Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
தலையங்கம்

டந்த தி.மு.க. ஆட்சியின்போது, மின் வெட்டால் தமிழகம் பட்ட அவதிகளைக் கண்டித்து, ஓர் எதிர்க் கட்சித் தலைவராக ஜெயலலிதா விடுத்த அறிக்கைகள் ஏராளம். மக்கள், ஆட்சி மாற்றம் கொண்டுவர மின் பற்றாக்குறை ஒரு பிரதான காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீண்டும் தமிழக முதல்வராகி, பிரதமரைச் சந்திக்க டெல்லி சென்ற ஜெயலலிதா, மத்தியத் தொகுப்பில் இருந்து 1,000 மெகா வாட் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு உடனடியாக வழங்கும்படி கோரிக்கையை வைத்துவிட்டுத் திரும்பினார்.

பிரதமரின் கைகளுக்கு முதல்வரின் இந்தக் கோரிக்கை சென்றடைந்து ஆறு நாட்களுக்குப் பின், தமிழகம் வந்த மத்திய மின்சாரத் துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவிடம் இதுபற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது... அவர் கொடுத்த பதிலோ, ஒரு மின்சாரத் தாக்குதலாக இருந்தது. 'பிரதமரிடம் அளிக்கப்பட்ட கடிதம் எனக்குக் கிடைத்த பிறகு, மத்தியத் தொகுப்பில் இருந்து இருப்புக்கு ஏற்ப மின்சாரத்தை வழங்க முடிவு செய்யப்படும்' என்பதே 'இயந்திரத்தனமான' அந்தப் பதில்!

ஆக, ஒரு மாநிலத்து மக்களின் அடிப்படை அவஸ்தை தொடர்பான கடிதம், பிரதமர் மேஜையில் இருந்து ஆறு நாட்களாகியும் குறிப்பிட்ட அமைச்சரின் மேஜையை அடையவில்லை. எப்போது வந்து சேரும் என அமைச்சருக்கும் தெரியவில்லை!

அதை அந்த அமைச்சரே பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்திருக்கும் நிலையில், தமிழக அரசுத் தரப்பில் இருந்து டெல்லியை நோக்கிக் காட்டமான கேள்விக் கணை பறந்திருக்க வேண்டாமா?

'தமிழக நலன்கள் குறித்த பல தீவிரமான விஷயங்களில் டெல்லிக்குக் கடிதம் அனுப்புவதோடு கடமையைக் கழித்துக்கொள்கிறார்' என்பதும்... 'தலைபோகிற விஷயத்தில்கூட, தந்தி அடித்துவிட்டுத் தப்பித்துக்கொள்கிறார்' என்பதும்தானே முன்னாள் முதல்வர் மீதான முக்கியக் குற்றச்சாட்டாக இருந்தது? புதிய அரசின் கடிதங்களையும் பழையபடியே ஒரு சம்பிரதாயமாகக் கருதிக்கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு கிடப்பில் போட டெல்லியை அனுமதிக்கலாமா, இன்றைய முதல்வர்!

தமிழக நலன்கள் குறித்த எந்த ஒரு விஷயத்திலும் தட்டிக்கழிப்பதற்கான வாய்ப்பை டெல்லிக்குத் துளி அளவும் இனி தந்துவிடக் கூடாது. இதைத் துவக்கத்திலேயே உறுதியான சபதமாக மேற்கொண்டு செயல்படுத்த வேண்டும் முதல்வர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism