Published:Updated:

பட்ஜெட் தொடர்: ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு

விகடன் விமர்சனக்குழு
பட்ஜெட் தொடர்: ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு
பட்ஜெட் தொடர்: ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு
பட்ஜெட் தொடர்: ஜனாதிபதியுடன் பிரதமர் சந்திப்பு

புதுடெல்லி:  ஜனாதிபதி பிரதீபா பாட்டிலை பிரதமர் மன்மோகன்சிங் இன்று காலை சந்தித்து பேசினார்.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர்  பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.அங்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டிலை சந்தித்து பேசினார்.

சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. 

தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்தும் அவர்கள் விவாதித்ததாகவும் தெரிகிறது.