கழுகார், அலுலகத்துக்குள் நுழையும்போது வானம் இருண்டு மழை கொட்ட ஆரம்பித்திருந்தது!

''பருவநிலை மாறுவதுபோலத் தெரி கிறதே!'' என்றோம். ''அரசியல் பருவ நிலையும் அப்படித்தான்'' என்று பொடிவைத்து ஆரம்பித்தார் கழுகார்.

''தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கரு ணாநிதி அனுப்பிய கடிதம் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதில் பல கட்சித் தலைவர்கள் குழம்பிப்போனார்கள். பலரும் கருணாநிதியைக் கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டனர். ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று தி.மு.க. முடிவெடுத்து விட்டது. ஆனால், தங்களை ஆதரிக்க யாரும் இல்லை என்பதுதான் கருணாநிதியின் கவலை. 'ஏற்காடு இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால், அது நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வெற்றி பெற்றால், அது நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும்’ என்று கருணாநிதி நினைக்கிறார். இன்றைய நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் மட் டும்தான் தி.மு.க-வை ஆதரிக்கிறது. காங்கிரஸின் முடிவும் கடைசி நேரத்தில்தான் தெரியும். எனவே, மிகமோசமான அளவில் குறைவான வாக்குகளை வாங்கி விடக்கூடாது என்றும் கருணாநிதி நினைக்கிறார்.''

''அதனால்தான் அனைத்துக் கட்சித் தலைவர் களுக்கும் கடிதம் அனுப்பினாரா?''

''காங்கிரஸ், தே.மு.தி.க., பி.ஜே.பி., இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ம.க. ஆகிய கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளுக்கும் இந்தக் கடிதம் போயுள்ளது. அ.தி.மு.க-வுக்கும் ம.தி.மு.க-வுக்கும்தான் கருணாநிதி கடிதம் அனுப்பவில்லை.''

''ம.தி.மு.க. மீது என்ன கோபமாம்?''

''எல்லாம் பழைய கோபம்தான். இன்றும் கருணாநிதியை கடுமையாக அட்டாக் செய்துவருவது வைகோதானே. அதனால் அனுப் பவில்லையாம். 'வைகோவுக்கு அனுப்பக் கூடாது என்று தெரிந்த கருணாநிதிக்கு, அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட்களுக்கு அனுப்பக் கூடாது என்பது எப்படித் தெரியாமல் போனது?’ என்றாராம் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர். 'எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர், இப்படியா எல்லாருக்கும் கடிதம் அனுப்புவது?’ என்றாராம் இன்னொரு தலைவர்!''

''பி.ஜே.பி-க்கும் கடிதம் அனுப்பியிருக்கிறாரே கருணாநிதி?''

''மோடியின் திருச்சி வருகைக்குப் பிறகு தி.மு.க-வின் பார்வை பி.ஜே.பி. மீதும் படர ஆரம்பித்துள்ளது. 'மோடிக்கு திருச்சியில் எவ்வளவு கூட்டம் வந்தது? எவ்வளவு வாகனங் கள் வந்திருந்தன?’ என்று கருணாநிதி கேட்டதாக அப்போதே சொல்லியிருந்தேன். சமீபத்தில், முன்னாள் அமைச்சர்கள் இரண்டு மூன்று பேர் இருந்தபோதும், பி.ஜே.பி-யைப் பற்றி பேச்சு வந்துள்ளது. 'மோடி அலை தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. அவர்களோடு கூட்டணி அமைத்தால்தான் வெற்றிபெற முடியும்’ என்று அமைச்சர் ஒருவர் சொல்ல, 'அவங்க நம்மோடு வருவாங்களான்னு தெரியலையே... எல்லாருக்கும் முன்னால போயி வைகோ துண்டைப் போட்டுட்டாரே’ என்று இவர்கள் பேசிக்கொண்டார்களாம். 'இப்போதைக்கு நாம எதையும் முடிவு செய்ய முடியாது. அப்படி ஏதாவது செய்தால், காங்கிரஸ் வேறமாதிரி ரியாக்ஷன் காட்டும். அதனால், அமைதியாக இருப்போம். தேர்தல் நெருங்கும்போது பார்த்துக் கொள்வோம்’ என்றாராம் கருணாநிதி!''

''இதை வைத்துத்தான் பருவநிலை மாற்றம் என்றீரா?''

''கடந்த இதழில், ப.சிதம்பரத்துடன் அ.தி.மு.க. அமைச்சர் தாமோதரன் பங்கேற்றதை வைத்து அங்கும் பருவ மாற்றம் நடக்கும் சூழ்நிலை என்று சொன்னேன் அல்லவா? கன்னியாகுமரி விழாவில் கேரள காங்கிரஸ் அமைச்சருடன் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். மதுரையில் ஒரு விழாவில் மத்திய காங்கிரஸ் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனுடன் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டுள்ளார். இதையெல்லாம் வைத்துதான் அரசியல் காரணம் சொல்லப்படுகிறது. 'மத்திய அரசு பல்வேறு நிதிகளை நிறுத்தி வைத்துள்ளது. அவை எல்லாம் வந்தால்தான் தேர்தல் நேரத்தில் பயனுள்ளதாக இருக்கும். அதனால்தான் மத்திய அரசுடன் சமாதானமாகப் போக முதல்வர் விரும்புகிறார். அதனால்தான் பிரதமருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னார்’ என்கிறார்கள். 'ப.சிதம்பரத்தின் விழாவில் கலந்துகொள்ளச் சொல்லி கவர்னர் அலுவலகத்தில் இருந்தும் தாக்கீது போனது’ என்கிறார்கள். கவர்னரும் சிதம்பரமும் அதிக நட்பு கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்தது.''

''அரசியல் இல்லை, நாட்டு நலன்தான் என்கிறீரா?''

''எப்படிப் போகிறது என்று காத்திருந்து கவனிப்போம்!

டாக்டர் ராமதாஸ், சமுதாய அமைப்புகளைத் திரட்டி அணிச் சேர்க்கை அமைக்க இருப்பது பற்றி உமது நிருபர் கடந்த இதழில் எழுதி இருந்தாரே...''

''தேசிய, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறாரா ராமதாஸ்?''

''அப்படித்தான் தெரிகிறது. பி.ஜே.பி., தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகியவற்றுடன் கூட் டணி அமைக்க இருப்பவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன், ராமதாஸையும் சந்தித் துள்ளனர். 'இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பி.ஜே.பி., தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய நான்கு கட்சி களுடன் கூட்டணி இல்லை என்று முடிவு எடுத்து விட்டேன். இந்தத் தேர்தலில் எங்களை நம்பி மட்டுமே நிற்கிறேன்’ என்று உறுதியாகச் சொல்லி விட்டாராம் ராமதாஸ்.''

''அப்படியா?''

''சென்னை தியாகராய நகரில் பாட்டாளி இளைஞர் சங்கம் மற்றும் தமிழக மாணவர் சங்கம் ஆகியவற்றின் மாநில செயற்குழுவையும் நடத்தி இருக்கிறார் ராமதாஸ். இந்தக் கூட்டம் ரகசியமாக நடந்தது. வரும் நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி இந்தக் கூட்டத்தில் பேசியிருக்கின்றனர். அங்கும் ராமதாஸ் இதைத்தான் பேசியிருக்கிறார். இளைஞர் அணியிடம் பா.ம.க. முழுக்க முழுக்க ஒப்படைக்கப்பட்டு விட்டது. இளைஞர்களை நம்பித்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இளைஞர்களுடைய ஆற்றல், அறிவு, நம்பிக்கை ஆகியவை இணைந் தால் பா.ம.க எளிதாக வெற்றிபெற முடியும். நாம் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துதான் போட்டியிடப் போகிறோம். இந்தத் தேர்தலில் சமூக வலைத்தளங்கள் முக்கியப் பங்கு வகிக்கும். நாமும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் நாம் குறைந்தது 15 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும். இன்னும் சில நாட்களில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். வேலூர் கோட்டை மைதானத்தில் வரும் நவம்பரில் ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் மாநில மாநாடு நடத்தப்படும்’ என்று, ராமதாஸ் உற்சாகமாகப் பேசி யிருக்கிறார்.''

''அன்புமணி போட்டியிடுவாரா?''

''நிச்சயமாக! ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி போன்றவர்களும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறலாம். சமுதாயத் தலைவர்களில் சிலரையும் வேட்பாளராக நிறுத்தலாம் என முடிவு செய்திருக்கிறார் ராமதாஸ்'' என்று சொல்லிய கழுகார், ''அ.தி.மு.க-வில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், நத்தம் விஸ்வ நாதனின் உறவினரும், மதுரை மேயர் ராஜன் செல்லப்பாவின் மகனும் வேட்பாளர்களாக களம் காணப்போவதாக அவர்களது நண்பர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர். 'அ.தி.மு.க-விலுமா வாரிசு அர சியல்?’ என்று கொந்தளிப்பு காட்டுகிறார்கள் பலர்'' என்றபடி கழுகார் பறந்தார்.

படங்கள்: சு.குமரேசன், ப.சரவணக்குமார்

உறுதியான மொழி!

