Published:Updated:

வீணாகப் போகலாமா எம்.பி. நிதி!

வீணாகப் போகலாமா எம்.பி. நிதி!

வீணாகப் போகலாமா எம்.பி. நிதி!

வீணாகப் போகலாமா எம்.பி. நிதி!

Published:Updated:
வீணாகப் போகலாமா எம்.பி. நிதி!

ற்போது எம்.பி-க்களின் தொகுதி மேம்​பாட்டு நிதியாக ஒவ்வொருவருக்கும்

வீணாகப் போகலாமா எம்.பி. நிதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2 கோடி வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் இதுவரையிலான ஆண்டுகளில்... இந்ததொகையில் பெருமளவு பயன்படுத்தப்படவே இல்லை என்று ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கிறது. பயன்படுத்தப்​பட்ட தொகையும் நல்ல முறையில் மக்களுக்கு உபயோகமாக இருக்கிறதா என்பது குறித்தும் தெளிவான ஆய்வுகள் இல்லை. இந்தப் பணமே உபயோகிக்கப்படாமல் இருக்கும் சூழலில், 'தொகுதி மேம்பாட்டு நிதியை 5 கோடியாக உயர்த்திக் கொடுக்க வேண்டும்’ என்று சில எம்.பி-க்கள் கோரிக்கை விடுப்பது கேலிக்கூத்து ஆகும்.

எம்.பி-க்களை நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளைப் பேசித் தீர்வு காண்பதற்காகவே அனுப்பி வைக்கிறோம். ஆனால், கடந்த ஆண்டு மக்களவை நடைபெற்றது மொத்தமே 72 நாட்கள்தான். அதிலும் ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆதர்ஷ் ஊழல் தொடங்கி பல்வேறு பிரச்னைகளைக் காரணமாக்கி அமளிதுமளி கிளப்பிய காரணத்தால், சுமார் 195 மணி நேரம் பாதிக்கப்பட்டது.  மீதம் இருந்த சில மணி நேரங்களில் அத்தியாவசியப் பணி மட்டுமே நடந்து முடிந்துள்ளது.

மக்கள் நலனுக்காக எம்.பி-க்கள் தனியாக சாதனைகள் எதுவும் செய்யவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், மக்களவை நடைபெறும் தினங்களில் சண்டை, சச்சரவு இல்லாமல் ஆரோக்கியமான விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை, பயனுள்ள திட்டத்துக்கு கொடுத்து, மக்கள் பயனுறும் வகையில் உதவி செய்தாலே போதும்.

வரும் காலத்திலாவது எம்.பி-க்கள் தொகுதி நிதியை முழுமையாகப் பயன்படுத்தும் சூழல் உருவாகட்டும்.

- ஜி.மனோகரன், கச்சிராபாளையம்.

வீணாகப் போகலாமா எம்.பி. நிதி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism