Published:Updated:

நிபுணர் குழு அறிக்கை: முதல்வருடன் கூடங்குளம் போராட்டக்குழு இன்று பேச்சு

Vikatan Correspondent

சென்னை: கூடங்குளம் பிரச்னையில் இனியன் குழுவின் அறிக்கை தொடர்பாக, முதலவர் ஜெயலலிதாவுடன் போராட்டக்குழு இன்று பேச்சு நடத்துகிறது.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினர், முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சந்தித்துப் பேசவுள்ளனர்.

அப்போது, மாநில அரசின் நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் விவரங்கள் போராட்டக் குழுவினரிடம் தெரிவிக்கப்படும்.

அதற்கு போராட்டக் குழுவினரின் பதில்களை அரசு கேட்டறிந்து, பின்னர் கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை தொடர்பாக ஆய்வு செய்த மாநில அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று வழங்கியது குறிப்பிடத்தக்கது.