Published:Updated:

முதல்வர் பற்றி வதந்தி..! ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பை கண்காணிக்கிறது போலீஸ்  

முதல்வர் பற்றி வதந்தி..! ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பை கண்காணிக்கிறது போலீஸ்  
முதல்வர் பற்றி வதந்தி..! ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பை கண்காணிக்கிறது போலீஸ்  
முதல்வர் பற்றி வதந்தி..! ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பை கண்காணிக்கிறது போலீஸ்  

முதல்வர் ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வர் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்தி பரவி வருவதால் அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது. மேலும், பல இடங்களில் கடையடைப்பு சம்பவங்களும் நடக்கிறது. முதல்வர் பற்றி வதந்தியை பரப்புவதால் பொதுமக்களிடையே தேவையில்லாத அச்சம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தநிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்புவோர் யார் என்பதை கண்காணிக்க குழு ஒன்றை அமைத்துள்ளது சென்னை மாநகர காவல்துறை. இதுகுறித்து மேலும் கூறுகையில், 10 பேர் கொண்ட தனியார் தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுடன் சைபர் கிரைம் போலீஸார் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், யூவ்டிப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை இந்த தொழில்நுட்ப வல்லுநர் குழு கண்காணித்து வருகிறது.

வதந்தி பரப்புபவர்களின் கணக்குகளை முடக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு காவல்துறை மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. மேலும், கணக்கு முடக்கப்படுபவர்களின் முகவரி, தொலைபேசி எண்களை தர நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். வதந்தி பரப்பியதாக இதுவரை 43 வழக்குகளை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பதிவு செய்துள்ளது. வதந்தியை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.