Published:Updated:

முதல்வருக்காக ஒன்றரை கி.மீ தூரம் முட்டிபோட்டு நடந்து வேண்டுதல்!

 முதல்வருக்காக  ஒன்றரை கி.மீ தூரம் முட்டிபோட்டு நடந்து வேண்டுதல்!
முதல்வருக்காக ஒன்றரை கி.மீ தூரம் முட்டிபோட்டு நடந்து வேண்டுதல்!
 முதல்வருக்காக  ஒன்றரை கி.மீ தூரம் முட்டிபோட்டு நடந்து வேண்டுதல்!

ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி, நெல்லை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளரான மாடசாமி என்பவர் வள்ளியூர் முருகன் கோயிலில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு முட்டி போட்டு நடந்து வேண்டுதல் செய்தார். 

உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 20 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர், குணமடைய வேண்டி அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் பல்வேறு வகையில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி, நெல்லை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை இணைச் செயலாளரான மாடசாமி என்பவர் வள்ளியூர் முருகன் கோயிலில் உள்ள கிரிவலப் பாதையில், முட்டி போட்டு நடந்தார். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு முட்டி போட்டு நடந்து வேண்டுதல் செய்தார்.

- ஆண்டனிராஜ்