Published:Updated:

சபாஷ் கலெக்டர்!

சபாஷ் கலெக்டர்!

சபாஷ் கலெக்டர்!

சபாஷ் கலெக்டர்!

Published:Updated:
சபாஷ் கலெக்டர்!

சதியே இல்லாதவர்கள்கூட கடன் வாங்​கியாவது தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே ஆசைப்படுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதை கௌரவக் குறைச்சலாக நினைக்கும் காலம் இது. காரணம், அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் கட்டடம் முதல் கற்பிக்கும் முறை வரை அத்தனை வித்தியாசம் இருக்கிறது.

இந்தச் சூழலில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், தன் மகள் கோபிகாவை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்து இருக்கிறார். கலெக்டர் ஆரம்பித்துவைத்திருக்கும் செயல், ஓர் அற்புதத் தொடக்கம். அரசாங்கத்தில் வேலை வேண்டும் என நினைப்பவர்கள், தங்கள் குழந்தைகளை மட்டும் அரசுப் பள்ளியில் சேர்க்கத் தயங்குவது ஏன்? இனி அரசு ஊழியர்கள் எல்லோரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்ப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போதுதான், அரசுப் பள்ளிகள் மீது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் போதிய கவனம் எடுத்துக்கொள்வார்கள். தனியார் பள்ளிகள் போன்று போதுமான வசதிகளுடன் திகழ்வதற்கான நடவடிக்கைகள் சுறுசுறுப்பாக நடக்கும். அரசுப் பள்ளியில் படித்து எத்தனையோ மாணவர்கள், டாக்டர்களாக, விஞ்ஞானிகளாக உயர்ந்து இருக்கிறார்கள். மீண்டும் அந்த வரலாறு திரும்பட்டும். பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளும் அரசுப் பள்ளியை நோக்கிப் பார்வையைத் திருப்பும்போது, அங்கே பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு உணர்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளைச் சேர்ப்பதில் தனியார் பள்ளிகள் காட்டும் கெடுபிடிகளும், கட்டணக் கொள்ளைகளும் குறையும்!

- வி.எம்.ரேவதி, சேலம்-4

சபாஷ் கலெக்டர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism