Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

வெ.வியாஸபாரதி, சென்னை-33. 

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலைஞரின் பாளையங்கோட்டை... கனிமொழியின் திகார்?

மொழிப் போராட்டத்தில் கருணாநிதி சென்றது... பாளைச் சிறை. ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழி சென்றது திகார் சிறை!

பாளை சிறையில் கருணாநிதி அடைக்கப்பட்டபோது, கனிமொழி பிறக்கவே இல்லை. திகார் சிறையில் கனிமொழி அடைக்கப்பட்டதால், கருணாநிதி 88-வது பிறந்த நாளைக் கொண்டாடவே முடியவில்லை! 

குழந்தைவேலு, மயிலாடுதுறை.

கழுகார் பதில்கள்

'கடந்த ஆட்சியில் தட்டிப் பறிக்கப்பட்ட நிலங்களை மீட்போம்!’ என்று ஜெ. சொல்ல, 'சிறுதாவூர் நிலத்தையும் மீட்பார்களா?’ என்று கிண்டல் அடித்துள்ளாரே கருணாநிதி?

கருணாநிதி கேட்டது, நிச்சயமாக நெத்தியடிக் கேள்வி!

இதற்குப் பதில் சொல்ல வேண்டியவர், ஜெயலலிதா. கூடவே,  சிறுதாவூர் நில மீட்புக்காகப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்!

என்.சக்தி, புதுக்கோட்டை.

கழுகார் பதில்கள்

எந்தக் கட்சியும் தமிழக ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லையே ஏன்?

##~##

காங்கிரஸ் கட்சி (1952, 57, 62) மூன்று முறை தொடர்ந்து வென்றது. எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க.வும் (1977, 80, 84) மூன்று முறை தொடர்ந்து வெற்றியைத் தக்கவைத்தது.

காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கக் காரணம், அந்தக் காலகட்டத்தில் வலுவான எதிர்க் கட்சிகள் இல்லை. பிறகு, அந்த வெற்றிடத்தை தி.மு.க. நிரப்பியது!

எம்.ஜி.ஆர். காலத்தில் அவருக்கு மாற்றாக மக்கள் கருணாநிதியை நினைக்காததால், தொடர்ந்து எம்.ஜி.ஆரே அரியணையில் அமர்ந்தார்.

ஆனால், 1984-க்குப் பிறகு முதல்வர்கள் தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி வருகிறார்கள். இன்று தேர்தல், மக்கள் ஆடும் 'ஒத்தையா... ரெட்டையா’ விளையாட்டாக மாறிவிட்டது! 

காந்திலெனின், திருச்சி-26.

கழுகார் பதில்கள்

இலவசங்களை அரசு வழங்குவது மக்களை உழைக்காமல் சோம்பேறி ஆக்காதா?

இலவசங்களை நாம் முழுமையாக நிராகரிக்க முடியாது. எதை இலவசங்களாகத் தருகிறார்கள் என்பதுதான் முக்கியம். அடிப்படைக் கல்வியும் சுகாதாரமும் இலவசமாகக் கொடுக்கலாம். மற்றவை தேர்தலுக்கான தந்திரங்கள்தான்!

பெரிய பெரிய தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசாங்கம் தருகிறதே... அதை யாரும் இலவசம் என்று சொல்வதில்லையே ஏன்? 

பொன்விழி, அன்னூர்.

கழுகார் பதில்கள்

பாசத் தலைவிக்கு பாராட்டு விழா எப்போது?

ஜெயலலிதா, சினிமாக்காரர்களிடம்தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கருணாநிதிக்கு பாராட்டு விழாக்கள் நடத்தியே 'மயக்கத்தில்’ வைத்துஇருந்த ஜிகினாக் கூட்டம் அது! 

மா.ராஜமாணிக்கம், ஈரோடு.

கழுகார் பதில்கள்

ஆ.ராசா மீது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஒரு வெறுப்பு அல்லது காழ்ப்பு இருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. சரியா?

1999-ல் ஆ.ராசா மத்திய அமைச்சராக ஆகிவிட்டார். அதில் இருந்தே அவரைக் குறை சொல்லி எழுதிக்கொண்டு இருந்தால், உங்கள் கேள்வியில் அர்த்தம் இருக்கும். 10 ஆண்டுகள் கழித்து 2009-ம் ஆண்டு, ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆதாரங்களுடன் நமக்குக் கிடைத்த பிறகுதான், அவரை விமர்சித்து எழுதினோம். நாங்கள் அப்போது எழுதியபோது, உள்நோக்கம் கற்பித்தார்கள். நாங்கள் எழுதியது சரியான தகவல்கள்தான் என்பதை சி.பி.ஐ. கைதுப் படலம் இப்போது நிரூபித்து உள்ளது. இப்போதும் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் குற்றச் செயல்களைத்தான் விமர்சிக்கிறோமே தவிர, ஆ.ராசா என்ற தனி மனிதரை அல்ல! 

சங்கத்தமிழன், காரமடை.

கழுகார் பதில்கள்

? சரியாகச் சொல்லுங்கள்... ஜெயலலிதா தற்போது மூன்றாவது முறை முதல்வரா? அல்லது நான்காவது முறை முதல்வரா?

சரியாகச் சொன்னால் நான்காவது முறை!

2001-ம் ஆண்டு இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதாவை, உச்ச நீதிமன்றம் உச்சந்தலையில் குட்டியது. 'குற்ற வழக்கில் தண்டனை பெற்ற ஒருவரை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தது கவர்னரின் தவறு’ என்று சொன்னதால், பதவி விலகினார் ஜெயலலிதா. அடுத்து முதல்வராக, ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்தார். அந்த வழக்கில் இருந்து மேல் முறையீட்டில் விடுவிக்கப்பட்ட பிறகு.... ஆண்டிபட்டியில் வென்று, மறுபடியும் முதல்வராக 2002 பிப்ரவரி மாதம் பதவி ஏற்றார் அம்மையார்.

ஜெயலலிதா மறக்க நினைக்கும் சம்பவத்தை காரமடையில் இருந்து நீங்கள் கண்டுபிடித்ததற்குப் பாராட்ட வேண்டும்! 

கே.ஆர்.செந்தில்குமார், காங்கேயம்.

கழுகார் பதில்கள்

கடைசி நேரத்தில், அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.கவுக்கு போனவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

தி.மு.க. ஆட்சியைப் பறிகொடுத்ததில் அழகிரியை விட அனிதா ராதாகிருஷ்ணன்தான் அதிகமாக வருந்தினார். ஸ்டாலினைவிட சேகர்பாபுதான் சோர்ந்து​போனார். ஒரு முறை தாவியவர்களுக்கு இரண்டாவது முறை தாவுவது வழக்கமானதுதான். இப்போதும் தாவும் மனநிலையில் பலரும் இருப்பதாகத் தகவல்! 

கந்தஸ்வாமி, நாகர்கோவில்.

கழுகார் பதில்கள்

'கிருஷ்ணா நீரைத் திறந்துவிடுங்கள்’ என்று ஜெயலலிதா கேட்டுள்ளாரே... செய்வாரா ஆந்திர முதல்வர்?

நிச்சயமாகத் திறந்துவிடுவார் - அங்கே தண்ணீரை சேமித்துவைக்க முடியாது என்ற நிலை வரும்போது! 

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

கழுகார் பதில்கள்

  1991 ஜெ. - 2011 ஜெ... ஒப்பிட்டுப் பாருங்களேன்!

அன்று மாஜி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்டார். இன்று தனித் திறமைகள்கொண்ட தலைவியாகவும் தென்படுகிறார். முன்பு அதிகாரப் பசியுடன் வந்தார். இன்று, அனுபவித்த களைப்புடன், சற்றே பக்குவமும் வந்து இருக்கும். அன்று பதவி மோகம் இருந்திருக்கும். இன்று, ஆடினால் இறக்குவார்கள் என்ற அனுபவமும் அதில் சேர்ந்து இருக்கும்.

அன்றைய தவறுகளை 'அனுபவம் இல்லாதவர்’ என்பதற்காக மன்னிக்கலாம். இன்றும் அவை தொடர்ந்தால்... கண்டிப்பு கடுமையாகவே இருக்கும்! 

கழுகார் குறிப்பு:  ஜாலியன் வாலாபாக்படுகொலை நடத்திய ஜெனரல் டையரை உத்தம்சிங் சுட்டுக்​கொன்றதாக கடந்த இதழில் சொல்லி இருந்தேன். உத்தம்சிங் கொன்றது அந்தப் படுகொலைக்கு உத்தரவிட்ட கவர்னர் மைக்கேல் ஓ டையர் என்பவரைத்தான். படுகொலையை நடத்திய அதிகாரின் பெயர் பிரிகேடியர் ரெஜினால்டு எட்வர்டு ஹேரி டையர். இருவர் பெயரும் ஒன்று. நடத்திய கொடுமையும் ஒன்று! 

படம்: என்.விவேக்

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism