தேனி மாவட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே நடக்கும் பனிப் போர், உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான ஆலோசனைக் கூட்டம், ஆண்டிப்பட்டியில் கடந்த வாரம் நடந்தது. இதில் பேசிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தங்க தமிழ்ச்செல்வன் பெயரைச் சொல்லாததால், ஆத்திரமடைந்த அவருடைய ஆதரவாளர்கள், கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சரின் காரை மறித்து ரகளை செய்தனர். ''அவர் பெயரை யாரும் எழுதித் தரவில்லை. அதனால்தான் சொல்ல மறந்துட்டேன்'' என்று, மன்னிப்பு கேட்டார் ஓ.பன்னீர்செல்வம். ஆனாலும், பன்னீர் செல்வத்துக்கு எதிராக மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.

இந்த விவகாரம், முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குச் சென்றது. இதைத் தொடர்ந்து என்.கே.சக்திவேல், அ.தர்மராஜ், அ.புதுராஜா, ஓ.சின்னச்சாமி ஆகியோர் கட்சியை விட்டு நீக்கப் பட்டுள்ளனர். இவர்கள் தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி, தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்களிடம் பேசினோம். ''தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ்-ஸின் குடும்ப ஆட்சிதான் நடக்கிறது. கட்சியை விட்டு நீக்கப்பட்ட மன்னார்குடி மனிதர் ஒருவருடன் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இன்னும் நட்புடன்தான் இருக்கின்றனர். அவர் சொல்படிதான் ஓ.பி.எஸ். செயல்படுகிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, மாவட்டச் செய லாளர் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் பரிந் துரை செய்யாத ஓ.பி.எஸ்-ஸின் தம்பி ராஜாவை, பெரியகுளம் நகராட்சித் தலைவர் ஆக்கினார். தேர்தல் முடிவுகள் வெளியான போது, பன்னீர்செல்வம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு தங்க தமிழ்ச் செல்வன்தான் காரணம் என, அப்போது டி.எஸ்.பி-யாக இருந்த பன்னீர்செல்வத்துடைய மருமகனின், கல்லூரி நண்பரான சீனிவாசனை வைத்து உளவுத் துறை மூலம் தவறான அறிக்கை அனுப்பி, அவருடைய மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார் பன்னீர்செல்வம்.

பிறகு, கட்சிக்குச் சம்பந்தமே இல்லாத, கட்சி நடத்திய போராட்டங்களில் பங்கேற்காத சிவகுமாரை, தன்னுடைய ஆதரவாளர் என்ற ஒரே காரணத்துக்காக மாவட்டச் செயலாளர் ஆக்கினார். 2008-ல் இளைஞர், இளம்பெண்கள் பாசறையை முதல்வர் அறிவித்தபோது, கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் இருக்க தன் மூத்தமகன் ரவீந்திரநாத் குமாரை, பாசறையின் மாவட்டச் செயலாளர் ஆக்கினார். ரவீந்திரநாத் குமார், கட்சிப் பணிகளை கவனிப்பதில்லை என்று புகார் அனுப்பிய பாசறையைச் சேர்ந்த சேரலாதன் என்பவரை, கட்சியைவிட்டு நீக்கியதோடு, அவர் மீது பொய்வழக்குப் போட்டு சித்ரவதை செய்தார்.தூத்துக்குடி சரவணபெருமாள் மீது ஏகப்பட்ட குற்ற வழக்குகள் இருந்தும் அவருக்கு ராஜ்யசபா வேட்பாளர் ஸீட் வாங்கிக் கொடுத்தார். பிறகு அம் மாவுக்கு உண்மை தெரிந்து சரவணபெருமாளை தூக்கி எறிந்தார்.

அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ். குடும்ப அரசியலில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆட்சியில் நிதி அமைச்சர், கட்சியில் பொருளாளர் மற்றும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளை பன்னீர்செல்வம் வகிக்கிறார். அவருடைய மூத்தமகன் ரவீந்திரநாத் குமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர். அவரது தம்பி ஓ.ராஜா, பெரியகுளம் நகராட்சித் தலைவர். சம்பந்தி செல்லப்பாண்டியன் தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல், மருமகன் காசிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஸ்டேண்டிங் கவுன்சில் வழக்கறிஞர். செல்லப் பாண்டியனின் தம்பி தங்கராஜ், தென்மாவட்ட நிதி நிறுவனங்களின் அரசு வழக்கறிஞர். ஓ.பி.எஸ்-ஸின் தங்கை கணவர் சரவணன், தமிழகத்தில் நடக்கும் அரசு கான்ட்ராக்ட், டெண்டர் என எல்லா வேலைகளையும் கவனித்து வருகிறார். இன்னொரு தங்கையின் கணவர் சந்திரசேகர், அரசு வழக்கறிஞர். இந்த விவரங்களை எல்லாம், போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைக்கிறோம். ஆனால், அந்த மனுக்கள் அடுத்தநாளே பன்னீர்செல்வத்தின் கைக்கு வந்து விடு கின்றன'' என்கின்றனர். பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களோ, ''தங்க தமிழ்ச்செல்வன் 14 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக மாவட்டச் செயலாளராக இருந்தார். 'நான்தான் அம்மாவை ஆண்டிப்பட்டியில ஜெயிக்க வெச்சேன்’னு திமிரா பேசுனாரு. அவரது ஆதரவாளர்கள், அமைச்சர் என்றுகூட பார்க்காமல் ஓ.பி.எஸ்-ஸை அடிக்கப் பாய்ந்தனர். அவரோட தம்பி தங்கப் பாண்டி, ஒன்றியச் செயலாளராக இருக்கிறார். தங்க தமிழ்ச்செல்வனின் குடும்பமும் அரசியல் செய்துகொண்டுதான் இருக்கிறது'' என்கின்றனர்.

விசாரணைக்காக தங்க தமிழ்ச்செல்வனை சென்னைக்கு வரச்சொல்லி இருக்கிறது தலைமை. தேனி மாவட்ட மோதல்களைக் விசாரித்து அறிக்கை கொடுக்க ஜக்கையனுக்கும் உத்தர விட்டுள்ளார் ஜெயலலிதா. உருளப்போகும் தலை பன்னீரா, செல்வனா என்பது விரைவில் தெரியும்!

- சண்.சரவணக்குமார்

படம்: வீ.சக்தி அருணகிரி