Published:Updated:

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

Published:Updated:
அணு ஆட்டம்!

அணுசக்தி முக்கோணம்!

  ''அணு ஆயுதங்களை நாம் ஒழித்தாக வேண்டும், இல்லையேல் அவை நம்மை ஒழித்து விடும்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி

1930, 40-களில் தொடங்கியது இந்தியா - பாகிஸ்தான் பிரச்னை!

இந்துக்களும், முஸ்லிம்களும் ஒட்டோ, உறவோ இல்லாத இரு வேறு தேசியக் குழுக்கள் என்றும், அவர்கள் இருவரும் ஒரே அரசியல் அமைப்பின் கீழ் சேர்ந்து வாழ இயலாது என்றும், பாகிஸ்தான் என்ற தனி நாட்டை முஸ்லிம்களுக்காக உருவாக்குவதே சிறப்பு என்றும் வாதிட்டனர், பிரிவினைவாதிகள். அப்படியே நாடு துண்டாடப்பட்டது!

அணு ஆட்டம்!
##~##

இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் மனதில் தாங்கள் பலவீனமானவர்கள், எனவேதான் முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் தம்மை ஆக்கிரமித்து, அடக்கியாள முடிந்தது என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை நிலவியது. வலிமை பெறுவது ஒன்றுதான் பாதுகாப்பான வாழ்வுக்கு வழி என்று பலமாக நம்பினர்.

விரோதம் மிகுந்த இரண்டு அண்டை வீட்டார் போல இந்தியா - பாகிஸ்தான் உறவு 1947-ல் துவங்கியது. மதத்தால், அரசியலால் பிரிந்து இருந்தாலும், நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பது வரலாற்று உண்மை. ஏழ்மை, பட்டினி, மக்கள் தொகைப் பெருக்கம், கல்வியறிவு இன்மை, வேலைவாய்ப்பு இன்மை, பிணி, பெண் அடிமைத்தனம் என இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான பிரச்னைகளையே எதிர்நோக்கி நின்றன. இரு நாட்டு மக்களின் எதிர்காலங்களும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து இருந்தன. இத்தனை ஒற்றுமைகளும், பொதுமைகளும் இருந்தாலும் போட்டி, பொறாமை, சந்தேகம், பயம் எனும் எதிர்மறை உணர்வுகளின் மீதே இரு நாட்டு உறவுகளும் கட்டி எழுப்பப்பட்டது.

1962-ம் ஆண்டு இந்தியா மீது சீனா படை எடுத்தது. அடுத்த இரண்டு வருடங்கள் கழித்து சீனா, அணுகுண்டு பரிசோதனை நடத்தியது. அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 1965-ல், பாகிஸ்தானோடு

அணு ஆட்டம்!

நடந்த போர், 1971-ம் ஆண்டு யுத்தம் எனத் தொடர்ச்சியாக நிகழ்ந்த நிகழ்வுகள்... இந்திரா காந்தியை அணு ஆயுதம் பற்றி சிந்திக்கவும் செயல்படவும் வைத்தன. 1974-ம் ஆண்டு மே 18 அன்று 'சிரிக்கும் புத்தர்’ என்ற குறியீட்டுப் பெயருடன் முதல் அணு குண்டு பரிசோதிக்கப்பட்டது.

இதனைக் கண்டு கவலையுற்ற அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி புட்டோ, 'நாங்கள் புல்லைத் தின்ன வேண்டி வந்தாலும் பரவாயில்லை, அணுகுண்டு தயாரித்தே தீருவோம்’ என சூளுரைத்தார். இந்தியாவின் அணுகுண்டுத் திட்டத்தைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த புட்டோ, 1972-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மூல்தான் நகரில் பாகிஸ்தானின் அணு விஞ்ஞானிகள், பொறியாளர்களின் கூட்டத்தை நடத்தினார். அதில், பாகிஸ்தானுக்கு அணு ஆயுதம் தேவை என்பதை விளக்கிச் சொல்லி, அவர்களால் தயாரிக்க முடியுமா, எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் எனக் கேட்டார். ஐந்து ஆண்டுகள் அவகாசம் கேட்டவர்களிடம், மூன்று ஆண்டுகளில் முடிக்கக் கேட்டுக் கொண்டார்.

பாகிஸ்தான் அணுசக்தி ஆணையத்தின் கீழ் ஆணு ஆயுத வேலைகள் கர்ம சிரத்தையுடன் துவங்கின. கராச்சி அணு மின் நிலையம் 1972-ம் ஆண்டின் இறுதியில் துவங்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து ககுட்டா ஆய்வு மையம் துவங்கப்பட்டு, அணு விஞ்ஞானி ஏ.க்யூ.கான் பொறுப்பில் விடப்பட்டது. 1977 ஜூலை மாதம் புட்டோ பதவியில் இருந்து இறங்குவதற்கு முன்பு யுரேனியம் செறிவூட்டும் உலையும், புளூட்டோனியம் மறுசுழற்சி செய்யும் உலையும் நிர்மாணிக்கப்பட்டன. அணு ஆயுதப் பரிசோதனைக்காக சகாய் மலைப் பகுதி தேர்வு செய்யப்பட்டது. அணுகுண்டு வடி​வமைப்புப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. புட்டோவைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்த ஜியா உல் ஹக் ஆட்சிக் காலத்தில்தான் அணுகுண்டுகள் உண்மையிலேயே தயாரிக்கப்பட்டன. இந்த ராணுவ ஆட்சியால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடிய புட்டோ மனிதாபிமானமற்ற அணு ஆயுதத்தையும், மதத்தையும், மனித நாகரிகத்தையும் இணைந்து சிந்தித்தார். 'கிறிஸ்துவ, யூத, இந்து, நாகரி கங்கள் அணு ஆயுதத் திறன் பெற்று இருக்கின்றன. இஸ்லாமிய நாகரிகம் மட்டும்தான் இதனைப் பெற வில்லை. ஆனால், இந்த நிலைமை விரைவில் மாறி விடும்’ என்று எழுதினார்.

தனது அணு ஆயுதத் தயாரிப்புக்கு சீனா ஒரு முக்கியமான காரணம் என்று இந்தியா சொன்​னாலும் சீனா, இந்தியா - பாகிஸ்தான் பகைமையின் ஓர் அம்சமாகவே, தெற்காசிய அணு ஆயுதப் போட்டியைப் பார்க்கிறது. பாகிஸ்தான் (சீனாவோடு கை கோத்துக் கொண்டு) இந்தியாவையும் இந்தி​யா​வின் அணு ஆயுதங்களையும் மட்டுமே பிரச்னை​யாகப் பார்ப்பதாலும், மற்ற உலக நாடுகள் சீனாவை ஒரு பாதக நாடாக பார்க்காததாலும், இந்திய - பாகிஸ்தான் அரசுகள் அனைத்துமே இந்த அழிவுத் திட்டத்தில் அக்கறையோடு செயல்படுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் - சீனா எனும் அணுசக்தி முக்கோணக் கோட்பாடாகக் கருதப்படுகிறது. இதனை நிரூபிப்பது போல 1998 மே மாதத்தில் அணுகுண்டுப் பரிசோதனைகளை இந்தியாவில் பி.ஜே.பி-யும், பாகிஸ்தானில் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும் நடத்தின. இனி ஓர் அணு ஆயுதப் போர் நடப்பதாக இருந்தால், அது நமது பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேதான் நடக்கும் என்று மொத்த உலகமும் அஞ்சுகிறது! 

ஃபெயில் சேஃப் (Fail safe)

1962-ம் வருடம் யர்ஜின் பர்டிக் மற்றும் ஹார்வி வீலர் இணைந்து எழுதிய நாவலை, 1964-ம் ஆண்டு சிட்னி லுமெட் எனும் இயக்குநர், சினிமாவாகத் தயாரித்தார்.

அணுகுண்டுகள் பொருத்தப்பட்ட அமெரிக்க விமானங்கள், சோவியத் ரஷ்யா மீது தவறுதலாக கம்ப்யூட்டர்களால் ஏவப்படுகின்றன. கர்னல் ஃஜேக் க்ராடி தலைமையிலான விமானிகள், ராணுவத் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ள முயன்றால், சோவியத் அதிகாரிகள் அந்த தகவல் பரிமாற்றத்தை சிதைத்து விடுகிறார்கள். தாக்க வேண்டாம் என்ற சமிக்ஞைகள், அமெரிக்காவில் இருந்து வராததால், மாஸ்கோ நகர் மீது அணுகுண்டுகள் வீசத் தயாராக இருக்கிறார்கள்.

அணு ஆட்டம்!

அமெரிக்காவில் இருக்கும் உயர் அதிகாரிகள், அமெரிக்க அதிபரிடம் நிலைமையைச் சொல்கிறார்கள். அவர் ரஷ்யர்களைத் தொடர்பு கொண்டு தமது நாட்டு கம்ப்யூட்டர்கள் தன்னிச்சையாகத் தாக்குதலைத் தூண்டிவிட்டதாகச் சொல்ல, ரஷ்யர்கள் அவர்களின் கம்ப்யூட்டர்கள் தன்னிச்சையாகத் தகவல் பரிமாற்றங்​களை நசுக்கிவிட்டதாகத் தெரிவிக்கின்றனர். ஒரு வழியாக ரஷ்யர்கள் தங்கள் இயந்திரங்களைக் 'கட்டுக்குள்’ கொண்டுவந்து, அமெரிக்கர்களைத் தங்கள் விமானிகளிடம் பேச அனுமதிக்கிறார்கள். இரு அரசுகளும் ஒத்துழைத்து, அனைத்து விமானங்களையும் திருப்பி விடுகின்றன. ஆனால், ஒரு விமானம் முன்னோக்கிப் போய்விடுகிறது. அது மாஸ்கோ மீது அணு குண்டு போடும்போது, சோவியத் ரஷ்யா பதிலுக்குத் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், அமெரிக்காவே நியூயார்க் நகரின் மீது ஓர் அணுகுண்டை போட்டுக் கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது. மாஸ்கோ தாக்கப்படுகிறது. நியூயார்க் நகரைத் தாக்கும் பொறுப்பு, ஒரு ராணுவ வீரருக்குக் கொடுக்கப்படுகிறது. அவருடைய மனைவி, குழந்தைகளும் அங்கேதான் வசிக்கின்றனர். குண்டை போட்டுவிட்டு, அவர் தற்கொலை செய்து கொள்கிறார். மனிதக் கட்டுப்பாடுகளை இழந்து, இயந்திரங்களால் நாம் இயக்கப்படும்போது என்னவாகும் என்பதைச் சொல்கிறது இந்தப் படம்! 

அணு ஆட்டம்!

ஹென்றி டிஃபேன்

மதுரையில் சட்டக்கல்வி பயின்று 28 ஆண்டு​களாக வழக்கறிஞராகப் பணி​யாற்றி வரும் ஹென்றி டிஃபேன், 'மக்கள் கண்​காணிப்பகம்’ எனும் மனித உரிமைகள் அமைப்பின் செயலாண்மை இயக்குநர். அணுசக்தி சம்பந்தமான நிறுவனங்களும் மக்கள் வாழ்வுரிமைகளை, வாழ்வாதார உரிமைகளை மீறுகின்றன, அழிக்​கின்றன எனும் உண்மையை ஏற்று, இவற்றுக்கு எதிரான போராட்டங்களிலும், நிகழ்வுகளிலும் பங்கேற்று வருகிறார். அணுசக்திக்கு எதிரான போராளிகளின் மனித உரிமைகள் பாதிக்கப்படும் அபாயம் எழும்போதும், அவர்களுக்காக தயங்காது குரல் கொடுக்கும் சகபோராளி. பல சர்வதேச அமைப்புகளோடும், தொண்டு நிறுவனங்களோடும், கல்வி நிலையங்களோடும் கை கோத்து மக்கள் தொண்டு புரிபவர்!

- அதிரும்..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism