Published:Updated:

சோனியாவுக்கு வெளிநாட்டில் மருத்துவப் பரிசோதனை

Vikatan Correspondent
சோனியாவுக்கு வெளிநாட்டில் மருத்துவப் பரிசோதனை
சோனியாவுக்கு வெளிநாட்டில் மருத்துவப் பரிசோதனை
சோனியாவுக்கு வெளிநாட்டில் மருத்துவப் பரிசோதனை

புதுடெல்லி: காங்கிரஸ் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதற்காக வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

சோனியா காந்தி நேற்று முன்தினம் இரவில் அவர் திடீரென மீண்டும் வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்று அறிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ஜனார்தன் திவிவேதி  "சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். 4 அல்லது 5 நாளில் அவர் டெல்லி திரும்புவார்," என்றார்.

முன்னதாக, சோனியா காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு அறுவைசிகிச்சை நடந்தது. ஒரு மாதம் அவர் அங்கு தங்கி சிகிச்சை பெற்றார். பின்னர், செப்டம்பர் 8-ம் தேதி அவர் டெல்லி திரும்பினார்.

அவருக்கு என்ன நோய்? எந்தவிதமான அறுவைசிகிச்சை நடந்தது? என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.