Published:Updated:

கூடங்குளம் போராட்டம்- தமிழக அரசுக்கு கருணாநிதி கேள்வி

Vikatan Correspondent
கூடங்குளம் போராட்டம்- தமிழக அரசுக்கு கருணாநிதி கேள்வி
கூடங்குளம் போராட்டம்- தமிழக அரசுக்கு கருணாநிதி கேள்வி
கூடங்குளம் போராட்டம்- தமிழக அரசுக்கு கருணாநிதி கேள்வி

சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தும் போராட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ரூ.1 கோடி செலவில் 26 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வங்கினார்.

கூடங்குளம் விவகாரம் குறித்து அவர் கூறுகையில், "கூடங்குளம் போராட்டத்தை ஆரம்ப நிலையைலேயே தடுப்பதற்கு தமிழக அரசு தவறிவிட்டது," என்றார்.

இப்பிரச்னையில் அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருவது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், இந்தப் போராட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்," என்றார் கருணாநிதி.