சென்னை பெரியார் திடலில் கடந்த 5-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை மாநாடு நடந்தது. 'வன்முறைக்குத் துணியவும் மாட்டோம், வன்முறைக்குப் பணியவும் மாட்டோம், தீவிரவாதப் போக்குகளை திண்ணமாய் எதிர்ப்போம், தேசநலனை என்றும் காப்போம்...’ என்று உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. 'இந்தக் காலத்துக்கு ஏற்ற உறுதிமொழிகள்தான்’ என்றார்கள் மாணவர்கள்!

தொடரும் தியாகு!

'இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்’ என் பதை வலியுறுத்தி தோழர் தியாகு அக்டோபர் 1-ம் தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தது போலீஸ். அங்கும் போராட்டத்தைத் தொடர்கிறார்.

படுக்கையில் படுத்தபடியே, ''ஒன்பது கோரிக் கைகளுக்காக அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய எனது பட்டினிப் போராட்டம், 10-வது நாளாக தொடர்கிறது. என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எத்தனை நாட்கள் ஆனாலும், கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தை கைவிடமாட்டேன். யாருடைய வேண்டுகோளுக்காகவும் கைவிடப்போவதும் இல்லை. எனது குறைந்தபட்ச கோரிக்கைகளாவது ஏற்கப்பட வேண்டும். இப்போது எனது உடல்நிலை காரணமாக குளுகோஸ் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். வாய்வழியாக உட்கொண்டாலும், ரத்த நாளங்களில் எடுத்துக்கொண்டாலும் இரண்டுமே ஊட் டம்தான். எனவே, மறுத்து விட்டேன். எழுதித் தர சொன்னார்கள். எழுதியும் கொடுத்து விட்டேன். உடலில் சக்தி சற்று ஏற்ற இறக்கத்துடன்தான் உள்ளது. எனக்கு கவலைக்குரிய நிலை ஏற்பட்டாலும், நான் கவலைப்படப்போவது இல்லை. நினைவு இழக்கலாம் என எச்சரிக்கிறார்கள். என் நினைவு உள்ளவரை எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்'' என்று சொல்கிறார் தியாகு.

குட்டிச்சாத்தான் மை!

தென் மாவட்டத்து அமைச்சர் ஒருவர் எப்போதும் பையில் ஒரு திருநீறு பாக்கெட் வைத்துள்ளார். அடிக்கடி எடுத்து பூசிக்கொள்கிறார். அதேபோல் கேரளாவில் மந்திரித்த குட்டிச்சாத்தான் கறுப்பு மையையும் அடிக்கடி பூசிக்கொள்கிறார். கார்டனுக்குள் போகும்போதெல்லாம் அதைச் செய்கிறாராம். ஆனால் செல்லுபடி ஆகுமா எனத் தெரியவில்லை!

'இலவச பட்டாசு கேட்க வேண்டாம்!'

ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் சிவகாசி பட்டாசு ஆலைகளில் அரசு துறை அதிகாரிகள் ஓ.சி. பட்டாசுகள் வாங்கி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தங்களது உயர் அதிகாரிகளுக்கு அனுப்புவது வழக்கம். வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, தொழிலாளர் நலத் துறை, வணிகவரித் துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் என்று, அனைத்து துறையினரும் ஜீப்களோடு சென்று பட்டாசு ஆலைகளில் காத்திருந்து, பண்டல் பண்டலாக ஓ.சி. பட்டாசுகளை வாங்கி அனுப்புவார்கள். இதற்காக ஒவ்வொரு துறையிலும் ஒரு ஸ்பெஷல் டீம், ஜீப்களோடு சிவகாசியில் வலம்வருவதை கண்கூடாக பார்க்கலாம். ஆனால், 'இந்த ஆண்டு இலவச பட்டாசு கேட்க வேண்டாம்’ என்று அரசு அதிகாரிகளின் தலையில் குட்டு வைத்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளனர் பட்டாசு ஆலை உரிமையாளர்கள்.

'பட்டாசு தொழில் பல்வேறு சிரமங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடும் மன உளைச்சலில் இருக்கின்றனர். பட்டாசு மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துவிட்டது. இது இலவசமாகவோ மானிய விலையிலோ கிடைப்பது இல்லை. எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையை புரிந்துகொண்டு அனைத்துத் துறை அதிகாரிகள் யாரும் இலவச பட்டாசு கேட்டு எங்கள் மனதை புண்படுத்த வேண்டாம்’ என்று குறிப்பிட்டு, 'இப்படிக்கு தொழில் பாதிப்பால் மன உளைச்சலில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர் சங்கங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓ.சி. பட்டாசு கேட்டு அலையும் அரசு அதிகாரிகளின் மானத்தை வாங்கிவிட்டது இந்த இலவச பட்டாசு விளம்பரம்!