Published:Updated:

ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்
ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

சென்னை, மார்ச்.25- கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து உடனடியாக தண்ணீரை திறக்க உத்தரவிடுமாறு ஆந்திர முதலமைச்சருக்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

இது தொடர்பாக அவர் ஆந்திர முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது,

கடந்த ஆண்டு தான் எழுதிய கடிதத்தை அடுத்து, கண்டலேறிலிருந்து கிருஷ்ணா நதி நீரை திறந்து விட்டதற்கு நன்றி தெரிவித்துள்ளார். கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின்படி கடந்த ஜனவரி முதல் வரும் ஏப்ரல் வரையிலான காலத்திற்கு ஆந்திரம் தர வேண்டிய நான்கு டி எம் சி நீர் பாக்கி இருப்பதை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போது கண்டலேறு நீர்த்தேக்கத்தில் நீரின் இருப்பு 37 டிஎம்சியாக உள்ளதை தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ள ஜெயலலிதா, சென்னையின் நீர்த்தேவையைக் கருத்தில் கொண்டு உடனடியாக கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து நீரை விடுவிக்க உத்தரவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.