Published:Updated:

சங்கரன்கோவிலில் மார்ச் 14-ல் ஜெயலலிதா பிரசாரம்

சங்கரன்கோவிலில் மார்ச் 14-ல் ஜெயலலிதா பிரசாரம்
சங்கரன்கோவிலில் மார்ச் 14-ல் ஜெயலலிதா பிரசாரம்
சங்கரன்கோவிலில் மார்ச் 14-ல் ஜெயலலிதா பிரசாரம்

சென்னை: சங்கரன்கோவில் தொகுதியில், தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இம்மாதம் 14-ம் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார்.

இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மார்ச் 18-ல் நடைபெற உள்ள சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மார்ச் 14-ம் தேதி, அதிமுக வேட்பாளர் எஸ்.முத்துச்செல்வியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

திருவேங்கடம் பஜார் வழி: புதுப்பட்டி, வெள்ளாகுளம் விலக்கு, குறிஞ்சாகுளம். குருவிகுளம் வழி: வாகை குளம்; நாலுவாசன்கோட்டை வழி: அழகனேரி, செவல்குளம் விலக்கு, சிதம்பராபுரம் விலக்கு;

மலையான்குளம் விலக்கு வழி: ராமநாதபுரம் விலக்கு, பாட்டத்தூர், சங்கரன் கோவில் புதிய பஸ் நிலைய விலக்கு, தெற்கு ரத வீதி சந்திப்பு; கோமதி அம்மன் சன்னதி தெரு சந்திப்பு வழி: திருநெல்வேலி ரோடு வடக்கு பெட்ரோல் பங்க், பெரிய கோவிலான் குளம் விலக்கு.

சண்முகநல்லூர் விலக்கு வழி: ராஜீவ் நகர்; குருக்கள்பட்டி வழி: பிஎம்டி கல்லூரி, திருமலாபுரம் விலக்கு; பனவடலி சத்திரம் பஸ் ஸ்டாப் வழி: மருக்காலங்குளம் விலக்கு, மேசியாபுரம் விலக்கு; வன்னிகோனேந்தல் வழி: அடைக்கலாபுரம் விலக்கு; தேவர்குளம் மெயின் ரோடு சர்ச் ஆகிய 10 இடங்களில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொள்வார் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.