Published:Updated:

இடைக்கால முதல்வர் தேவையில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

இடைக்கால முதல்வர் தேவையில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
இடைக்கால முதல்வர் தேவையில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
இடைக்கால முதல்வர் தேவையில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்துக்கு இடைக்கால முதல்வர் தேவையில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே,  கடந்த 5-ம் தேதி, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர், மயக்கவியல் தீவிர சிகிச்சை நிபுணர் மற்றும் இதய சிகிச்சை நிபுணர் ஆகியோர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழுவினர் அப்போலோ வந்து முதல்வருக்கான சிகிச்சையை மேற்பார்வையிட்டனர். அவர்கள் வழங்கிய அறிவுரைகளின் படியும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் மூலம் மத்திய அரசு உளவு பார்த்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அரசியல் நாகரிகமற்ற முறையில் சில தலைவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழகத்துக்கு இடைக்கால முதலமைச்சர் தேவையில்லை என்று கூறினார்.