தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருந்தபோதே வீரபாண்டி ஆறுமுகத்தைப் பகிரங்கமாக எதிர்த்து,

பிரச்னைக்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க. எம்.எல்.ஏ-க்கள் கண்ணையன், தமிழரசு, காவேரி ஆகிய மூவரும்தான்!

வீரபாண்டி ஆறுமுகத்தைக் கண்டாலே ஆகாமல், முகத்தைத் திருப்பிக்கொண்டே போவார்கள். இப்போது ஒரு திடீர் திருப்பமாக, கடந்த 11-ம் தேதி காலை, சேலம் பொதுப் பணித் துறை கெஸ்ட் ஹவுஸில் வீரபாண்டி ஆறுமுகத்தை மேற்படி மூன்று எம்.எல்.ஏ-க்களோடு சென்று சந்தித்தார் பா.ம.க. மாநிலத் தலைவர் கோ.க.மணி.

வீரபாண்டி ஆறுமுகத்துக்கு அடிக்கடி பகிரங்க சவால்விடும் ஓமலூர் எம்.எல்.ஏ-வான தமிழரசு மற்றும் தாரமங்கலம் எம்.எல்.ஏ-வான கண்ணையனிடம் பேசியபோது, ''மேட்டூர் அணை நிரம்பி, உபரி தண்ணி

வீணாப்போகுது. அதை எப்படி உருப்படியா பாசனத்துக்குப் பயன்படுத்தலாம்னு வேளாண்மைத் துறை அமைச்சரோடு கலந்து பேசத்தான் போனோம். நாலு வருஷத்துக்குப் பிறகு இப்பத்தான் அவரோட நேருக்கு நேரா உட்கார்ந்து பேசினோம். அவரைப்பத்தி நாங்க ஏதேதோ பேசி இருக்கோம். ஆனா, எதையும் மனசில் வெச்சுக்காம சிரிச்ச முகத்தோட வரவேற்றுப் பேசினார். மத்தபடி, அரசியல் எதுவும் நாங்க பேசலை...'' என்றனர் உஷாராக.

வீரபாண்டி ஆறுமுகம் என்ன சொல்கிறார்? ''திடீர்னு வந்தாங்க... பார்த்தாங்க. மேட்டூர் பிரச்னைபத்திப் பேசினாங்க. இன்றைய எதிரி, நாளைய நண்பன் இல்லையா... மத்தபடி யார்கூட கூட்டணின்னு கட்சித் தலைமைதான் முடிவு எடுக்கும்!'' என்றவர், ''கலைஞர் வீடு வழங்கும்

விழாவுக்குப் போனேன். என்கூடவே பா.ம.க. எம்.எல்.ஏ-க்களும் வந்தாங்க. நாங்க ஒண்ணா இருப்பதை எல்லாரும் ஆச்சர்யமா பார்த்தாங்க...'' என்றும் சொன்னார்.

இவர்கள் இப்படிச் சொன்னாலும், இரண்டு கட்சிகளுக்கும் தொடர்புள்ள நடுநிலையாளர்களோ, ''டாக்டர் ராமதாஸ் கூட்டணி சம்பந்தமா தி.மு.க. தலைமையை அணுகினப்ப, 'நாம என்னதான் கூட்டணி வெச்சாலும், சேலத்தில் உங்க கட்சிக்காரங்க தி.மு.க-வை எப்படி ஒழிக்கணும்னுதானே பிளான் பண்றாங்க. முதல்ல கட்சியில் இருக்கிறவங்களை சரிபண்ணுங்க. பிறகு மத்ததைப் பேசலாம்’னு சொல்லி இருக்காங்க. அப்புறம்தான் ராமதாஸ், மாநிலத் தலைவர் கோ.க.மணியிடம் மூணு எம்.எல்.ஏ-க்களையும் நீங்களே கூட்டிட்டுப் போய் வீரபாண்டியாரை சந்திக்கவைங்க. வீரபாண்டியார் கோபமாப் பேசினாக்கூட, பொறுமையா பேசிட்டு வாங்க...’ன்னாராம். அதனால்தான் இந்தச் சந்திப்பு. கூடிய சீக்கிரமே தி.மு.க-வுடன் கூட்டணி பேசி முடிச்சுடுவார் ராம தாஸ். அதில் எந்த சந்தேகமும் இல்லை!'' என்றனர் ஆணித்தரமாக.

அரசியலில் எல்லாமே சகஜம்யா!

படங்கள்: எம்.விஜயகுமார்