Published:Updated:

காங்கிரஸுக்கு துரோகம் இழைக்க மாட்டோம்: மம்தா

காங்கிரஸுக்கு துரோகம் இழைக்க மாட்டோம்: மம்தா
காங்கிரஸுக்கு துரோகம் இழைக்க மாட்டோம்: மம்தா
காங்கிரஸுக்கு துரோகம் இழைக்க மாட்டோம்: மம்தா

கொல்கத்தா: மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதில்லை என்று கூறியுள்ள மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மத்திய அரசைக் கவிழ்ப்பதற்கு தாங்கள் துரோகிகள் அல்ல என்று தெரிவித்திருக்கிறார்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்‍குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்‍கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தது, மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது.

அக்‍கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ரயில்வே அமைச்சருமான தினேஷ் திரிவேதி அளித்த பேட்டியில், 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வரலாம் எனத் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு முடமாகிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியது, காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலிடம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாக, கொல்கத்தாவில் இருந்து வெளியாகும் வங்க மொழி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், "நாங்கள் துரோகிகள் அல்ல; மத்திய அரசை நிலைகுலையச் செய்ய மாட்டோம். மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை நாங்கள் விரும்பவில்லை. காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவும் விரும்பவில்லை," என்று மம்தா கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தினேஷ் திரிவேதி கூறியது, அவரது சொந்தக் கருத்து என்று காங்கிரஸிடம் மம்தா விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.