Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

பொ.மாரிமுத்துக்குமார், திருச்சி-5. 

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  கோட்சே இன்று இருந்திருந்தால், யாரைச் சுட்டிருப்பார்?

கழுகார் பதில்கள்

  கோட்சேவை ஏதோ கூலிப் படைத் தலைவனைப்போலச் சொல்கிறீர்களே!

கொலை செய்வது கோட்சேவின் தொழில் அல்ல. தன்னுடைய நோக்கங்களுக்கு விரோத மாகக் காந்தி செயல்படுவதாக நினைத்தார் கோட்சே. நீதிமன்றத்தில் தன்னுடைய செய்கையை நியாயப்படுத்தியே பேசினார். இந்து தர்மத்தைக் காப்பாற்றுவதற்காகவே, இந்தக் காரியத்தைச் செய்ததாகச் சொன் னார்.

அதைவிட முக்கியமானது, தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அவர் அப்பீல் செய்யவில்லை. நாம் அவரது சித்தாந்தத்தை ஏற்காவிட்டாலும்,  மகாத்மாவைச் சுட்டவர்கூட அழுத்தமான வரே! 

போடி எஸ்.சையதுமுகமது, சென்னை-93.

கழுகார் பதில்கள்

தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் 'பிளாக் பெர்ரி’ செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளாரே விஜயகாந்த்?

கழுகார் பதில்கள்

ஆரம்பமே ஜோரா இருக்கே!

அவர்கள் அத்தனை பேரும் 'ரமணா’ பட திருச்சி ஆர்.இ.சி. மாணவர்கள் போலச் செயல் படுவதாக கற்பனை செய்து பார்த்தேன். பயமாக இருந்தது! 

பெ.பச்சையப்பன், கம்பம்.

கழுகார் பதில்கள்
##~##
;ஊரையே ஏமாற்றும் அரசியல்வாதிகள், சாமியார்களிடம் ஏமாந்துவிடுகிறார்கள். சாமியார்கள் யாரிடம் ஏமாறுவார்கள்?

  சில பெண்களிடம்! 

என்.எம்.பிரேம்ராஜ், நாகர்கோவில்.

கழுகார் பதில்கள்

  மெட்ரிக், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்களிடம் வேலை பார்க்கும் ஆசிரியர்களைக் கொத்தடிமைகளைப்போல வேலை வாங்கிவிட்டு மிகவும் சொற்ப சம்பளம்தான் தருகின்றன. இந்த நிலை மாறாதா?

மாறாது!

கல்வித் துறையில் தங்கள் கடமையை மத்திய - மாநில அரசாங்கங்கள் கைவிரித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி, நீ எவ்வளவு கட்டணம் வேண்டுமானாலும் வசூலித்துக்கொள், யாரையும் வேலைக்கு எடுத்துக்கொள், சம்பளம் கொடுத் தாலும்... கொடுக்கவில்லை என்றாலும், அதை நான் கேள்வி கேட்க மாட்டேன் என்று அரசாங்கமே சொன்ன பிறகு, சேவை செய்வதற்கு இந்த நிறுவன உரிமையாளர்கள் என்ன தன்னல மறுப்பாளர் களா?

கல்வி, சுகாதாரம் இரண்டையும் குடிமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டியது அனைத்து அரசாங்கங்களின் ஒரே ஒரு கடமை. அதை அவர்கள் ஒழுங்காகச் செய்யாததால், வந்த விளைவு இது.

'நீ முறையானதை செய்யத் தவறினால், அதை வேறு ஒருவன் தவறாகச் செய்து முடிப்பான்’ என்று ஒரு வாக்கு உண்டு. கல்வி விஷயத்தில் நாட்டில் நடப்பது இதுதான்!

டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

கழுகார் பதில்கள்

  மத்தியில் மீண்டும் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்கும் அறிகுறி தெரிகிறதா?

  பி.ஜே.பி. அதற்காகக் கஷ்டப்படத் தேவை இல்லை. காங்கிரஸ் கட்சியே அந்த வாய்ப்பை நிச்சயம் அவர்களுக்குத் தந்துவிடும்! 

மா.சுந்தரமூர்த்தி, செய்யாறு.

கழுகார் பதில்கள்

ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்றால் எப்படி இருக்க வேண்டும்?

கழுகார் பதில்கள்

  சம்பவங்களின் தொகுப்பாக இல்லாமல்... சத்தியத்தைப் பேசுவதாக இருக்க வேண்டும்!

மகாத்மாவின் 'சத்திய சோதனை’ முதல் கேரள பாலியல் தொழிலாளி நளினி ஜமீலா வரை இதற்கு உதாரணமான எத்தனையோ புத்தகங்கள் உண்டு.

மலையாள போலீஸ் அதிகாரி ராமச்சந்திரன் நாயர் எழுதிய 'நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி’யைப் படித்துப் பாருங்கள். மார்க்ஸிய எண்ணம்கொண்ட மனிதன் நர்கீஸை, என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்ற அவர், தனது குற்ற உணர்ச்சியை வார்த்தைகளில் பதிவு செய்துள்ளார். சத்தியம் ஒவ்வோர் எழுத்திலும் தெறிக்கும். அப்படி இருக்க வேண்டும் வரலாறு! 

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).

கழுகார் பதில்கள்

  'சட்டசபையில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. சொல்கிறதே?

  பழைய முழக்கங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன!

அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு.

ஜனநாயகம் காக்கும் போரில் மிசா கால் தூசுக்கு சமம்.

மிசாவைக் காட்டி மிரட்டி னால், தமிழ்நாட்டுக்குள் நுழைய விசா வாங்க வேண்டி வரும்.

வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

துணிந்தவனுக்குத் தூக்கு மேடை பஞ்சு மெத்தை.

மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை... என்றெல்லாம் வளர்ந்த கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், 'தி.மு.க. உறுப்பினர்களுக்கு சபையில் பாதுகாப்பு இல்லை. ஒரே பகுதியில் இடம் ஒதுக்கினால்தான், சபைக்கு வருவோம்’ என்கிறார்.

ஸாரி, 'தளபதி’ என்ற அடை மொழி மிஸ் ஆகிவிட்டது! 

முத்துராஜ், ராஜபாளையம்.

கழுகார் பதில்கள்

  இப்போது நாட்டில் திரும்பிய பக்கம் எல்லாம் மெகா ஊழல்கள்... காரணம் என்ன?

ஊழல் என்பது அவமானம் என்ற நிலைபோய், 'அதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...’ என்று ஆகிவிட்ட நிலையில், இதற்கான பதிலை முன்னாள் மத்திய கண்காணிப்பு ஆணையர் என்.விட்டல் சொல்கிறார். ''தாராளமயக் கொள்கைகள்தான் வியக்கத்தக்க அளவில் ஊழலுக்கு இட்டுச் சென்றுள்ளன. முன்பு ஊழல் என்பது சில்லறை வணிகம்போல இருந்தது. ஏனெனில், அப்போது தனி நபர்கள் உரிமங்களைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இப்போது பிரமாண்டமான நிறுவனங்கள்; அதனால் பிரமாண்ட ஊழல்கள் நடக்கின்றன!’

 எச்.மோகன், மன்னார்குடி.

கழுகார் பதில்கள்

  தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி முறிந்தால் யாருக்கு நஷ்டம்? யாருக்குக் கஷ்டம்? யாருக்கு இஷ்டம்?

  கருணாநிதிக்கு நஷ்டம். மத்தியில் அமைச்சராக இருக்கும் மகனும் பேரனும் அதிகாரம் இழக்க வேண்டி வரும்!

காங்கிரஸுக்கு கஷ்டம். கருணாநிதி அளவுக்கான அடிமை, இனி அவர்களுக்குக் கிடைப்பது சிரமம் என்பதால்!

ஜெயலலிதாவுக்குத்தான் இது இஷ்டமாக இருக்கும். தி.மு.க-வுக்கு இரண்டு கண்ணுமே போனால், ஜெ.வுக்கு மகிழ்ச்சிதானே! 

ஆட்சி மாற்றமும் ஆதரவு அலையும்

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். ''இன்னும் மூன்று மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடும் என நான் பேசியதாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆதரவு அலை மாறும் என்றுதான் நான் பேசினேன். ஆட்சி மாறும் என்று பேசவில்லை'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்!

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism