Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஜெ தந்த சீக்ரெட் ஃபைல்

மிஸ்டர் கழுகு: ஜெ தந்த சீக்ரெட் ஃபைல்

மிஸ்டர் கழுகு: ஜெ தந்த சீக்ரெட் ஃபைல்

மிஸ்டர் கழுகு: ஜெ தந்த சீக்ரெட் ஃபைல்

Published:Updated:
மிஸ்டர் கழுகு: ஜெ தந்த சீக்ரெட் ஃபைல்

மக்கு முன்பே அலுவலகத்தில் கழுகார்! 

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வியப்பில் பார்த்தோம். சிறகடித்துச் சிரித்தவர், ''சில டெல்லித் தகவல்கள் எனக்கு நேற்றே வந்து குவிந்துவிட்டதால், வந்துவிட்டேன்!'' என்று பொறுப்பாகப் பதில் தந்தார்.

''முதல்வரின் டெல்லி பயணம் சக்சஸா?'' என்றோம்.

''24 மணி நேரம்தான் ஜெயலலிதா டெல்லியில் இருந்தார். ஆனால், ஐந்து வருடங்களுக்குக்குத் தேவையான பாப்புலாரிட்டியை அள்ளிவந்துவிட்டார். டெல்​லியில் அவரை மீடியாக்கள் மொய்த்தன. மூன்றாவது முறையாக, தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடித்துவிட்டார். புதிய முதல்வராக, முதல் தடவையாக டெல்லிக்கு வருகிறார் என்பதற்காக அல்ல. 'ஸ்பெக்ட்ரம்’ தி.மு.க-வைப் புறம்தள்ளி ஜெயித்தவர் என்பதால்தான், இந்த மதிப்பும் மரியாதையும்.''

''பிரதமர் அலுலகத்தில்இருந்தே 'அம்மா’வுக்கு ஸ்பெஷல் கார் அனுப்பிவைத்து அழைத்துச் சென்றதாக அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வப் பத்திரிகை பெருமைப்​படுகிறதே?''

மிஸ்டர் கழுகு: ஜெ தந்த சீக்ரெட் ஃபைல்

''நமது எம்.ஜி.ஆரை நானும் பார்த்தேன்! 'தனது இல்லத்துக்கு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வருவதற்காக, பிரதமரே கார் ஒன்றை அம்மா தங்கி இருந்த தமிழ்நாடு இல்லத்துக்கு அனுப்பிவைத்தார்’ என்று கட்டம் கட்டிச் செய்தி வெளியிட்டு உள்ளது. இது கருணாநிதியின் மனதைக் கனப்படுத்தியது உண்மை. உடனே அவர் தனது முரசொலியில் பதில் எழுதினார். 'பிரதமரைச் சந்திக்க மாநில முதலமைச்சர்கள் யார் டெல்லி சென்றாலும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து கார் வந்து அழைத்துச் செல்லும். அது பாதுகாப்பு கருதி செய்யப்படுகிற ஒன்று. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் ஒன்று’ என்கிறார் கருணாநிதி.''

''இருவரில் யார் சொல்வது உண்மை?''

''கருணாநிதி சொல்வதுதான்! பாதுகாப்புக் காரணங்களுக்காக ரேஸ்கோர்ஸ் சாலை பிரதமர் வீட்டு அலுவலக அறை வரை மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. சிலர் தங்களது வாகனத்தில் வந்து பிரதமர் அறைக்கு நடந்து வருவார்கள். நடக்க முடியாதவர்கள், முன் வாசல் வரை தங்களது வாகனத்தில் வந்துவிட்டு... அங்கே இருந்து பிரதமர் அலுவலக வாகனத்தில் ஏறிக்கொள்வார்கள். ஒரு வாகனத்தில் வந்து... இன்னொன்றுக்கு மாறி உட்கார முடியாத வி.ஐ.பி-க்களுக்கு, பிரதமர் அலுவலகத்தில் இருந்தே பிரத்யேக வாகனம் கிளம்பும். இந்த நடைமுறை, பிரதமராக வாஜ்பாய் இருந்த காலத்தில் இருந்து தொடங்கித் தொடர்ந்து வருகிறது. அப்படித்​தான் ஜெயலலிதா​வுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இதைத்தான் கருணாநிதி குத்திக் காட்டுகிறார். 'ஏதோ ஜெயல​லிதாவுக்கு மன்மோகன் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துவிட்டார்’ என்று செய்தி பரவுவதைத்தான் கருணாநிதி குறை சொல்கிறார்.''

மிஸ்டர் கழுகு: ஜெ தந்த சீக்ரெட் ஃபைல்

''ஓ!''

''பிரதமரைச் சந்தித்த ஜெயலலிதா, தமிழ்நாட்டுக்குத் தேவையான திட்டங்களைப் பட்டியல் இட்டு 30 பக்கங்களில் பெருவாரியான கோரிக்கைகளை வைத்தார். ஒரு லட்சம் கோடி வரை கேட்கிறார். 20 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது. இருவருமே ஒன் டு ஒன்தான் சந்தித்தார்கள். முதல்வருடன் சென்று இருந்த தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கியும் முதல்வரின் செயலாளர் ஷீலா ப்ரியாவும்கூட சந்திப்பில் உடன் இருக்கவில்லை. இலங்கைப் பிரச்னை தொடர்பாக ஜெயலலிதா சில சிக்கலான விஷயங்களைக் கிளப்பினால், பதில் சொல்வதற்காக பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தயாராகத் தனி அறையில் காத்திருந்தார். ஆனால், தனது அறிக்கையில் உள்ள விஷயங்களை பிரதமரின் பார்வைக்குக் கொடுத்துவிட்டு.... மிக மிக முக்கியமான ஒரு சமாசாரத்தை எடுத்துவைத்ததாகத் டெல்லித் தகவல்கள் சொல்கின்றன.''

''அது என்னவாம்?''

மிஸ்டர் கழுகு: ஜெ தந்த சீக்ரெட் ஃபைல்

''மத்திய அமைச்சராக இருக்கும் மு.க.அழகிரியைப் பற்றியதாம் அது! அழகிரி தொடர்பான சில ஆவணங்களை ஜெயலலிதா டெல்லி வரும்போது எடுத்து வந்து இருந்தார் என்றும், அவை சில பல வழக்குகள் சம்பந்தப்பட்டவை என்கிறார்கள். 'அழகிரி மீது நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய நெருக்கடியில் நான் இருக்கிறேன். அதற்குப் பல சாட்சிகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் உங்களது அமைச்சரவையில் வைத்து இருக்கிறீர்கள். அழகிரி மீது நான் நடவடிக்கை எடுக்கும் முன், உங்களுக்குத் தகவல் தர வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்’ என்று பிரதமருக்கு ஜெ. கன்வே பண்ணியதாகச் சொல்கிறார்கள். 'நீங்களாகவே அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் நல்லது’ என்பது ஜெ-வின் யோசனை. இதைக் கண்டு பிரதமர் ஷாக் ஆனதாகவும், ஆனால் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை என்றும் சொல்கிறார்கள்!''

''அழகிரி  மீது ஆக்ஷன் எடுக்கும் முடிவுக்கு ஜெயலலிதா வந்துவிட்டாரா?''

''போலீஸ் தகவல்கள் அப்படித்தான் சொல்கின்றன. அழகிரியோடு கடந்த ஐந்து ஆண்டுகளாக நிழலாக வலம் வந்த நபர் ஒருவருக்கு கடந்த வாரத்தில் ஒரு போன் வந்தது. 'நீங்கள் வெளிநாடு செல்ல இருக்கிறீர்களா?’ என்று எதிர் முனையில் பேசியவர் கேட்டார். 'அதைக் கேட்கிறதுக்கு நீ யார்?’ என்று எகிறினாராம் நிழல் நபர். உடனே எதிர்முனைக் குரல், தன் பெயரையும் போலீஸ் துறையில் தான் வகிக்கும் பதவியையும் சொன்னதாம்.''

''ம்!''

''பயத்தில் ஆடியதாம் 'நிழல்’. 'இல்லை சார்... போகலை சார்... ஓடிப்போற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணினேன் சார்?’ என்றதாம் 'நிழல்’. 'நீங்கள் எங்கே போவதாக இருந்தாலும், எங்களுக்கு இன்ஃபார்ம் செய்ய வேண்டும்’ என்று கறார் கண்டிஷன் போட்டபடி, லைன் துண்டிக்கப்பட்டதாம். இதை வைத்துப் பார்க்கும்போது, மதுரையை மையம்கொண்டு பிடி இறுகுவது தெரிகிறது!''

''வெளிநாட்டுக்குப் போகிறீர்களா என்று ஏன் கேட்டாராம் போலீஸ் அதிகாரி?''

''கிரிமினல் வழக்குகளில் சிக்குவோமோ என்று சந்தேகப்படும் நபர்கள் ஊரைவிட்டு எஸ்கேப் ஆவது​தானே வழி. திருச்சியில் தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் கஞ்சா வைத்து இருந்ததாகக் கைது செய்தார்களே, ஞாபகம் இருக்கிறதா? திருச்சியில் நடந்த ரெட்டைக் கொலையில் இவர் மீதுதான் போலீஸாரின் சந்தேக ரேகைகள் அதிகமாகப் படிந்து இருந்தது. இவரை மையப் புள்ளியாக வைத்து, முன்னாள் அமைச்சர் நேருவையும் அவர் தம்பி ராமஜெயத்தையும் கைது செய்யவும் போலீஸ் திட்டம் போட்டது. அதை மோப்பம் பிடித்த குடமுருட்டி சேகர், மே 30-ம் தேதி வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லத் திட்டம் போட்டதாகத் தகவல் வந்தது. உடனேயே அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்ததாக கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. அது மாதிரியான பாணி மதுரையிலும் அமலாகலாம்!''

''திருச்சி வழக்கு என்ன ஆச்சு?''

'குடமுருட்டி சேகரிடம் முன்னாள் அமைச்சர்நேரு மற்றும் அவரது தம்பி ராமஜெயத்துக்கு எதிரான வாக்குமூலம் வாங்க போலீஸ் முயற்சித்தது. அதில் முதல் கட்ட முயற்சி தோல்வியே. அதைத் தொடர்ந்துதான் கஞ்சா வழக்கில் சேகர் கைதானார். 'இப்போது எங்களுக்கு ஸ்ட்ராங்கான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளது போலீஸ். இது தொடர்பான ஃபைல் ஒன்று தயாராகி சட்டத் துறைக்​குச் சென்றதாகவும், அங்கே இருந்து வேகமாக நகர்ந்து உள் துறையை அடைந்துவிட்டதாகவும் விஷயம் அறிந்தவர்கள் சொல்கின்றனர். இந்த ஃபைல்கள் சுணக்கம் இல்லாமல் நகர்ந்தால், ஒரு வாரத்துக்குள் நேருவை போலீஸ் நெருங்கிவிடும்!''

''திருச்சிக்கு 19-ம் தேதி ஜெய​லலிதா செல்கிறாரே?''

''தன்னைத் தேர்ந்தெடுத்த ஸ்ரீரங்கம் தொகுதியில் மூன்று நாட்கள் தங்குகிறார். அந்த சுற்றுப்​பயணத்தை முடித்துவிட்டு ஜெ. சென்னை திரும்பியபிறகுகூட இந்த நடவடிக்கைகள் இருக்கலாம். இதற்கு இடையே, திருச்சிப் பகுதியில் தி.மு.க. பிரமுகர் ஒருவர் இறந்த சம்பவம்... சந்தேகத்தை இன்னமும் தூண்டி உள்ளது.''

''இது என்ன புது பீதி?''

''ரெட்டைக் கொலைச் சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்தவர்​தானாம் அந்தப் பிரமுகர். சில நாட்களுக்கு முன்னால் திடீரென இறந்துபோனார். 'உடல்நிலை சரியில்லை என்றுகாரணம் சொல்கிறார்கள். நல்ல திடகாத்​திரமாக இருந்த நபர் அவர். இந்த மரணம் இயற்கையாக நடந்ததா என்று எங்களுக்குச் சந்தேகம் உள்ளது’ என்கிறது போலீஸ். ரெட்டைக் கொலை தொடர்​பான ஏதோ ஒரு விஷயம் இந்த நபருக்குத் தெரிந்திருக்கலாம்என்றும் இதைப்பற்றிப் பேசும்போது சொல்​கிறார்கள்.''

''போகிற போக்கைப் பார்த்தால், ஊழல் வழக்குகளைவிட கிரிமினல் வழக்குகள்தான் அதிக சூடு பிடிக்கும்​​போலத் தெரிகிறதே?''

''கிரிமினல் வழக்குகள்தான் அதிக சலனத்தை நாட்டுக்குள் கிளப்பும் என்றும் ஆட்சி மேலிடம் நினைக்கிறது. அதற்காக, ஊழல் விவகாரங்களையும் விட்டுவிட மாட்டார்கள். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், நிலக்கரி விவகாரத்தை வைத்துதான் வழக்குகளை ஆரம்பிப்பார் என்று உமக்கு எப்போதோ நான் சொன்னேன்... ஞாபகம் இருக்கிறதா?''

''இருக்கிறது! மறுபடி மறுபடி சொல்லி இருக்கிறீர்!''

''டெல்லி சென்ற ஜெயலலிதா அங்கு நடந்த பிரஸ் மீட்டில் அதிகமாகச் சொன்னதும், நிலக்கரி ஊழலைப்​பற்றித்தான். தரமற்ற நிலக்கரியை வாங்கியதால் மின் உற்பத்தி குறைந்தது, தனியாரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி அதிலும் கமிஷன் பார்த்தார்கள் என்று சொன்னார் முதல்வர். இந்தோனேஷியாவில் செய்யப்பட்ட வர்த்தகம் குறித்தும் பேசி இருக்கிறார். நிலக்கரி கொள்முதல் விலையை அநியாயத்துக்கு எகிறவைத்துக் கொள்ளை லாபம் பார்த்ததாகவும், அதனால் பயன் அடைந்தது முன்னாள் ஆட்சியாளர்களுக்குச் சொந்தமான குடும்பம் என்றும் ஆதாரங்களைத் தயார்படுத்திவிட்டாராம். நிலக்கரி விவகாரங்களை நீர் கொஞ்சம் இன்னும் தோண்டும்!'' - உத்தரவு போட்ட கழுகார்,

''ஜூலை இரண்டாவது வாரத்தில் தி.மு.க. பொதுக் குழு கோவையில் கூட இருக்கிறது. செம்மொழி மாநாடு நடந்த கொடிசியா அரங்கத்தைக் கேட்டார்களாம். ஆனால், அன்றைய தினம் வேறு ஒரு நிகழ்ச்சி இருப்பதால் இடம் இல்லை என்று சொல்லிவிட்டார்களாம். பொதுக் குழு என்பதால் வெளியே பந்தல் போட்டு நடத்த முடியாது, மூடிய அரங்கம் தேவை என்று சொல்லி இருக்கிறாராம் கருணாநிதி!'' என்று நிறுத்தினார்.

''எதற்காம் இந்தப் பொதுக் குழு?''

''உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகச் சொல்கிறாராம் கருணாநிதி. காங்கிரஸை உடன் வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கக் கூடாது என்று நினைக்கிறாராம். 'காங்கிரஸ் விலகிச் சென்றால், ஜெயலலிதாவிடம் சேரும். அங்கு இருக்கிற கம்யூனிஸ்ட்கள் சிதறுவார்கள். இரண்டாம் இடம் விஜயகாந்த்துக்கா? அல்லது காங்கிரஸுக்கா என்ற குழப்பமும் வரும்’ என்று நினைக்கிறாராம் கருணாநிதி. 'சொற்ப இடங்களில் ஜெயித்தாலும், தி.மு.க. தனித்து நிற்கவேண்டும். காங்கிரஸ் ஜெயிக்க உதவக் கூடாது’ என்று கருணாநிதி நினைக்கிறாராம்.''

''ஜூலையில் அரசியலின் அணி மாற்றங்கள் இருக்கும் என்கிறீரா?''

''நிச்சயமாக!'' - உறுதியாகச் சொன்ன கழுகார், உயரத்தில் புள்ளியாகத் தெரிந்தார்.

படங்கள்: என்.விவேக், அர்ஜுன் சிங் பன்வார்

மிஸ்டர் கழுகு: ஜெ தந்த சீக்ரெட் ஃபைல்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism