Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

'நவோதயா’ செந்தில், புதுச்சேரி. 

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெல்லியில் 'அன்னை’ இல்லாதபோது 'அம்மா’ விசிட் அடித்தது யதார்த்தமா? அல்லது காரணமாகத்தானா?

##~##

காரணமாகத்தான்! கஷ்ட காலத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கும்போது கை குலுக்க, ஜெயலலிதா என்ன விவரம் இல்லாதவரா? சோனியா டெல்லியில் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட பிறகுதான் ஜெயலலிதாவின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டது. 'காங்கிரஸுடன் கூட்டணி உண்டா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, 'அதை அவர்கள்தானே கேட்க வேண்டும்?’ என்று ஜெ. சொன்னதில் அலட்சி​யம்தானே அதிகம் தெரிந்தது! 

எம்.ஸ்டீபன் ரஞ், தோஹா.

கழுகார் பதில்கள்

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை முழுமையாக மீட்க முடியுமா?

முடியும்! மொரீஷியஸ், சிங்கப்பூர், ஹாங்காங், துபாய் உள்ளிட்ட 10 நாடுகளில் அவை பதுக்கிவைக்கப்பட்டு உள்ளதாக சி.பி.ஐ. சந்தேகப்படுகிறது. அந்த நாடுகளுக்கு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். அதிகாரத் தடங்கல் இல்லாமல் இந்த வழக்கு நடக்குமானால், அத்தனை பணமும் முழுமையாக மீட்கப்படும்! 

ஏ.சத்யராஜ், ராஜேந்திரம்.

கழுகார் பதில்கள்

மும்பைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளின் பட்டியலை நாம் அளித்து பல ஆண்டுகள் ஆகியும், இன்னமும் பாகிஸ்தான் அரசு அவர்களை ஒப்படைக்காமல் உள்ளது. அமெரிக்காவைப் போல நம்மால் செயல்பட முடியாதா?

முடியும்! ஆனால், இங்கு பிரதமர் நாற்காலியில் இந்திரா காந்தி இருந்திருக்க வேண்டும். அரசியல் அதிகாரமும் ஆளுமைத் திறமும்கொண்ட மனிதர்​களால் மட்டுமே அப்படிச் செயல்பட முடியும். மன்மோகன் சிங் போன்ற கீ கொடுத்த பொம்மை​களால் முடியாது! 

சோமசுந்தரம், கோவை-42.

கழுகார் பதில்கள்

தன் மகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ள ஈரோடு மாவட்ட ஆட்சியர் அனந்தகுமாரின் முன்னுதாரணம் மேலும் வலுவடையுமா?

நல்ல முன்னுதாரணம் தொடர வேண்டும். அதற்கு ஏற்ப அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்ந்தவையாக அரசும் மாற்றியாக வேண்டும். சரியான கட்டடங்கள் இல்லாமல், ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளை வைத்துக்கொண்டு மக்கள் அனைவரும் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கிறார்கள் என்று குறை சொல்வதில் அர்த்தம் இல்லை!

கூடவே, 'ஆட்சியரின் மகள் சேர்ந்தவுடன், அந்தப் பள்ளிக்கு அத்தனை அரசு அதிகாரிகளும் படை எடுக்கிறார்கள். மதிய உணவு காரில் வருகிறது...’ என நக்கல்களும் ஏராளம். இதை ஏளனம் செய்பவர்களை நான் ரசிக்கவில்லை!

 சு.முத்துராமலிங்கம், ஸ்ரீவைகுண்டம்.

கழுகார் பதில்கள்

காங்கிரஸ் எந்த நிலைமைக்குத் தி.மு.க-வைக் கொண்டுசென்றால், மந்திரி சபையில் இருந்து தி.மு.க. விலகும்?

ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்? நாட்டில் என்ன பெரிதாக நடந்துவிட்டது? காங்கிரஸையும் தி.மு.க​-வையும் பிரிக்க ஏன் சதி செய்கிறீர்கள்? உங்களைத் தூண்டிவிடுவது யார்? அவர்களுக்குள் எந்தச் சண்டையும் இல்லை. இரண்டு கட்சிகளும் தொடங்​குவதற்கு முன்பே நட்பாகத்தான் இருந்ததாக சொல்​கிறது வரலாறு. எனவே, அமைதியாக இருங்கள்! 

வேல்முருகன், நாமக்கல்.

கழுகார் பதில்கள்

புத்தகம் படிக்கும் பழக்கத்தை எப்படிக் கொண்டுவர வேண்டும்? கொஞ்சம் படிக்க ஆரம்பித்தவுடன் சலிப்புத் தட்டுகிறதே?

கழுகார் பதில்கள்

கன்னிமரா நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் படித்தவர் என்று அண்ணாவை சொல்வார்கள். தூக்கு மேடைக்குச் செல்லும் சில நிமிடங்களுக்கு முன்னால்கூட லெனின் எழுதிய 'அரசும் புரட்சியும்’ வாசித்துவிட்டுத்தான் கயிற்றை முத்தமிடப் போனான் பகத்சிங். அப்படிப்பட்ட படிக்கும் பழக்கம் முதலில் சலிப்பைத் தரும். அதற்காக எழுத்தாளர் சுஜாதா வழியைக் கண்டுபிடித்துச் சொன்னார்.

அவர் ஒரே நேரத்தில் நான்கைந்து புத்தகங்களைப் படிக்கவைத்திருப்பார். வரவேற்பரையில் ஒன்று... படிப்பறையில் ஒன்று... படுக்கை அறையில் ஒன்று... என. அப்போதைய மனநிலைக்குத் தகுந்த புத்தகத்தின் சில பக்கங்களை எடுத்துப் படிப்பார். இதைப் பின்பற்றிப் பாருங்கள்!

முழுமுதல்வன், சிதம்பரம்.

கழுகார் பதில்கள்

ஜெயலலிதாவுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்துகிறாரே சீமான்?

ஜெயலலிதா பேச்சை சீமான் முழுமையாகப் படிக்கவில்லை போலும்!

'இந்தியாவின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணில்வைத்துப் புலிகள் கொடூரமாகப் படுகொலை செய்தார்கள்’ என்றும், 'என்னுடைய வலியுறுத்தலின் பேரில்தான் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது’ என்றும், 'ராஜீவ் கொலையின் முதல் குற்றவாளியான பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றும், 'தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்களை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று நடவடிக்கை எடுத்தது நான்தான்’ என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா சொன்னது சீமானுக்குத் தெரியுமா?

'பாராட்ட நடத்தவில்லை, பயத்தால் நடத்துகிறார்’ என்று ஒருவர் கமென்ட் அடிக்கிறார்! 

பட்டு, பெங்களூரு.

கழுகார் பதில்கள்

திக்விஜய் சிங், ஒரு சுப்பிரமணியன் சுவாமியா?

கழுகார் பதில்கள்

இல்லை! சுவாமியிடம் வாய் ஜாலம் மட்டுமல்ல, எத்தனையோ செயல்பாடுகளும் உண்டு. அவர் இல்லாவிட்டால், ஸ்பெக்ட்ரமே இன்று ஸ்வாகா ஆகியிருக்கும். ஆனால், திக்விஜய் சிங், சும்மா இருக்க முடியாமல் புலம்பும் மாஜி அரசியல்வாதி. அவரால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. இரண்டு தடவை திக்விஜய் சிங் அறிக்கைகளைப் பிரசுரிக்காமல் பத்திரிகைகள் நிறுத்தினால், ஆள் அமைதியாகிவிடுவார். ஆனால் சுவாமி, யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும்... தான் நினைத்ததைச் சொல்லத் தயங்க மாட்டார்! 

சோழன், தஞ்சை.

கழுகார் பதில்கள்

2020-ல் இந்தியா வல்லரசாக மாறிவிடுமா?

இந்தியாவெங்கும் பொது இடங்களில் மல, ஜலம் கழிக்கும் மக்கள் இருக்கும் வரை... அவர்களுக்குக் கழிப்பிடம்கூட ஏற்படுத்தித் தராத அரசு இருக்கும் வரை இந்தியா எப்படி வல்லரசாக மாற முடியும்?

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனபின் நம் பிரதமர் மன்மோகன் சிங், 'மனிதக் கழிவுகளை மனிதன் சுமக்கும் அவலத்தை நீக்குவோம்’ என்று கடந்த வாரம்தான் கோஷம் எழுப்புகிறார். இந்தியா கடந்து செல்ல வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது! 

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்-1.

கழுகார் பதில்கள்

தி.மு.க. ஆட்சியில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

அது நடந்து முடிந்த சமாசாரம்! தினமணி நாளிதழின் டெல்லிப் பதிப்பு வெளியீட்டுக்கு ஜெயலலிதா ஒரு வாழ்த்து அனுப்பி உள்ளார். அதில், 'ஜனநாயகத்தின் நான்காவது தூணாகப் போற்றப்படுவது பத்திரிகை ஆகும். கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் கொள்கைகளை விமர்சிப்பதற்கும் பத்திரிகைகளுக்கு முழுமையான சுதந்திரம் உண்டு’ என்றும்  சொல்லி இருக்கிறார். இதைப் பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறேன். ஆரம்ப ஜோரில் சொல்கிறாரா அல்லது உண்மையான வார்த்தைகள்தானா அவை என்பதை ஜெயலலிதா தனது செய்கைகளின் மூலமாக நிரூபிக்க வேண்டும்!

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism