Published:Updated:

வாடகைக்கு எடுக்கப்பட்ட 7 ரயில்கள்... மேற்கு வங்கத்தில் அரசியல் நகர்வுகளைத் தீவிரப்படுத்தும் பாஜக!

ரயில்களை வாடகைக்கு எடுத்த பாஜக

கொல்கத்தாவில் நடைபெறும் 'நபன்னா அபிஜன்' அணிவகுப்புக்கு வரும் தொண்டர்களை அழைத்து வர பாஜக ஏழு ரயில்களை வாடகைக்கு எடுத்துள்ளது.

வாடகைக்கு எடுக்கப்பட்ட 7 ரயில்கள்... மேற்கு வங்கத்தில் அரசியல் நகர்வுகளைத் தீவிரப்படுத்தும் பாஜக!

கொல்கத்தாவில் நடைபெறும் 'நபன்னா அபிஜன்' அணிவகுப்புக்கு வரும் தொண்டர்களை அழைத்து வர பாஜக ஏழு ரயில்களை வாடகைக்கு எடுத்துள்ளது.

Published:Updated:
ரயில்களை வாடகைக்கு எடுத்த பாஜக

மேற்கு வங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விசாரிக்கப்பட்டதற்குப் பிறகு பல அரசியல் முன்னெடுப்புகளை பா.ஜ.க செயல்படுத்திவருகிறது. அதைத் தொடர்ந்து இன்று கொல்கத்தாவில் 'நபன்னா அபிஜன்' (செயலகத்துக்கு அணிவகுப்பு) நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பா.ஜ.க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொள்ள பா.ஜ.க ஏழு ரயில்களை வாடகைக்கு எடுத்திருக்கிறது.

பாஜக - குஜராத்
பாஜக - குஜராத்

இது தொடர்பாக, மேற்குவங்க பா.ஜ.க மூத்த தலைவரும், அந்தக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான ராகுல் சின்ஹா ​​செய்தியாளர்களிடம், "பேரணியில் சேர நகரத்துக்கு வர விரும்பும் ஆதரவாளர்களைத் தடுக்க பல தடைகளை உருவாக்க முயல்வதாகத் தகவல் வெளியானது. அதேபோல கடந்த திங்கள்கிழமை மாலை அலிபுர்துவாரிலிருந்து சீல்டாவுக்குச் செல்லும் சிறப்பு ரயிலில் ஏற விடாமல் எங்கள் ஆதரவாளர்கள் தடுக்கப்பட்டு, மாநில காவல்துறையினரால் லத்தி சார்ஜ் செய்யப்பட்டது. அதையும் மீறி அந்த ரயிலில் எங்கள் ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புறப்பட்டுச் சென்றனர். காவல்துறை மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பைக் கடந்து, வடக்கு வங்காளத்திலிருந்து மூன்று ரயில்களும், தெற்கிலிருந்து நான்கு ரயில்களும் சீல்டா மற்றும் சந்த்ராகாச்சியை அடையும்" எனத் தெரிவித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ரயில்கள்
ரயில்கள்

அதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜாய் பிரகாஷ் மஜும்தார், ``நாட்டைவிட்டு தப்பியோடிய தொழிலதிபர்களிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தை பா.ஜ.க பறித்து, அந்தப் பணத்தைத் தனது நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்துகிறது. எனக்குத் தெரிந்த வரையில், 2,000 கோடி ரூபாயை பா.ஜ.க 2021 சட்டமன்றத் தேர்தலில் செலவழித்திருக்கிறது. ஒரு சிறிய கணக்கு... இந்தப் பேரணியில் கலந்துகொள்ள 10,000 பேர் வருவதாக வைத்துக்கொள்வோம்.

பா.ஜ.க - மோடி, அமித் ஷா
பா.ஜ.க - மோடி, அமித் ஷா

அதில் ஒவ்வொரு ரயிலிலும் 11 பெட்டிகளும் 700-800 இருக்கைகளும் உள்ளன. அதாவது ஏழு ரயில்களில் 5,000-5,500 பேர் வரலாம். ஒவ்வொரு ரயிலிலும் ஏறும் ஒவ்வொருவருக்கும் பாஜக ரூ 3,000 முதல் 4,000 செலவழிக்காமல் வர முடியாது. இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது... இந்தப் பணத்தை கொரோனா தொற்றுக்குப் பிந்தைய சூழ்நிலையில் மக்களுக்கு நிதி உதவிசெய்யப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இவ்வளவு பணம் செலவழித்து வருபவர்கள், மக்களின் கவனத்தைப் பெற, பிரச்னையைத் தூண்ட முயற்சி செய்யலாம்" எனத் தெரிவித்திருக்கிறார்.