Published:Updated:

வெடி வைத்தவர்களால் மட்டும் அல்ல வெளியூர் சென்றவர்களாலும் மாசு அதிகரித்திருக்கிறது

வெடி வைத்தவர்களால் மட்டும் அல்ல வெளியூர் சென்றவர்களாலும் மாசு அதிகரித்திருக்கிறது
News
வெடி வைத்தவர்களால் மட்டும் அல்ல வெளியூர் சென்றவர்களாலும் மாசு அதிகரித்திருக்கிறது

வெடி வைத்தவர்களால் மட்டும் அல்ல வெளியூர் சென்றவர்களாலும் மாசு அதிகரித்திருக்கிறது

தீபாவளியை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் பட்டாசுகளால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசு அளவை மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் சில தனியார் அமைப்புகளும் ஆராய்ந்து வந்தன. அதன்படி தீபாவளி அன்று ஏற்பட்ட காற்று மற்றும் ஒலி மாசுவின் அளவை கீழே பார்க்கலாம்.

வ.எண் இடங்கள் தீபாவளி
2014 2015 2016
1 திருவல்லிக்கேணி 297 90 177
2 பெசன்ட் நகர் 110 88 162
3 நுங்கம்பாக்கம் 180 131 178
4 சௌகார்பேட்டை 196 93 178
5 தியாகராயநகர் 180 126 113

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த மூன்று ஆண்டுகளின் தீபாவளி நாட்கள் மேலே ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு தீபாவளி மழையால் பாதிக்கப்பட்டதால், மாசு அளவு மிகக் குறைவாகவே இருந்தது. ஆகையால் 2014 மற்றும் 2016-ம் ஆண்டை ஒப்பீடு செய்து பார்ப்பதே சரியான முடிவுகளை கொடுக்கும்.

சென்னை மாநகரில் 5 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 2014-ம் ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு காற்று மாசின் அளவு சற்று குறைந்தே பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் மற்றும் செளகார்ப்பேட்டையில் 178 மைக்ரோகிராம் மிதக்கும் நுண்துகள்களின் (RSPM) அளவு பதிவாகியுள்ளது. குறைந்த அளவாக தியாகராய நகரில் 113 மைக்ரோகிராம் அளவு மாசு ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துமே அனுமதிக்கப்பட்ட அளவான 100 மைக்ரோகிராமை விட அதிகம். ஆனால் 2014-ம் ஆண்டோடு ஒப்பிடும்போது 7 முதல் 40 சதவிகிதம் வரை குறைவு என்கிறது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம். மேலும், மக்களிடம் ஓரளவு விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளதை இந்த டேட்டா மூலம் தெரிந்து கொள்ள முடிவதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான கியான்ட் புயலின் தாக்கத்தால் தீபாவளி அன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. ஒருவேளை மழை இருந்திருந்தால் மாசு அளவு மேலும் குறைந்திருக்கக் கூடும்.


 

வ.எண் இடங்கள் தீபாவளி
2014 2015 2016
1 திருவல்லிக்கேணி 83 81 88
2 பெசன்ட் நகர் 73 83 72
3 நுங்கம்பாக்கம் 83 79 81
4 சௌகார்பேட்டை 83 93 80
5 தியாகராயநகர் 80 126 81

ஒலி மாசு பொருத்தவரையில் மிகச் சிறிய அளவு மாற்றங்களே ஏற்பட்டுள்ளது மேலே உள்ள டேட்டாக்களில் தெரியும். அனுமதிக்கப்பட்ட ஒலி மாசின் அளவு 55 டெசிபல்கள். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி அன்று அதிகபட்சமாக திருவல்லிக்கேணியில் 88 டெசிபல் ஒலி மாசு இருந்துள்ளது. 2015-ம் ஆண்டு தியாகராய நகரில் 126 டெசிபல் பதிவானதே கடந்த மூன்று தீபாவளிகளிலும் அதிக அளவு. 2014-ம் ஆண்டு அதிகபட்ச ஒலி மாசு அளவு 83 டெசிபல்கள். இந்த தீபாவளி நாளில் இரவு 8 முதல் 10 மணி வரை அதிக ஒலி மாசு ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தீபாவளி என்றால் பட்டாசு மாசு என்ற கண்ணோட்டத்தில் மட்டும் ஆர்வம் செலுத்திய நமக்கு, இந்த பக்கமும் கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள் என்கிறது கீழே உள்ள டேட்டா.

 


 

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை அமெரிக்க தூதரகத்தின் தகவலின் படி, ஆலந்தூர், ஐ.ஐ.டி, ஜெமினி மேம்பாலம், கிண்டி சிட்கோ ஆகிய பகுதிகளில்  தீபாவளி வாரத்தில் ஏற்பட்ட மாசு அளவின் கணக்கீடுதான் நீங்கள் மேலே பார்த்தது. காற்று தர குறியீட்டின்படி (Air Quality Index) இந்த அளவீடுகள் தரப்பட்டுள்ளன. காற்று தர குறியீடு என்பது, காற்றில் அனைத்து வகையான நுண் துகள்கள்களையும், நச்சு வாயுக்களையும் சேர்த்து கணக்கிடப்பட்ட அளவு.

தீபாவளி அன்று ஏற்பட்ட மாசு அளவைக் காட்டிலும், தீபாவளிக்கு முந்தைய இரண்டு நாட்களில் சில இடங்களில் காற்று மாசு மிக அதிகமாக இருந்திருக்கிறது.

தீபாவளியைக் கொண்டாட கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் 27 மற்றும் 28-ம் தேதி சென்னையிலிருந்து படையெடுத்தனர். நூற்றுக்கணக்கான அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், கார் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னைக்குள் வரவும், வெளியேறவும் செய்தன. இதனால் சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அது எவ்வளவு நேரம் நீடித்தது என்பதை பெருங்களத்தூர் டிராபிக்கில் சிக்கி, வெந்து வெளியூர் சென்றவர்களுக்குத் தெரியும். இதனாலும் காற்றில் மாசு அளவு அதிகரித்திருக்கிறது.

ஆக வெடி வைத்தவர்களால் மட்டும் அல்ல வெளியூர் சென்றவர்களாலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. ஆனால், இதற்கான முழு பொறுப்பை அரசு தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சென்னையில் சாதாரண நாட்களில் இந்த அளவு காற்று மாசு அளவு பதிவாவது இல்லை. விழாக்காலங்களிலும் தொடர் விடுமுறை நாட்களிலும் இந்த திண்டாட்டத்தை சென்னை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது. பட்டாசுகளால் ஏற்படும் மாசினை குறைக்க மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறும் அரசுக்கு, விழாக்காலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விஷயத்தில் இன்னும் விழிப்பு உணர்வு தேவைப்படுகிறது என்பதை மேலே உள்ள டேட்டா வெளிச்சமிட்டு காட்டுகிறது.

- ரெ.சு.வெங்கடேஷ்