Published:Updated:

முதல்வர் விரைவில் வீடு திரும்ப உள்ளார்: சி.ஆர்.சரஸ்வதி தகவல்

Vikatan Correspondent
முதல்வர் விரைவில் வீடு திரும்ப உள்ளார்: சி.ஆர்.சரஸ்வதி தகவல்
முதல்வர் விரைவில் வீடு திரும்ப உள்ளார்: சி.ஆர்.சரஸ்வதி தகவல்
முதல்வர் விரைவில் வீடு திரும்ப உள்ளார்: சி.ஆர்.சரஸ்வதி தகவல்

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப உள்ளார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.

கடந்த மாதம் 22-ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 28 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் நலம்பெற வேண்டி அதிமுகவினர் தினந்தோறும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் குவிந்து கிடக்கின்றனர்.

இந்த நிலையில், அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப உள்ளார்" என்று கூறினார்.