Published:Updated:

முதல்வர் வீடு திரும்புவார்: சரத்குமார் நம்பிக்கை

முதல்வர் வீடு திரும்புவார்: சரத்குமார் நம்பிக்கை
முதல்வர் வீடு திரும்புவார்: சரத்குமார் நம்பிக்கை
முதல்வர் வீடு திரும்புவார்: சரத்குமார் நம்பிக்கை

மக்கள், தொண்டர்களின் பிரார்த்தனையால் முதல்வர் ஜெயலலிதா பூரணமாக குணமடைந்து வீடு திரும்புவார் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து தினந்தோறும் கேட்டறிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்பி தங்களது பணிகளை மேற்கொள்ள பிரார்த்திக்கிறேன் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், மக்கள், தொண்டர்களின் பிரார்த்தனையால் முதல்வர் ஜெயலலிதா பூரணமாக குணமடைந்து வீடு திரும்புவார். தமிழக அரசு இயந்திரம் இயங்கவில்லை என்று கூறி சிலர் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். தேவையற்ற கருத்துகளை பதிவு செய்வது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் ஆகும் என்றார்.