Published:Updated:

ஒரு ராணுவ வீரரின் உயிர் எத்தனை தீவிரவாதிகளுக்கு சமம் தெரியுமா? (DATA STORY)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒரு ராணுவ வீரரின் உயிர் எத்தனை தீவிரவாதிகளுக்கு சமம் தெரியுமா? (DATA STORY)
ஒரு ராணுவ வீரரின் உயிர் எத்தனை தீவிரவாதிகளுக்கு சமம் தெரியுமா? (DATA STORY)

ஒரு ராணுவ வீரரின் உயிர் எத்தனை தீவிரவாதிகளுக்கு சமம் தெரியுமா? (DATA STORY)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உரி ராணுவ முகாம் மீது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அதீத பரபரப்பு நீடிக்கிறது. பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை இந்தியா கையில் எடுக்க, போர் பதற்றம் தொற்றிக் கொண்டது. இந்த பதற்ற நிலை சற்று குறைந்தாலும், ஜம்மு காஷ்மீரின் இந்திய எல்லையில் தீவிரவாத தாக்குதல்களும்  ஊடுருவல் முயற்சிகளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. தீவிரவாதிகளுக்கு இணையாக பாகிஸ்தான் ராணுவமும் தொடர்ந்து இரண்டு நாட்களாக அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. உரி தாக்குதலுக்கு பின் 2 ராணுவ வீரர்கள், தீவிரவாத தாக்குதலில் பலியாகியுள்ளனர். 365 நாட்களும் உட்ச பட்ச பாதுகாப்பு தேவைப்படும் இந்த யுத்த களத்தில், தீவிரவாதிகளை தடுக்க, இந்தியா இழக்கும் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையை பார்த்தால் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.


 

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு 2016-ம்  ஆண்டு (இன்று வரை), ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலால் உயிரிழந்த பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. உடன், சுட்டு வீழ்த்தப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கையும் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த வேண்டிய அவசியத்தை இந்த டேட்டா மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். 


1988-2016 இன்று வரை ஜம்மு- காஷ்மீர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மொத்தம் 6,257 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இந்த 28 ஆண்டுகளில் 23,103 தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தால் துவம்சம் செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலில் 14,734 பொதுமக்களும் பலியாகியுள்ளனர்.

சராசரியாக 3 தீவிரவாதிகளை அழிக்க ஒரு ராணுவ வீரர் தன் உயிரை நாட்டுக்காக அர்ப்பணம் செய்கிறார்.


 

பாகிஸ்தானில் இருந்து கட்டவிழ்க்கப்பட்ட தீவிரவாதம் முழு முச்சில் இந்தியாவை முற்றுகையிட்ட கால கட்டம் 1992-2001 வரை. இந்த 10 ஆண்டுகளில் நடந்த உயிரிழப்புகள் 28,040. இந்த காலகட்டத்தில் ராணுவ வீரர்களைக் காட்டிலும், பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை அதிகம். 3,779 ராணுவ வீரர்களும், 9,813 பொது மக்களும் உயிரிழந்துள்ளனர். 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்துடன் கார்கில் போர் ஒரு புறம், தீவிரவாதிகள் மறுபுறம் என இந்திய ராணுவத்துக்கு சவாலான காலமாக இருந்தது.  


 
 

வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது தற்போதைய சூழல் கொஞ்சம் ரெட் அலர்ட்டிலேயே இருக்கிறது. காரணத்தை கீழே உள்ள சார்ட் புரிய வைக்கும்.
 

2010-2016 வரை மாதவாரியாக நடந்த தீவிரவாத தாக்குதல்கள் பற்றிய தகவல் மேலே கொடுக்கப்பட்டுள்ளது

மாதவாரியாக நடந்த தாக்குதல்கள் பற்றி அலசுவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. எல்லையில் பனிப் பொழிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் அதிகம் உள்ள நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் ஃபிப்ரவரி ஆகிய மாதங்களில்  தீவிரவாதிகளால் பெரும்பலத்தோடு இந்தியா மீது தாக்குதல் நடத்த முடிவதில்லை. இயற்கை அவர்களுக்கு தடையாக உள்ளது. ஆனால், அதேநேரம் இந்தியாவின் மற்ற பகுதிகளில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பெரும் தாக்குதல்கள் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் தான் அரங்கேறியுள்ளன.

1999 விமான கடத்தல் நடந்தது டிசம்பர் மாதத்தில். 2001 பாராளுமன்றத் தாக்குதல் நடந்தது டிசம்பர் மாதத்தில். 2008 மும்பை தாக்குதல் நடந்தது நவம்பர் மாதத்தில்.

ஜம்மு- காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவ முடியாத தீவிரவாதிகள், நாட்டுக்குள் தாக்குதல் நடத்த மற்ற வழிகளைக் கையில் எடுக்கின்றனர். எனவே தான் செப்டம்பர் மாதம் நடந்த உரி தாக்குதலை ஓர் எச்சரிக்கை மணியாக இந்திய ராணுவம் எடுத்துக் கொண்டு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் முதல் நடவடிக்கையே சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்.

நாட்டுக்கு பாதுகாப்பு, அதேநேரம் எதிரிக்கு பதிலடி என இந்திய ராணுவத்தின் கான்ஃபிடென்ஸ் உச்சத்தில் இருக்கிறது. உயிரை கேடயமாகவும், அறிவை ஆயுதமாகவும் வைத்திருக்கும் இந்திய ராணுவத்தின் கைகளுக்குள் நமது பாதுகாப்பு உறுதியாகவே உள்ளது.

- ரெ.சு.வெங்கடேஷ்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு