Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்

வர் 'உண்டு' என்று கொண்டுவந்தார்; இவர் 'வேண்டாம்' என்று தள்ளி வைத்தார். உண்டா... இல்லையா என்ற கேள்விக்கான இறுதி பதில், இப்போது சென்னைக்கும் டெல்லிக்குமாக நீதிமன்றத்தின் முடிவை நோக்கி ஊசலாடிக்கொண்டு இருக்கிறது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சமச்சீர் கல்வி என்பது, தமிழகக் குழந்தைகளுக்கு ஒரு புதிய வரவு. பெற்றோருக்கோ... ஒரு கண்ணீர்க் கதை. பள்ளிக்கூடங்களுக்கோ... தீராத புதிர்!

புதிய கல்வி முறையில் சாரம் இல்லை என்று ஒரு காரணம். அதற்குள் சந்தடி இல்லாமல் அரசியலைப் புகுத்தி, தனி மனிதத் துதி பாடப் பார்த்தார்கள் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

'சாரமே இல்லை என்று சடுதியில் முடிவெடுத்தது எப்படி?’ என்று நீதிமன்றம் கேட்கிறது. சமச்சீர் கல்வி முறையை நீக்கப் பார்ப்பதில் அரசியலும் தனி மனித விருப்பு வெறுப்பும் ஒளிந்து இருக்கிறது என்று கடந்த ஆட்சிக்காரர்கள் குமுறுகிறார்கள்.

பாடத்தில் குழந்தைகளுக்குச் சந்தேகம் வருவது இயற்கை. ஆனால், எந்தப் பாடப் புத்தகத்தைப் படிப்பது, போதிப்பது என்று தெரியாமல், குழந்தைகளோடு சேர்ந்து பள்ளிக்கூடங்களும் குழம்புகிற விநோதம் இந்தியாவில் வேறு எங்கும் நடந்ததாக நினைவில் இல்லை.

ஒன்று மட்டும் உறுதி...

பாடப் புத்தகத்தில் எந்த அரசியலை நுழைக்கவும், நீக்கவும் யுத்தம் நடக்கிறதோ... அந்த அரசியலைப் பாடப் புத்தகத்துக்கு வெளியே குழந்தைகள் இப்போது வலியோடு படித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 'கருணாநிதி என்பவரும் ஜெயலலிதா என்பவரும் மாறி மாறி தமிழகத்தை ஆண்டார்கள். அவர்களின் ஆசாபாசங்களுக்காக பாடப் புத்தகங்களையே போர்க்களமாக மாற்றிக்கொண்டு வாள் சுழற்றினார்கள். இதனால், படிப்பு பல நாட்கள் பாழானது. மன உளைச்சல் மேலோங்கியது' என்பதே கசப்பான அந்த அரசியல் பாடம்.

இனி, எக்காலத்திலும் குழந்தைகளால் மறக்க முடியாத பாடம் அல்லவா இது!