Published:Updated:

கூடங்குளம்: தமிழக அமைச்சரவை இன்று முக்கிய ஆலோசனை

கூடங்குளம்: தமிழக அமைச்சரவை இன்று முக்கிய ஆலோசனை
கூடங்குளம்: தமிழக அமைச்சரவை இன்று முக்கிய ஆலோசனை
கூடங்குளம்: தமிழக அமைச்சரவை இன்று முக்கிய ஆலோசனை

சென்னை: கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம், மின் தடை உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடக்கிறது.

சென்னை - தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அரசின் புதிய திட்டங்கள், இந்த ஆண்டுக்கான பட்ஜெட், அரசின் கொள்கை ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, அது தொடர்பான முக்கிய முடிவுகள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், தமிழகத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ள மின் தட்டுப்பாடு பிரச்னை தொடர்பாக அமைச்சரவையில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

முன்னதாக, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள், உள்ளூர் மக்களின் அச்ச உணர்வு ஆகியவை பற்றி ஆய்வு செய்து அரசுக்கு விரைவாக அறிக்கை அளிப்பதற்காக மாநில அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, கடந்த மாதம் 28-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

அதற்கு மறுநாளே, கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தங்களது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.