Published:Updated:

மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: தி.மு.க. அறிவிப்பு

Vikatan Correspondent
மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்:  தி.மு.க. அறிவிப்பு
மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்: தி.மு.க. அறிவிப்பு
மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்:  தி.மு.க. அறிவிப்பு

சென்னை:மின்கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் வருகிற 15 ம் தேதியன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி என்.சிவா, எம்.பி.  விடுத்துள்ள அறிக்கையில்,"அ.தி.மு.க. அரசு பால்விலை, பஸ் கட்டணம் ஆகியவற்றை தொடர்ந்து ஏப்ரல் 1 ம் தேதி முதல் மின்கட்டணத்தை 37 சதவீதம் அளவிற்கு உயர்த்தி இருக்கிறது. மேலும், அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
 
இதை கண்டித்து 9 ம்  தேதி மாவட்ட தலைநகரங்களில் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து 15 ம் தேதி தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
 
தென்சென்னையில் நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, துரைமுருகன் ஆகியோரும், வாலாஜாபாத்தில் பொதுச்செயலாளர் அன்பழகனும், மதுரையில் பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்கிறார்கள்.
 
திருவள்ளூர் பொதுக்கூட்டத்தில் பொன்முடி, துறையூர் துரைப்பாண்டியன் ஆகியோரும், தாம்பரம் கூட்டத்தில் எ.வ.வேலு, நெல்லை கவுதமன் ஆகியோரும், திருத்தணியில் டாக்டர் காஞ்சனா கமலநாதன், ரொக்கையா மாலிக் ஆகியோரும், திருவொற்றியூரில் சங்கரி நாராயணன், திருவாரூர் துரைச்செல்வம் ஆகியோரும், மாதவரத்தில் நடிகர் வாகை சந்திரசேகர், கே.ஆர்.வேலுத்தங்கம் ஆகியோரும், செங்கல்பட்டில் நடிகர் குமரிமுத்து, தீக்கனல் கருணாநிதி ஆகியோரும், மதுராந்தகத்தில் கவிஞர் வேழவேந்தன், ஸ்ரீவில்லிபுத்தூர் வெங்கட்ராமன் ஆகியோரும், கும்மிடிப்பூண்டியில் வழக்கறிஞர் என்.ஜோதி, சித்திரமுகி சத்தியவாணிமுத்து ஆகியோரும் பங்கேற்கிறார்கள்" எனக் கூறப்பட்டுள்ளது.