Published:Updated:

அ ஆ இ ஈ உ ஊ எ ஐ ஒ ஓ ஒள ஃ

ப.திருமாவேலன்படம் : என்.விவேக்

அ ஆ இ ஈ உ ஊ எ ஐ ஒ ஓ ஒள ஃ

ப.திருமாவேலன்படம் : என்.விவேக்

Published:Updated:
##~##

'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்றார் ஒளவை பாட்டி. '30 நாட்கள் படிக்க வேண்டாம்’ என்கிறார் ஜெயலலிதா அம்மா.

 முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்து 30 நாட்களே முடிந்து இருக்கும் நிலையில், 'முதல் கோணல் முற்றும் கோணலா?’ என்று கேட்க வேண்டிய துர்பாக்கிய நிலையை ஏற்படுத்திவிட்டார் ஜெயலலிதா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்னுடைய ஆட்சிக் காலத்தில் சங்கிலித் திருடர்கள் ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்து விட்டார்கள். மக்கள் பயம் இல்லாமல் வாழலாம்'' என்று அவர்தான் சொன்னார். ஆனால், 45 ஆயிரம் அரசுப் பள்ளிகளிலும் 11 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளிலும் படிக்கும் சுமார் 80 லட்சம் பிள்ளைகளின் மன

அ ஆ இ ஈ உ ஊ எ ஐ ஒ ஓ ஒள ஃ

நிம்மதியைத் திருடிச் சென்றது யார்? அதுவும் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதப்போகும் பிள்ளைகள் மனரீதியாகவே அவஸ்தைப்படுகிறார்கள்.

25 ஆண்டுகளுக்கு முன்னால் பாஸ் செய்தால் போதும்... 80 சதவிகித மதிப்பெண்கள் வாங்கினால் போதும் என்பதே பொதுத் தேர்வு எழுதுபவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், இன்று 95 சதவிகிதம் எடுத்தால்கூட, அரசு கோட்டாவில் இடம் கிடைக்காத அளவுக்குக் கல்வி நீரோடை தமிழகத்தில் சிறப்பாக ஓட ஆரம்பித்துவிட்டது. 85 மதிப்பெண்கள்கூடப் போடாத தமிழ் ஆசிரியர்களே, 100 மதிப்பெண்கள் போட முன்வந்துவிட்டார்கள். முதல் இடம் என்பது, முயற்சித்தால் எட்டும் இடமாக ஆகிவிட்ட பின்னால், எல்லோருமே 'ஸ்டேட் ஃபர்ஸ்ட்டு’க்குத்தான் படிக்கிறார்கள். அப்படி ஒரு நாட்டில் 'யாரும் படிக்க வேண்டாம்’ என்ற தடை முதன்முதலாக விழுந்து இருக்கிறது.

ஜூன் 4-ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்கச் சொன்னது அரசு. ஜூலை 6-ம் தேதிக்குப் பிறகுதான் என்ன படிக்க வேண்டும் என்பதையே சொல்லப்போகிறது அரசு. எது காரணமாக இருந்தாலும், அது ஜெயலலிதாவுக்குப் பெருமை தரும் செய்தி அல்ல!

ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தின் 6-வது மாடியில் ஜெயலலிதா உட்கார்ந்து இருக்கிறாரா அல்லது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏதோ ஒரு வெள்ளைக்காரன் கட்டிய அரங்கத் தின் முதல் மாடியில் உட்கார்ந்து ஆட்சி செய்கிறாரா என்ற அக்கறை தமிழ்நாட்டு மக்களுக்கு அவ்வளவாக இல்லை. ஏனென்றால், அது ஜெயலலிதாவுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட, அவரது வசதியின்பாற்பட்ட விஷயம். ஆனால், எதைப் படிப்பது? எப்போது படிப்பது? எனத் தெரியாமல் பள்ளிப் பிள்ளைகள் விழிப்பது, 80 லட்சம் குடும்பங்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது.

சமச்சீர் கல்வி என்பது கடந்த தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி யால் கொண்டுவரப்பட்டதிட்டம் தான். ஆனால், கருணாநிதியின் மூளையில் உதித்த, தி.மு.க. காலம் காலமாகச் சொல்லி வந்த பிரத்யேகத் திட்டம் அல்ல. தமிழகத்தில் மிகமிக முக்கியமான கல்வியாளர்களுள் ஒருவரான பேராசிரியர் வசந்திதேவி, ' 'மாலை முரசு’ நாளிதழில் ஒரு கட்டுரை எழுதினார். 'மாநில அரசு நடத்தும் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு ஒரு புத்தகம், மெட்ரிக் பள்ளிப் பிள்ளைகளுக்கு வேறு புத்தகம், ஆங்கிலோ இந்தியன் பள்ளிப் பிள்ளைகளுக்கு இன்னொரு புத்தகம், ஓரியன்டல் பள்ளிகளுக்கு மற்றொரு புத்தகம் என்று இருப்பது தான் சமநிலைச் சமூகமா?’ என்ற தொனியில் கேட்டது அந்தக் கட்டுரை. அது முதலமைச் சராக இருந்த கருணாநிதியைப் பாதித்தது. உடனே, 'சமச்சீர் கல்வி’ என்ற கொள்கையைத் தனதாக்கிக்கொண்டார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் நாடு முழுவதும் சென்று ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பள்ளி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார்கள்.

அ ஆ இ ஈ உ ஊ எ ஐ ஒ ஓ ஒள ஃ

வழக்கம்போல மெட்ரிக் பள்ளி முதலாளிகள் இதை எதிர்த்தார்கள். 'அரசாங்கப் பள்ளியை விட நாங்கள் உசத்தி’ என்று கல்வியைப் பெரும் தொழில் ஆக்கி... இன்று பள்ளிகளை வர்த்தக நிறுவனங்களாக மாற்றியவர்கள் அவர்கள். அரசாங்கப் பள்ளிப் பிள்ளையும், மெட்ரிக் மாணவனும் ஒரே பாடப் புத்தகத்தைப் படித்தால், இரண்டுக்கும் வித்தியாசம் இருக்காதே... வசூல் பண்ண முடியாதே!

மெட்ரிக் நிர்வாகிகளை அழைத்து அன்றைய பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். ''பாடப் புத்தகம் மட்டும்தான் ஒன்றாக இருக்கப்போகிறது. மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் என்ற வார்த்தையை நீங்கள் போட்டுக்கொள்ளலாம்'' என்று வாக்குறுதி கொடுத்த தால் அமைதி ஆனார்கள்.

கடந்த கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புக்கு மட்டும் பாடங்கள் மாறின. இந்த ஆண்டு மற்ற வகுப்புகளுக்கு மாறியிருக்க வேண்டும். ஆனால், திடீர்த் தடை.

பழைய புத்தகமா; புதிய புத்தகமா? என்பது ஜூலை 6-ம் தேதிக்குள் தெரிந்துவிடும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவில் பெரும்பாலானோர், சமச்சீர் கல்வி முறைக்கு எதிரானவர் கள். மெட்ரிக் பள்ளி முதலாளிகளும், கல்வி யாளர்களாக இடம் பெற்றுள்ளார்கள். இவர் களது அறிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க வேண்டும். உச்ச நீதிமன்றம் ஏற்க வேண்டும். தமிழக அரசும் ஏற்க வேண்டும். இப்படி நான்கு முனைக்குள் நம்முடைய மாணவச் சமுதாயம் சிக்கியுள்ளது.

மிகச் சாதாரண விஷயத்தைப் பெரும் சிக்கலாக மாற்றிவிட்டவர் ஜெயலலிதாதான். ''முழுமையான சமச்சீர் கல்வியைக் கொண்டுவருவதுதான் எங்கள் நோக்கம்'' என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சொல்லிக்கொண்டே பிரச்னை யைப் பெரிதுபடுத்திவிட்டார். கருணாநிதி எடுத்து வந்த சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களில் குறைபாடுகள் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை. எல்லா இடங்களிலும் தனது சுய புராணத்தை அவர் சேர்க்கக்கூடியவர்தான். அந்தக் குறைபாடுகளை நீக்கிவிட்டு, புத்தகங்களை ஏற்றிருக்க வேண்டும். 'குறைபாடுகளைக் களைந்து இதை நாங்கள் எப்படி கொண்டுவரப்போகிறோம்’ என்று பொதுமக்களுக்கு விளக்காமல்... 'கருணாநிதி கொண்டுவந்ததை நான் நிறுத்துகிறேன் பார்’ என்று கர்ஜிக்கும் மனோபாவம் மட்டும்தான் ஜெயலலிதாவிடம் அதிகமாகத் தெரிகிறது.

சரியாகச் சொன்னால், கருணாநிதி கொண்டுவந்தது சமச்சீர் கல்வி அல்ல; சமச்சீர் பாடத் திட்டம்தான். இதற்காக அவர் அமைத்த எஸ்.முத்துக்குமரன் குழு, நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகளைச் செய்தது. ஆனால், கருணாநிதி இரண்டு மூன்றை மட்டும்தான் எடுத்துக் கொண்டார்.

மாநிலக் கல்வி வளர்ச்சி மன்றம், பாடத் திட்டங்களை உருவாக்க ஆலோசனைக் குழு, பாட நூல்களை வகுத்துரைக்கத் தகுதி வாய்ந்த நுண்ணறிவுத் தொழில் திறன் அமைப்பு, ஆசிரியர்களின் தகுதிப்பாடு, கட்டமைப்பு வசதி, தேர்வு முறையில் மாற்றம், ஆசிரியர்களின் நடத்தை விதிகள், மாணவர்களின் நடத்தை விதிகள் என்று எத்தனையோ தரவுகளை எஸ்.முத்துக்குமரன் சொன்னார். ''முழுமையான சமச்சீர் கல்வியைக் கொண்டுவருவதே நோக்கம்'' என்று சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதா, இதைச் செய்ய வேண்டும்.

அ ஆ இ ஈ உ ஊ எ ஐ ஒ ஓ ஒள ஃ

அதைவிட முக்கியமாக, கும்பகோணத்தில் 94 பள்ளிப் பிள்ளைகள் தீயினால் கருகியது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையை ஜெயலலிதா படிக்க வேண்டும். சமச்சீர் கல்வி கொண்டுவருவதால் தமிழ்நாட்டின் கல்வித் தரம் சீரழிந்துவிட்டதாக வேஷம் போடும் மெட்ரிக் பள்ளிகள், பல ஆயிரம் ரூபாய்களை வசூலிக்கும் அதன் நிர்வாகிகள்... தங்கள் பள்ளிகளில் எப்படிப்பட்ட வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதை நீதிபதி சம்பத் உருகி உருகி எழுதி இருப்பார்.

கல்வி விஷயத்தில் கருணாநிதி மறந்துவிட்ட பேராசிரியர் முத்துக்குமரன், நீதிபதி சம்பத் அறிக்கையை ஜெயலலிதா கையில் எடுக்க வேண்டும். எடுத்தால் மட்டுமே, இன்று அவர் மீது எழுந்துள்ள கோபம் அடங்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism