Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

மா.சுந்தரமூர்த்தி, செய்யாறு.

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களுக்கு வாரிசுகள் பிறந்து அரசியலிலும் இருந்து இருந்தால்?

நல்ல வேளை இல்லை என்று நினைத்துக் கொள்ளாமல் செய்யாறுவில் இருந்து பயமுறுத்துகிறீர்களே!

மிகக் கொடுங்கோலனாகச் சித்திரிக்கப்படும் ஹிட்லர் கூட வாரிசு அரசியலை வெறுத்துள்ளார். அவரது டைரியில் உள்ள வாசகத்தைப் பாருங்கள்...

கழுகார் பதில்கள்

'எனக்கு ஒரு பெண்தோழி. எனது பணிகளில் அவ்வப்போது தலையிடுவாள். எனது ஓய்வு நேரத்தில் எனக்கு மனஅமைதி வேண்டும். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. எனக்குக் குழந்தைகள் பிறந்தால் என்னவாகும்? என்நிலையை நினைத்தும் பாருங்கள். பின்னர் எனது பிள்ளைகளை இந்த நாட்டுக்கு வாரிசாகக் கொண்டுவர முயற்சிப்பார்கள். அது வேண்டாம்!’ 

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்

கழுகார், ஜோதிடம் பார்ப்பது உண்டா?

உண்டு. அடுத்தவர் ஜாதகங்களை வைத்து! 

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்

அரசு அதிகாரிகளை எல்லாம் இடமாற்றம் செய்துவிட்டால், ஊழலற்ற நிர்வாகம் உருவாகிவிடுமா?

##~##

எங்கே இடமாற்றம் செய்யப்போகிறீர்கள்? பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷ§க்குமா? வேலூரில் முறைகேடு செய்த அதிகாரிக்கு தண்டனையாக விழுப்புரத்துக்கு இடமாற்றம் செய்கிறார்கள். இங்கே செய்ததை அங்கே தொடர்வார். தவறு செய்தவர்களை இடமாற்றம் செய்வது தண்டனை ஆகாது.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான நடராஜன், 'கடல் அலை தாசில்தார்’ என்று ஒரு கதை எழுதினார். ஊழல் செய்த தாசில்தார் ஒருவரை கடற்கரைக்கு மாற்றி, 'கடல் அலையை எண்ணி... ஒரு நாளைக்கு எத்தனை அலை வருகிறது’ என்று பார்க்க உத்தரவிட்டார்களாம். அந்த தாசில்தார், கடற்கரைக்கு வந்தவர்களிடம், அலையைப் பார்க்க இவ்வளவு பணம் தரவேண்டும் என்று வசூலித்தாராம்.

கை அரிக்கும் அதிகாரிகளால் எங்கும் சும்மா இருக்க முடியாது என்பதற்கு உதாரணமாக கருணாநிதியே பல கூட்டங்களில் இந்தக் கதையைத்தான் சொல்வார்.

ஊழல் அதிகாரிகளைத் தண்டிப்பதற்கு இடமாற்றம் பயன் தராது. பதவி நீக்கமே பயமுறுத்தும்! 

எஸ்.கதிர்வேல், சென்னை.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

பிரதமர் மன்மோகன்சிங் நல்லவர். ஆனால், அவரை இயக்கும் ரிமோட் கன்ட்ரோல்தான் மோசம் என்கிறாரே அண்ணா ஹஜாரே?

நல்லவர் ஏன் மோசமான ரிமோட் கன்ட்ரோலை வைத்திருக்க வேண்டும்? தவறுக்கு உடந்தையாக்க நினைத்தார்கள். உடனே தான் வகித்த மிக உயர்ந்த பதவியையும்... தன் நண்பனான ராஜீவ் காந்தியையும் புறந்தள்ளிவிட்டு வெளியேறினார் வி.பி.சிங்.

பி.ஜே.பி-யின் தயவால்தான் பிரதமராக அவர் இருந்தார். ஆனால், மதவாதம் தூண்டும் ரத யாத்திரை தேவை இல்லை என்று நினைத்ததும் தான் வகித்த பதவியைப்​பற்றி கவலைப்படாமல், கவிழ்த்துவிடுவார்கள் என்று தெரிந்தே நடவடிக்கை எடுத்தார் வி.பி.சிங். அப்படி நடந்து காட்டினால், மன்மோகனையும் அந்தப் பட்டியலில் சேர்க்​கலாம்.

நல்லவர் என்று பெயர் வாங்குவதைவிட, நல்லவராக நடந்துகாட்டுவதே முக்கியம்! 

என்.சோமசுந்தரம், ஸ்ரீவைகுண்டம்.

கழுகார் பதில்கள்

அரசியல் களத்தில் இறங்க நினைக்கும் எனக்கு உங்களது அறிவுரை?

நீ செவிடனாகவும் குருடனாகவும் இருந்து கொண்டு பொதுமக்களைக் கேட்கவும் பார்க்கவும் விட்டுவிடு... என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது! 

போடி.எஸ்.சையது முகமது, சென்னை-93

கழுகார் பதில்கள்

'தேடப்படும் குற்றவாளி முஷ்ரப்’ என பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது பற்றி?

முஷ்ரப்பின் முன்வினை இப்போது சுட ஆரம்பித்துள்ளது. ஓரளவு அமைதி அரசாங்கத்தை பாகிஸ்தானில் அமைத்த நவாஸ் ஷெரீப்பை நாட்டைவிட்டுத் துரத்தி அதிகார நாற்காலியை நய

வஞ்சகமாகப் பிடித்தவர் பர்வேஸ் முஷ்ரப். அன்று இவர் ஷெரீப்புக்குச் செய்தது... இன்று இவருக்கு நடக்கிறது. பெனாசிர் புட்டோவை கொலை செய்யத் தூண்டியவர் முஷ்ரப் என்பதுதான் குற்றச்சாட்டு. லண்டனுக்கும் துபாய்க்கும் தலைமறைவாகத் திரிந்துகொண்டு இருக்கும் இவர், 2013-ல் நடக்க இருக்கும் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறார். ஆனால், அவரை பாகிஸ்தானுக்குள் வரவிடாமல் துரத்தி அடிக்கிறார்கள்.

பொதுவாகவே பாகிஸ்தான் நாட்டுத் தலைவர்கள்,  ஒரு கையால் இந்தியாவுக்கும் இன்னொரு கையால் பாகிஸ்தானுக்கும் குழி தோண்டிக்கொண்டு இருப்பது​தான் அந்த நாட்டின் 60 ஆண்டு வரலாறு! 

சுதந்திரமூர்த்தி, குமாரபாளையம்.

கழுகார் பதில்கள்

'இன்னும் மூன்று மாதத்தில் ஆட்சி மாற்றம் நடந்துவிடும்’ என்று சுப.வீரபாண்டியன் போன்றவர்கள் சொல்ல ஆரம்பித்துள்​ளார்களே?

கருணாநிதியை மயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று வீரபாண்டியன் நினைக்கிறார் போலும். இம்மாதிரியான போலிப் பூசாரிகளை நம்பியதால்தான் கோபுரத்​தை இழந்தோம் என்பதை உணராதவர் அல்ல கருணாநிதி! 

தெ.வள்ளி, திருநெல்வேலி.

கழுகார் பதில்கள்

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு மூலம் என்ன சாதிக்க நினைக்​கிறார்கள்?

இது இந்திய விடுதலைக்காக நேதாஜியின் சிந்தனையில் உதித்த திட்டம். சிங்கப்பூரில் இருந்தபடி, ஜப்பானியப் படைகளுடன் இணைந்து ஐ.என்.ஏ. படைக்குத் தலைமை ஏற்ற நேதாஜி, 1944-ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று சிங்கப்பூரில் தற்காலிக இந்திய அரசு அமைத்தார். தாகூரின் பாடலை தேசிய கீதமாக்கினார். மூவர்ணக் கொடி தேசியக் கொடியானது. நேதாஜி அமைத்த இந்திய அரசை 8 நாடுகள் அங்கீகரித்தன. ஆனால், நம் இந்தியா, நாடு கடந்த தமிழ் ஈழ அரசை முடக்கப் பார்க்கிறது. இதுதான் வேதனை! 

எஸ்.நமச்சிவாயம், புதுக்கோட்டை.

கழுகார் பதில்கள்

அஸ்தமித்த சூரியன் உதிக்காதா?

தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க. என்று ஒரு கட்சியே இருக்காது என்று ஒருவர் வீர வசனம் பேசினார். இப்போது அவர் இருக்கும் இடமே தெரியவில்லை! இப்போது இவர் பேசுகிறார். மலரச்செய்வதும் அஸ்தமிக்கச்செய்வதும் மக்கள்தானே தவிர, அரசியல்​வாதிகள் அல்ல!

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism