உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி கடிதம் எழுதுவது போலவே, முரசொலியில் 'உங்களில் ஒருவன்’ என்று கழகத்தினருக்குக் கடிதம் எழுதும் ஸ்டாலின், தெருமுனை பிரசார கூட்டங்களை நடத்தும்படி தி.மு.க. இளைஞர் அணியினருக்கு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, 'கடந்தகால தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையும் நிகழ்கால அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களையும் விளக்கி 5 நாட்களில் 5 ஆயிரம் தெருமுனைக் கூட் டங்கள் நடத்த வேண்டும்’ என்பதுதான் ஸ்டாலின் இட்ட கட்டளை. 'வருங்காலத் தமிழகம்’ இட்ட கட்டளையை நிறைவேற்றிக் காட்டி விட்டார்களாம் இளைஞர் அணியினர். இதையறிந்து உற்சாகமடைந்த ஸ்டாலின் இளை ஞர் அணியின் நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து விருந்து கொடுத்துப் பாராட்டி அனுப்பி இருக்கிறார்.

தி.மு.க. இளைஞர் அணியினரின் இந்த திடீர் உற்சாகம் குறித்தும், இந்தத் தெருமுனைப் பிரசார

கூட்டங்கள் குறித்தும், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மா.சுப்பிரமணியம் நம் மிடம் பேசினார்.

''தளபதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் செப்டம்பர் 14-ம் தேதி, சென்னையில் நடந்தது. 'கலைஞர் ஆட்சியின் சாதனைகளையும் ஜெயலலிதா ஆட்சியின் அவலங்களையும் தெருமுனை பிரசார கூட்டங்கள் மூலம் மக்களிடம் எடுத்துச் சென்று விளக்க வேண்டும்’ என்று தளபதி கூறினார். செப்டம்பர் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 5 நாட்களில் ஒரு நாளைக்கு ஆயிரம் தெருமுனைப் பிரசார கூட்டங்கள் என மொத்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களை ஐந்தே நாட்களில் நடத்தினோம்.

'நாம் மக்களைத் தேடி-மக்கள் நம்மை நாடி’ என்ற தலைப்பில் தளபதி ஸ்டாலின் தெருமுனை பிரசாரக் கூட்டங்களை நடத்த ஆணையிட்டார். பிரபலமான பேச்சாளர்களை தவிர்த்து, 2-ம் கட்டப் பேச்சாளர்களில் 93 பேர் இந்தத் தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில் பேசினர். மாவட்டந்தோறும் நடைபெற்ற தெரு முனைக் கூட்டங்களை ஒருங்கிணைக்க மாநில துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆரணி ஒன்றியம் நெசல் என்ற இடத்தில் தெருமுனைக் கூட்டம் நடந்தது. அந்த இடத்தில்தான் 1967-ம் ஆண்டு தேர்தலில் பேரறிஞர் அண்ணா பேசினார் என்று முன்னாள் எம்.எல்.ஏ சிவானந்தம் கூறி னார். அந்தத் தேர்தலில் தி.மு.க. 137 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

நகரங்களைத்தாண்டி சிறிய குக்கிராமங்களுக்கும் காலனி பகுதிக்கும் சென்று மக்களைச் சந்திக் கும் வாய்ப்புக் கிடைத்ததோடு மக் களின் மனநிலையையும் நேரில் அறிய முடிந்தது. இளைஞர் அணிக்கு இது நல்ல ஆரம்பம்!'' என்று உற்சாகத்துடன் கூறினார்.

கூட்டங்களில் கலந்துகொண்ட பேச்சாளர்கள் சிலரிடம் பேசியபோது, ''ஜெயலலிதாவின் நிர்வாகச் சீர்கேடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, வழிப்பறி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மின்வெட்டு, வேலையில்லா திண்டாட்டம் என்று மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்னைகளை பேசினோம். துண்டுப் பிரசுரமாகவும் அச்சிட்டுக் கொடுத்தோம். மாற்றுத்திறனாளிகளுக்கும், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கும் கலைஞர் அரசும் தளபதியும் செய்ததை எடுத்துச் சொன்னோம். ஜெயலலிதா அரசு பொறுப்பு ஏற்றபிறகு மகளிர் சுய உதவிக் குழுக்கள் எதுவும் புதிதாக தொடங்கப்படவே இல்லை. கிராமங்களில் எந்த அடிப்படை கட்டமைப்பு பணிகளையும் செய்யவே இல்லை. தளபதி உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் இருந்து செய்த பணிகளைத்தான் எல்லாக் கிராமங்களிலும் பார்க்க முடிகிறது. அதை மக்களுக்கு ஞாபகப் படுத்தினோம்.

நாடே பாராட்டும் வகையில் 600 கோடி ரூபாயில் வரலாற்றுப் பெட்டகமாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலக புதிய கட்டடத்தை புதர்மண்டச் செய்து விட்டார் ஜெயலலிதா. அறிவுக்கண் திறக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் கவனிப்பாரற்று கிடக்கிறது. செம்மொழி ஆய்வு மையத்தை கவனிக்க நாதி இல்லை. 58 ஏக்கர் நிலப்பரப்பில் 19 கோடியில் கட்டப்பட்ட தொல்காப்பியர் பூங்காவை, அடையாறு பூங்கா என்று பெயர் மாற்றியதோடு மட்டுமல்லாமல் பொதுமக்கள் பார்வைபடாமல் மூடி வைத்துள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பயன்பட்ட சுற்றுச்சூழல் பூங்காவுக்குப் பூட்டு போடப்பட்டுவிட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 1,800 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட மதுரவாயல்-துறைமுகம் எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்துக்கு மூடுவிழா நடத்த முனைப்பு காட்டுகிறார்கள். அதற்காகக் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான தூண்கள் காட்சிப் பொருளாக நிற்கின்றன. உதாரணமாகச் சொல்ல வேண்டும் என் றால், தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதற்காக நெடுஞ்சாலைத் துறையில் 9,300 கோடி அளவுக்கான 10 திட்டங்கள் முடக்கப் பட்டுள்ளன. பெங்களூருவில் நடக்கும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு எதிராக வாதாட வேண்டிய வக்கீல் பவானி சிங் அவர்களே, அந்தப் பதவியில் நீடிக்க வேண்டும் என்று

குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவே திரும்பத்திரும்ப முயற்சி செய்கிறார். தெருமுனை கூட்டங்களில் அதையெல்லாம் மக்களிடம் சொன்னோம்'' என்றார்.

இந்தக் கூட்டங்கள் பற்றிய தகவலைகளை ஸ்டாலின் தினமும் கேட்டுவந்தாராம். 'நாம் நினைத்தைவிடச் சிறப்பாக செய்துள்ளனர்’ என்று சொன்ன ஸ்டாலின், முக்கியப் பொறுப்பாளர்களைச் சென்னைக்கு அழைத்து இருந்தார். அனைவரும் கடந்த 9-ம் தேதி அன்பகத்தில் கூடினர். அனைவருக்கும் விருந்து வைத்த ஸ்டாலின், 'பேச்சாளர்கள் இன்னும் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று அறிவுரையும் சொல்லி அனுப்பிவைத்தாராம்.

தி.மு.க-வுக்கு புதிய பேச்சாளர்கள் நிறையக் கிடைத்துவிட்டனர்!

- எஸ்.முத்துகிருஷ்ணன்