ஸ்பெஷல் -1
சினிமா
Published:Updated:

யார் ராமன்? கேட்கிறார் கருணாநிதி!

யார் ராமன்? கேட்கிறார் கருணாநிதி!

யார் ராமன்? கேட்கிறார் கருணாநிதி!
யார் ராமன்? கேட்கிறார் கருணாநிதி!
யார் ராமன்? கேட்கிறார் கருணாநிதி!
யார் ராமன்? கேட்கிறார் கருணாநிதி!
 
யார் ராமன்? கேட்கிறார் கருணாநிதி!
யார் ராமன்? கேட்கிறார் கருணாநிதி!

சே து சமுத்திரத் திட்டத்தைத் தடுக்க சில சக்திகள் செயல்படுவதாக சமீபத்தில் ஆவேசப்பட்ட தமிழக முதல்வர் கருணா நிதி, ‘‘இந்தத் திட்டத்தைத் தடுக்க ஒரு ஆளைப் பிடித்தார்கள். யார்? 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இருந்தாராம். அவர் பெயர் ராமராம். ‘அந்த ராமர் கட்டிய அணை அங்கே உள்ளது. அதைத் தொடாதே!’ என்கிறார்கள். யார் ராமன்? எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்துப் பொறியாளராக ஆனவன்? எப்போது அந்தப் பாலத்தைக் கட்டினான்? ஆதாரம் உண்டா? இல்லை!’' என்று பேசினார்.

'ராமர் கட்டிய பாலம் அது!' என்று சொல்லி உச்சநீதிமன்றத்தில் மனுபோட்டிருந்த சுப்பிரமணியன் சாமி, ‘‘ராமன் யார் என்று கேட்கிறார் கருணாநிதி. நான் சொல்கிறேன்... ராமன் ஒரு சத்ரியன். ராவணன், பிராமணன். கருணாநிதி கிண்டல் செய்வது சத்ரியனான ராமனை! கருணாநிதியை ஆதரிக்கும் திராவிடர் கழகமோ, பிராமணனான ராவணனுக்கு விழா எடுத்துக் கொண்டாடுகிறது’' எனப் பதில் அறிக்கைவிட்டார்!

சேது சமுத்திரத் திட்டம் பற்றிய ஆரோக்கியமான விவாதங்களில் இருந்து விவகாரம் திசை மாறி... 'இந்துக்களின் நம்பிக்கையை கருணாநிதி கொச்சைப்படுத்துகிறார்' என்ற வாதம் சூட்டை கிளப்பத் தொடங்கிவிட்டது! நாம் முதலில் சுப்பிரமணியன் சாமியிடமே பேசினோம்...

'‘ராமர் பொறியியல் படிப்பு படித்தாரா என்று கேலி பேசும் கருணாநிதி, தனது பள்ளி இறுதித்

தேர்வையாவது எழுதியிருக்கிறாரா?

கருணாநிதிக்கும் அவரது கட்சிக்காரர்களுக்கும் இந்துக்களைத் தாக்கிப் பேசுவது, சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது போல! ராமன், தசரத மன்னனின் மகன். அப்பட்டமான சத்ரியன். ராவணன், வேதங்களைக் கற்றுத் தேர்ந்த பிராமணன். இதுவரை யாராலும் மறுக்கப்படாதது இது. ஆக, கருணாநிதி இடிக்கத் துடிப்பது, பிராமணனை எதிர்ப்பதற்காக ஒரு சத்ரியன் அமைத்த பாலத்தை!

யார் ராமன்? கேட்கிறார் கருணாநிதி!

ஒரு பக்கம் ரம்ஜான் இப்ஃதார் விருந்துக்குப் போய், தலையில் குல்லா போட்டுக்கொண்டு கஞ்சி குடிப்பார். கிறிஸ்துமஸ் விழாவுக்கு வாழ்த்து சொல்வார். முஸ்லிம், கிறிஸ்தவ மதப் பெரியவர்களோடு நெருக்கமாக நின்று போஸ் கொடுப்பார். இந்து மதம் சம்பந்தமான நம்பிக்கைகளை மட்டும் கொச்சைப்படுத்திப் பேசுவார்! இதுதான் அவரது மதச்சார்பின்மை!

தேர்தல் வந்துவிட்டால் இந்துக்களின் ஓட்டுக்கள் மட்டும் அவருக்கு தேவை. 'அடிப்படையில்லாத நம்பிக்கைகளை வைத்திருக்கும் இந்துக்கள் இனிமேல் எனக்கு ஓட்டு போட வேண்டியதில்லை' என்று சொல்வாரா கருணாநிதி? எல்லோருக்கும் பொதுவான முதல்வர் பொறுப்பில் இருந்து கொண்டு, பெருவாரியான ஒரு சாராரை இழிவுபடுத்திப் பேசிய கருணாநிதிக்கு எதிராக வழக்குத் தொடரப்போகிறேன்'' என்கிறார் சாமி.

யார் ராமன்? கேட்கிறார் கருணாநிதி!

1999-லும் ராமர் விவகாரம் எழும்பியது. அப்போது 'துக்ளக்' ஆண்டு விழா நிகழ்ச்சியில் அதன் ஆசிரியர் சோ சில விளக்கங்களைத் தந்தார். அதை நினைவூட்டியபடி இங்கே பேசுகிறார் சோ...

''சமயம் கிடைக்கும்போதெல்லாம் இந்து மதத்துக்கு எதிராக ஏதேனும் பேசாவிட்டால், இன்றைய முதலமைச்சருக்குத் தூக்கம் வராது. இந்து மதத்தைத் திட்டு வதுதான் மதச்சார்பின்மை என்று அவர் எண்ணுகிறார். ராவணன், பிராமணனுடைய மகன். வேத சிரோன்மணி. விஸ்வாமித்திரர், வசிஷ்டர் போன்ற முனிவர்களைத் தவிர, வேதம் ஓதியதற்காகவே ராமாயணத்தில் ஒருவன் பாராட்டப்படுகிறான் என்றால், அது ராவணன்தான். அதைஎல்லாம் தெரிந்துகொள் ளாமல் இலங்கை, ராவ ணன் என்ற பூகோள, பெயர் அடையாளங்களை வைத்தே 'ராவணன் நம்ம ஆள்' என்று தானாகவே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டார் முதல்வர். மேலும், நமது முதல்வருக்குத்தான் இலங்கை விவகாரங்களில் விட்ட குறை, தொட்ட குறை கொஞ்சம் உண்டாயிற்றே..? அந்தப் பாசமும் காரணமாக இருக்கலாம்.

கூடவே, ராமன்தான் பிராமணன் என்று தப்பாக முடிவு கட்டி, தனது எதிரியாகவும் பாவித்துவிட்டார் முதல்வர்!

யார் ராமன்? கேட்கிறார் கருணாநிதி!

ராவணனுக்கு இருபது கைகள் இருந்தன. ‘இரண்டு கையில் இவ்வளவு வாங்கலாம் என்றால், இருபது கைகள் இருந்தால் எவ்வளவு வாங்கலாம்?’ என்ற சிந்தனை ஒருவேளை வருகிறதோ என்னவோ...எனக்குத் தெரியாது!'' என்கிறார் சோ.

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகர், ''ராமர் எந்த இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்தார் என்று முதல்வர் கருணாநிதி கேள்வி கேட்கிறார். தமிழ்நாட்டில் கூடத்தான் பல இடங் களில் பாலங்கள், மேம் பாலங்கள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டப்படுகின்றன. 'கருணாநிதி அமைத்த பாலம்... ஸ்டாலின் கட்டிய பாலம்' என்று மக்கள் பேசும்போது, இவர் மனசு என்னமாய் குளிர்கிறது! கருணாநிதியும் மு.க.ஸ்டாலினும் எந்த இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்தார்கள் என்று நாளைய தலைமுறை கேட்டால்... அதற்கு என்ன பதில்?

யார் ராமன்? கேட்கிறார் கருணாநிதி!

ராமர் என்பது தவறான நம்பிக்கை என்றால், கிருஷ்ணன், மாரியாத்தா, முருகன் எல்லோருமே அப்படித்தான் என்பதே கருணாநிதி சொல்வதன் உள் அர்த்தம்! அப்படியானால், கோயில்களில் உள்ள சிலைகளை எல்லாம் எடுத்து மியூஸியத்தில் வைக்கிற துணிச்சல் அவருக்கு இருக்கிறதா? இன்னொரு விஷயம்... தலைவர்களுக்குச் சிலை வைப்பது, மாலை மரியாதை செய்து கைகூப்பி வணங்குவது இதுபற்றி மட்டும் யாரும் பைத்தியக்காரத்தனமாகக் கேள்வி கேட்கக்கூடாது. ஏனென்றால், அதெல்லாம் பகுத்தறிவு!'’ என்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவருமான காதர் மொகிதீன் நம்மிடம் பேசும்போது, ''புனித குர்-ஆன் நூலில், 'லக்கும் தீனுக்கும்; வலிய தீன்' என்று சொல்லப் பட்டுள்ளது. 'உங்கள் மார்க்கம் உங்களுக்கு; எங்கள் மார்க்கம் எங்களுக்கு' என்பதே இதன் பொருள். மத விவகாரங்களில் குர்-ஆனின் இந்த வசனத்தைப் பின்பற்றி நடப்பதையே நாங்கள் பெரிதாகக் கருதுகிறோம். யாரையும் எப்போதும் புண்படுத்துவதை எந்த மதமுமே ஏற்பதில்லை!'' என்றார் சுருக்கமாக!

 
யார் ராமன்? கேட்கிறார் கருணாநிதி!
\ பாரதிதமிழன்