Published:Updated:

பேசும் பிரதமர் வேண்டும்!

பேசும் பிரதமர் வேண்டும்!

பேசும் பிரதமர் வேண்டும்!

பேசும் பிரதமர் வேண்டும்!

Published:Updated:
பேசும் பிரதமர் வேண்டும்!

சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் இருந்து எத்தனையோ பிரதமர்களை சந்தித்துவிட்டது இந்தியா. அமைதிக்கு ஏங்கிய ஜவஹர்லால் நேரு, அதிரடிகள் செய்த இந்திரா காந்தி, புதுமைகள் புகுத்திய ராஜீவ் காந்தி, சிரிக்காத நரசிம்மராவ் போன்ற காங்கிரஸ் பிரதமர்கள் வரிசையில், மன்மோகன் சிங் இரண்டாவது முறையாகப் பதவியில் இருக்கிறார்.

ஒரு பொருளாதார மேதையைப் பிரதமராகப் பெற்ற பெருமிதம் இப்போது இந்தியர்கள் எவர் மனதிலும் இல்லை. இதுவரை எந்தக் காலகட்டத்திலும் இல்லாத அளவுக்கு ஊழல்கள் அணிவகுத்து நிற்கின்றன. பெட்ரோல், டீசல் விலை ஏழெட்டு வாரங்களுக்கு ஒரு முறை எகிறுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. வன்முறைகளும் அராஜகங்களும் பெருகி வருகின்றன. இதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய பிரதமர், வாய் திறந்து பேசுவதே இல்லை. அவ்வப்போது பொத்தாம் பொதுவாக, 'ஊழல் ஒழிப்பில் காங்கிரஸ் முனைப்புடன் செயல்படுகிறது’ என்று சொல்வதுடன் அவரது உரை முடிந்துவிடுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மக்கள் பிரச்னைகளைப் பொறுத்தவரை, மன்மோகன் சிங் ஒரு செயல்படாத பிரதமர்தான். இப்படி ஒரு பிரதமர் நமது நாட்டுக்குத் தேவைதானா? அவரது மேதைமைத்திறன் ஏன் இந்த ஆட்சியில் வெளிப்படவில்லை? அவரது கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன என்றால், அவர் ஏன் இன்னும் பதவியில் தொடர வேண்டும்? மக்களுக்காகப் பேசும் பிரதமரே நமக்கு வேண்டும். ஓட்டுப் போட விரும்பாத, மக்களை சந்தித்து எம்.பி. பதவி பெறாத தலைவர்கள் நமக்குத் தேவையே இல்லை!

- எஸ்.ராமஜோதி, பெரியநாயக்கன்பாளையம்.

பேசும் பிரதமர் வேண்டும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism