Published:Updated:

மிஸ்டர் கழுகு: ''என் மக மட்டும் கஷ்டப்படணுமா?''

மிஸ்டர் கழுகு: ''என் மக மட்டும் கஷ்டப்படணுமா?''

மிஸ்டர் கழுகு: ''என் மக மட்டும் கஷ்டப்படணுமா?''

மிஸ்டர் கழுகு: ''என் மக மட்டும் கஷ்டப்படணுமா?''

Published:Updated:
##~##

வெளியில் அடிக்கும் வெயிலின் அனல் கழுகார் சிறகுகளில் பட்டு நம் மீதும் தெறித்தது! 

நிறைய ஆவணங்களைக் கொண்டுவந்து நம்மிடம் கொட்டியவர், ''ஒரு காப்பி உமக்கு... ஒன்று எனக்கு'' என்று எடுத்தபடியே ஆரம் பித்தார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கனிமொழி ஜாமீன் விவகாரத்தில், நான் சொன்னது மாதிரியே இழுவை அதிக மாகவே இருந்தது. ஜூன் 3-ம் தேதி கனி மொழிக்கு ஜாமீன் நிச் சயம் கிடைத்துவிடும் என்று கருணாநிதி காத்து இருந்ததையும், ஆனால் அன்றைய லிஸ்ட்டில் பெயர் வராத நிலையில் அப்செட் ஆன அவர், கிழக்குக் கடற்கரைச் சாலை யில் இருக்கும் மு.க.முத்துவின் கெஸ்ட் ஹவுஸில் போய்த் தங்கியதையும் கடந்த முறை

மிஸ்டர் கழுகு: ''என் மக மட்டும் கஷ்டப்படணுமா?''

சொன்னேன். 'மகளைச் சிறையில் வெச்சுட்டு என்னால பிறந்த நாள் கொண்டாட முடியாது’ என்று சொல்லிப் புது வேஷ்டி, சட்டையையும் மகள் செல்வியிடம் திருப்பித் தரும் அளவுக்கு சோகத்தின் உச்சியில் இருந்தார், கருணாநிதி.''

''ஜூன் 8-ம் தேதி, திடீரென்று தீர்ப்புச் சொல்லி விட்டாரே நீதிபதி?''

''டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அஜீத் பரிகோகே, மிகமிக சீரியஸான நீதிபதி என்கிறார் கள். ஜூன் 3 அன்று கோடை விடுமுறைக்காக அடைக்கப்படும் நீதிமன்றம், ஜூலை 4 அன்றுதான் திறக்கப்படும். இதனால், கனிமொழி மீதான மனு மீது ஒரு மாதத்துக்குத் தீர்ப்பு வராது என்றே நினைத்தார்கள். நீதிபதி அஜித் பரிகோகே, 'பொதுவான தீர்ப்புகளை எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் தள்ளிவைக்கலாம். ஆனால், ஜாமீன் மனு மீதான தீர்ப்பு உடனடியாகத் தரப்பட வேண்டும். இது ஒருவரின் உரிமை சம்பந்தப் பட்ட விஷயம்’ என்று சொல்லித் தேதி குறித்தாராம். ஜாமீன் மனு மீது தீர்ப்பு வரப் போகிறது என்று தெரிய வந்ததும், டெல்லியில் இருக்கும் ராஜாத்தி அம்மாள், கருணாநிதிக்கு அதிகமாக நெருக்கடி தர ஆரம்பித்தார். 'எப்படியாவது என் மகளை ஒரு வாரத்துக்குள் ஜாமீன் எடுங்கள். அவளால் உள்ளே இருக்க முடியாது’ என்று கறாராகச் சொல்ல... மூத்த வக்கீல் ஒருவர்தான், ஓர் ஆலோசனையைக் கருணாநிதிக்குச் சொன்னார்...''

மிஸ்டர் கழுகு: ''என் மக மட்டும் கஷ்டப்படணுமா?''

''என்னவாம்?''

'' தி.மு.க. எம்.பி-க்கள், ஜனாதிபதியைச் சந்தித்து மனு கொடுக்கலாம் என்பதுதான் அந்த ஆலோசனை. 'கனிமொழி எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.பி.! பொறுப்பான அரசியல் கட்சியில் அங்கம் வகிப்பவர். அவரது மனுவை நிராகரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கூட... கனிமொழியைப் பாராட்டிச் சில வரிகள் எழுதி உள்ளது. அவர் நீதிமன்ற நடவடிக்கைகளில் கண்ணியமாக நடந்துகொண்டார் என்று சொல்லி இருக்கிறது. அப்படிப்பட்டவரை நீண்ட நாள் சிறையில் வைத்திருக்கக் கூடாது. ஜனாதிபதிக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தை இந்த விஷயத்தில் பயன்படுத்த வேண்டும்’ என்ற அர்த்தம் தொனிக்கும் மனுவை ஆங்கிலத்தில் எழுதி கருணாநிதியிடம் ஒப்புதலும் வாங்கிவிட்டார்கள். 'ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்குத் தனிப்பட்ட முறையில் கனிமொழியை நன்கு தெரியும் என்பதால், அவரும் இதைப் பரிசீலிப்பார்’ என்றும் சொன் னார்கள். 8-ம் தேதி காலையில் அனைத்துத் தி.மு.க. எம்.பி-க்களும் டெல்லியில் இருப்பது மாதிரி உத்தரவும் போடப்பட்டது. ஆனால், 8-ம் தேதி காலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு என்றதும் இந்தச் சந்திப்பைத் தள்ளிப் போட்டார்கள்!''

''ஓஹோ!''

''நீதிபதி அஜித் பரிகோகே இப்படி ஒரு தீர்ப்பைத் தருவார் என்று கருணாநிதி எதிர்பார்க்கவில்லை! அன்று காலையில் கட்சியின் அமைப்புச் செயலாளர் கல்யாண சுந்தரம் இல்லத் திருமணத்துக்கு வந்தவர், வாடிய முகத்துடன்தான் காணப்பட்டார். அந்த நேரம் பார்த்து ஆங்கில சேனல் நிருபர் ஒருவர், 'கனிமொழி விஷயத்தில் தீர்ப்பு வரப் போகிறது. தி.மு.க. தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டார். கருணாநிதிக்குச் சொல்லவா வேண்டும்? 'அமைதியாக இருங்கள்... சாக்கடையின் துர்நாற்றம் இப்போது வீசுகிறது. அடுத்து சந்தனம் மணக்கும். அதுவரையில் பொறுத்து இருங்கள்’ என்றார்...''

''இதற்கு என்ன அர்த்தம்?''

''கருணாநிதிக்குத்தான் தெரியும்! அவரது மனசு எவ்வளவு நொந்துபோய் இருக்கிறது என்பதற்கு உதாரணம் இது! அடுத்த சில நிமிடங்களில், டெல்லியில் இருந்து தீர்ப்பு வந்தது. கனிமொழிக்கு ஜாமீன் கொடுக்காததைவிட நீதிபதி சொல்லி இருக்கும் வார்த்தைகள்தான் கருணாநிதியை இன்னும் கொந்தளிக்க வைத்தது. 'கனிமொழிதான் கலைஞர் டி.வி-யின் துடிப்பான பங்குதாரர். அந்த சேனலின் மூளை அவர்தான். ஆ.ராசாவை 2009-ம் ஆண்டு மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆக்கியவரே கனிமொழிதான். இப்போது சிறையில் இருக்கும் ஆ.ராசாவும், கனிமொழியும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். மத்திய அரசாங்கத்தில் கனிமொழி சார்ந்த கட்சியும் ஆட்சியில் பங்கேற்கிறது. இப்படி வலுவான அரசியல் செல்வாக்கும், பணபலமும் இருப்பதால் வெளியில் வந்து சாட்சிகளைக் கலைப்பார். அதனால், ஜாமீன் வழங்க முடியாது’ என்று நெத்தியடி வார்த்தைகளைச் சொல்லி இருக்கிறார் நீதிபதி. 'சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனாலும் சிக்கலான பல விஷயங்களை ஞாபகப்படுத்திக் காட்டும் தீர்ப்பாக இது உள்ளது’ என்கிறார், டெல்லி வக்கீல் ஒருவர்!''

''இந்தத் தீர்ப்பைக் கேட்டதும் ராஜாத்தி அம்மாள் அழுது தீர்த்துவிட்டாராமே?''

''டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வந்து உட்கார்ந்து இருந்தவர்களில் ராஜாத்தி அம்மாளும் ஒருவர். மகளுக்கு ஜாமீன் கிடைக்காத வருத்தம் மேலிட அவர் அழுதது அனைவருக்கும் தெரியும். அடுத்து சென்னைக்கு போனைப் போட்டு, 'அதைச் செய்துட்டோம், இதைச் செய்துட்டோம்னு எனக்கு ஆசை வார்த்தை சொன்னாங்க. எதுவுமே நடக்கலை. என்னையும் என் மகளையும் மட்டும் மொத்தமாக முடக்குறதுக்கு எல்லா வேலையும் பார்க்கிறாங்க. என் மக மட்டும் கஷ்டப்படணுமா?’ என்று கொந்தளித்தாராம். கருணாநிதி யால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், அவரது அத்தனை கோபங்களும் தயாநிதி மாறனை முன் வைத்துச் சுழல ஆரம்பித்துள்ளது...''

''தயாநிதி மாறன் விஷயத்துக்கு வாரும்!'' என்று நாம் சொன்னதும், ஜூ.வி. ஃபைலைக் கேட்டு வாங்கி, மூன்று நான்கு இதழ்களைத் தாண்டித் திருப்பினார், கழுகார். அதில் உள்ள வாசகங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.

''தயாநிதி மாறன்  சிக்கலில் மாட்டிக்கொண்டு இருப்பதை உமக்கு அப்போதே சொன்னேன்! நீரும் அதை விரிவாக வெளியிட்டீர். வாசிப்பதைக் கேளும். அதுதான் இப்போது நடக்க ஆரம்பித்து இருக்கிறது. 'இன்னும் சில தலைவலிகள் கருணாநிதிக்குக் காத்திருப் பதாகச் சொல்கிறார்கள் டெல்லியில். ஜூலை மாதக் கடைசியில்தான் ஸ்பெக்ட்ரம் வழக்கின் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் தி.மு.க. பிரமுகர்கள் வேறு யார் யார் பெயர் நுழைக்கப்படுமோ என்ற கவலை கருணாநிதிக்கு. சோனியாவைக் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தயாநிதி மாறன் சந்தித்துப் பேசியதும், அதன் தொடர்ச்சியாக சென்னை வந்த அவர், சனிக்கிழமை அன்று கருணாநிதியைச் சந்தித்ததும், அதிக வதந்திகளைக் கிளப்பி உள்ளது. சி.பி.ஐ. தேடும் விஷயத்தில் தயாநிதி மாறன் சம்பந்தப்பட்ட சில விஷயங்களும் இருக்கலாம். தொலைத் தொடர்புத் துறை விவகாரங்களைத் தனித்தனியாகப் பிரித்து, வெவ்வேறு குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்தால்தான் குழப்பம் இல்லாமல் வழக்கு நடத்தவும் முடியும். குற்ற​வாளிகள் தப்பிக்காமல் இறுக்கிப் பிடிக்கவும் முடியும்’ என்று சொல்லி இருந்தேன். அந்த மூன்றாவது குற்றப் பத்திரிகையை நோக்கிய மூவ்தான் தயாநிதி மாறன் தொடர்புடையவை...''

''ஏர்செல்லின் முன்னாள் தலைவர் சிவசங்கரனின் வாக்குமூலங்களை அதற்கு அடுத்த இதழில் விரிவாக எழுதி இருந்தோமே?''

''தயாநிதி மாறனைச் சுற்றி இருக்கும் வலை லேசானது அல்ல என்றே டெல்லித் தகவல்கள் சொல்கின்றன! ஆ.ராசாவை மையமாக வைத்து, ஸ்பெக்ட்ரம் வழக்கு முளைத்தபோது தயாநிதி பெயரைச் சொல்லிப் பரபரப்புக் கிளப்பினார், பி.ஜே.பி. ஆட்சியில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி. மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷன் முன் ஆஜரான அருண்ஷோரி, 'ஏர்செல் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு கொடுப்பதில் முறைகேடு நடந்து உள்ளது’ என்று ஒரு தீயைக் கொளுத்திப் போட்டார். 54 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில், தயாநிதியைப் பற்றிய விஷயங்கள் தீயாய் கிளம்பியது. அருண்ஷோரியின் இந்த அறிக்கையை சிவராஜ் பாட்டீல் சும்மா வைக்காமல் சி.பி.ஐ. கையில் தூக்கிக் கொடுத்தாராம். இதை சி.பி.ஐ. தனது பார்வையால் நோட்டம்விட்டு, ஏர்செல்லின் முன்னாள் தலைவர் சிவசங்கரனை லைனில் பிடித்தது. 'ஏர்செல்லின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிம் நிறுவனத்துக்கு தன்னைக் கட்டாயப்படுத்தி விற்க வைத்தார்கள்’ என்ற பகிரங்கக் குற்றச்சாட்டை சிவசங்கரன் வைத்தார். 'இதை எங்களிடம் வாக்குமூலமாகத் தர முடியுமா?’ என்று சி.பி.ஐ. சொன்னதற்கும், சிவசங்கரன் சம்மதித்தார். அதனால், மே 18-ம் தேதி சி.பி.ஐ. முன்னால் ஆஜராகி, சிவசங்கரன் வாக்குமூலம் அளித்தார். அவை அனைத்தும் தயாநிதி மாறனுக்கு எதிராக இருப்பதை நீரே மூன்று பக்கக் கட்டுரையாக இரண்டு இதழ்களுக்கு முன்னால் வெளியிட்டு இருந்தீர்...''

''அடுத்து என்ன நடந்தது?''

''ஜூன் 6-ம் தேதி காலை 11 மணிக்கு மறுபடியும் சிவசங்கரனை சி.பி.ஐ. அழைத்தது. அன்றைய தினம் தனது வாக்குமூலத்தை முறைப்படி பதிவு செய்து கையெழுத்தும் போட்டுத் தந்தாராம் சிவசங்கரன். அந்த விஷயத்தை கடந்த இதழில் சொல்லி இருந்தேன்.''

''அதுசரி,  தயாநிதி மாறனைக் கை கழுவுவது மாதிரி கருணாநிதி பேச ஆரம்பித்து உள்ளாரே?''

மிஸ்டர் கழுகு: ''என் மக மட்டும் கஷ்டப்படணுமா?''

''8-ம் தேதி காலையில் அறிவாலயத்துக்குக் கிளம்பும்போது, தயாநிதி மாறனைப் பற்றிக் கேட்டார்கள். 'அதுபற்றி எனக்குத் தெரியாது’ என்று சொன்னார். அறிவாலயத்தில் கல்யாணசுந்தரம் வீட்டுக் கல்யாணத்தை முடித்து வைத்துவிட்டுக் கிளம்பியவரிடம் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்கள். 'இந்த வழக்கைத் தயாநிதி மாறனே சந்திக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார். நான் அதைப் பற்றி எதுவும் சொல்வதற்கு இல்லை’ என்று சொன்னார். இதை வைத்துதான் தயாநிதியைக் கருணாநிதி கைகழுவுவதாக நீர் சொல்கிறீரா?''

''ம்!''

''அருண்ஷோரியின் அறிக்கை, சிவசங்கரனின் வாக்குமூலம் இதை வைத்துத் தன் சிக்கலின் வீரியத்தை தயாநிதி மாறன் உணர்ந்தார். அதனால்தான் சோனியா, பிரதமர், நிதி அமைச்சர் பிரணாப், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோரை சந்தித்தார். கடைசியாக கருணாநிதியையும் வந்து பார்த்துச் சென்றார். சோனியா சந்திப்பைத் தொடர்ந்து, 'காங்கிரஸில் சேரப் போகிறார்’ என்றார்கள். 'என்னால் எதுவும் செய்ய முடியாது’ என்று பிரதமர் கைவிரித்ததாகச் சொல்கிறார்கள். பிரணாப் இவரைச் சந்திக்க மறுத்தார் என்கிறார்கள். கபில்சிபலின் பதில் தயாநிதிக்கு திருப்தியைத் தரவில்லையாம்!''

''கருணாநிதியைச் சந்தித்தபோது...?''

''இன்றைய மொத்தச் சிக்கல்களுக்கும் தயாநிதி மாறன்தான் காரணம் என்று கருணாநிதி நினைக் கிறாராம். அவர் மனதில் அந்த எண்ணத்தை ராஜாத்தி அம்மாள்தான் அதிகமாக விதைத்ததாகச் சொல்கிறார்கள். 'எல்லாத்தையும் ஆரம்பிச்சுட்டு... இப்போ அது அவங்களுக்கே திரும்பிடுச்சு, பார்த்தீங்களா’ என்று தி.மு.க. மூத்த பிரமுகர் கமென்ட் அடிக்கும் அளவுக்குக் கட்சியிலேயே இந்த சிக்கலை பலரும் ரசிக்கிறார்கள்...''

''சாக்கடை நாறுகிறது என்று கருணாநிதி சொன்னது இதைத்தானா?'' என்று நாம் கேட்டோம்!

லேசாகச் சிரித்த கழுகார் தொடர்ந்தார்...

''இன்றைய நிலையில் தயாநிதி மாறனுக்கு ஸ்டாலினும், செல்வியும் மட்டும்தான் வெளிப்படையான ஆறுதலைத் தருகிறார்களாம். ஆனால், இது கருணாநிதிக்குப் பிடிக்கவில்லையாம். ஜூலை 6-ம் தேதி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுக்கு சி.பி.ஐ. அறிக்கை தரவேண்டும். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கூடப்போகிறது. ஜூலை இறுதியில் சி.பி.ஐ. தனது மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதாக சுப்ரீம் கோர்ட்டில் வாக்குறுதி கொடுத்துள்ளது. இந்தச் சுழல், தயாநிதி மாறனுக்காக மட்டுமே சுழல்வதாக டெல்லித் தகவல்கள் சொல்கின்றன!'' என்று கெடு தேதிகளையும் அடுக்கிவிட்டு மேலே எகிறினார் கழுகார்.

படம்: வி.செந்தில்குமார்

மிஸ்டர் கழுகு: ''என் மக மட்டும் கஷ்டப்படணுமா?''
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism