Published:Updated:

ஆம்னிக்குத் தேவை, அவசர வழிகள்!

ஆம்னிக்குத் தேவை, அவசர வழிகள்!

ஆம்னிக்குத் தேவை, அவசர வழிகள்!

ஆம்னிக்குத் தேவை, அவசர வழிகள்!

Published:Updated:
ஆம்னிக்குத் தேவை,  அவசர வழிகள்!

வசரம் மற்றும் சொகுசுப் பயணத்துக்குப் பலரும் தேர்ந்தெடுப்பது ஆம்னி பஸ்களைத்​தான்! இருப்பினும், வேலூர் அருகே ஒட்டு மொத்தமாக ஒரு ஆம்னி பஸ் மொத்தமாக எரிந்துபோய், அத்தனை பேரும் உயிர் இழந்தது, தாங்கமுடியாத வேதனை.

இந்த விபத்து எதிர்பாராமல் நிகழ்ந்ததுஎன்றாலும், பயணம் செய்த அத்தனை பேரின் உயிர் இழப்புக்குக் காரணம், பஸ்ஸில் இருந்து வெளியே வர ஒரே ஒரு வழி மட்டும் இருந்ததுதான். ஆம்னி சொகுசுப் பேருந்துகளில் பெரும்பாலும் எல்லா கண்ணாடி​களுமே லேமினேட் செய்யப்பட்டவை. வெளியேறுவதற்கான கதவும் ஓட்டுநருக்கு அருகே ஒன்றே ஒன்றுதான்! திறக்கக்​கூடிய ஜன்னலும்... இரண்டு பக்கக் கதவுகளும் இருந்து இருந்தால், இந்த விபத்தில் நிச்சயம் கூடுதலான பயணிகள் பிழைத்து இருப்பார்கள்! அதனால் ஒவ்வொரு பேருந்திலும் கண்டிப்பாக அவசர வழி இருக்க வேண்டியது அவசியம். ரயில்களில் இருப்பது போன்றே, திறக்கக்கூடிய ஜன்னல்களும் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். இந்த அவசர வழி குறித்து பயணிகளுக்குத் தெரியும் வண்ணம் எழுதி வைக்கவும் வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொரு ஆம்னி பஸ்ஸுக்கும் இரண்டு கதவுகள் மற்றும் திறந்து வெளியேறக்கூடிய ஜன்னல்களும் இருந்தால் மட்டுமே அனுமதி கொடுக்க வேண்டும். மனித உயிர்களை​விட விலை மதிப்புள்ளது எதுவும் இல்லை. அதனால் அவசர வழி குறித்த அதிரடி உத்தரவை அரசு உடனடி​யாக அமலுக்குக் கொண்டுவந்தால்தான், ஆம்னி பஸ்களில் பயணம் புரிபவர்கள் நிம்மதியாகப் பயணம் செய்ய முடியும்!

- ஆர்.ஆர்.காவ்யபாரதி, ஜலகண்டபுரம்.

ஆம்னிக்குத் தேவை,  அவசர வழிகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism