழுமையான தெளிவு பிறக்க இன்னும் இரண்டு வாரங்கள் ஆகலாம்!'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்!

படங்கள்: சு.குமரேசன்

மிஸ்டர் கழுகு: கனிமொழிக்காக.. காத்திருக்கும் கருணாநிதி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism