Published:Updated:

ராணுவ நகர்வு சர்ச்சை: முட்டாள்தனமானது : வி.கே. சிங் ஆவேசம்

ராணுவ நகர்வு சர்ச்சை: முட்டாள்தனமானது : வி.கே. சிங்  ஆவேசம்
ராணுவ நகர்வு சர்ச்சை: முட்டாள்தனமானது : வி.கே. சிங் ஆவேசம்
ராணுவ நகர்வு சர்ச்சை: முட்டாள்தனமானது : வி.கே. சிங்  ஆவேசம்

புதுடெல்லி: புரட்சி செய்யும் நோக்கத்தில் டெல்லியை நோக்கி ராணுவம் முன்னேறியதாக வெளியான செய்தி முட்டாள்தனமானது என்று  ராணுவ தளபதி வி.கே. சிங் ஆவேசமாகக்  கூறியுள்ளார்.

ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங்கின் பிறந்த தேதி குறித்து சர்ச்சை ஏற்பட்டதால், அவர் ஒய்வு பெறுவது எப்போது எனப்தில்  அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக வி.கே. சிங், கடந்த ஜனவரி 16 ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த அடுத்த  ஒரு சில மணி நேரத்திலேயே, மத்திய அரசுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல், ராணுவத்தின் தரைப்படையை சேர்ந்த இரண்டு  படைப்பிரிவுகள் டெல்லியை நோக்கி முன்னேறியதாக நேற்று வெளியான செய்தி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் மறுத்திருந்தனர்.

இந்நிலையில் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறும்  இயற்கை பேரிடர் மேலாண்மை மற்றும் மனிதாபிமான உதவி  குறித்த மூன்று நாள் பிராந்திய கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வந்த வி.கே. சிங்கிடம் ராணுவம் டெல்லியை நோக்கி  முன்னேறியதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோது, "இது முற்றிலும் முட்டாள்தனமானது" என்று மிக்வும் கோபத்துடன்  கூறினார்.