Published:Updated:

திருமாவளவனுடன், திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு

Vikatan Correspondent
திருமாவளவனுடன், திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு
திருமாவளவனுடன், திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு
திருமாவளவனுடன், திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்து பேசினார்.

பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் இன்று திடீரென வருகை தந்தனர்.

அலுவலகத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அவர்களை வரவேற்றார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும், பொன்.ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர் ஆகியோரின் அடுத்தடுத்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.