Published:Updated:

அஞ்சல் நிலையத்துக்கு அஞ்சலியா?

அஞ்சல் நிலையத்துக்கு அஞ்சலியா?

அஞ்சல் நிலையத்துக்கு அஞ்சலியா?

அஞ்சல் நிலையத்துக்கு அஞ்சலியா?

Published:Updated:
அஞ்சல் நிலையத்துக்கு அஞ்சலியா?

கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு இன்​றைக்கும் தவிர்க்க முடியாத அளவுக்குத் தகவல் தொடர்புக்குக் கைகொடுப்பவை, அஞ்சல் நிலையங்கள்தான். இமெயில், செல்போன் போன்றவை வந்துவிட்டாலும், இன்னமும் அஞ்சல் நிலையங்களை மட்டுமே நம்பும் மக்களும் இருக்கிறார்கள். கூரியர் நிறுவனங்கள் கால்வைக்காத குக்கிராமங்களில்கூட, சைக்கிளை மிதித்துக்கொண்டு வெயிலையும், மழையையும் தாண்டிப் பணிபுரியும் தபால்காரர்கள் இருக்கிறார்கள்.

மத்திய அரசு, அஞ்சல் துறைக்குப் புதிய பணியாளர்கள் எடுப்பதை முதலில் நிறுத்தியது. அடுத்து, ஏதேதோ காரணங்கள் சொல்லி அஞ்சலக ஊழியர்களைக் குறைத்தது. இது எல்லாம் போதாது என்று இப்போது பல அஞ்சல் நிலையங்களை இழுத்து மூடுவதில் கர்மசிரத்தையாக இருக்கிறது. நஷ்டத்தில் இயங்குவதாகக் காரணம் காட்டி, நாலைந்து அஞ்சல் நிலையங்களை ஒன்று சேர்க்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மக்களுக்கு சேவை செய்யும் ஒரு துறையில் லாப - நஷ்ட கணக்குப் பார்ப்பது எத்தனை அபத்தம். அப்படியே என்றாலும் தனியார்கள் கூரியர் நிறுவனங்களை நல்ல லாபத்துடன் நடத்தும்போது, அரசினால் ஏன் அஞ்சல் நிலையங்களைச் சிறப்பாக நடத்த முடியவில்லை? இப்போது ஒரு சில அஞ்சல் நிலையங்களில் வருமான வரி, மின்சாரக் கட்டணம், செல்போன் கட்டணம், பாஸ்போர்ட் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுபோன்று நவீனத்துவத்தை அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தி மேம்படுத்த வேண்டுமே தவிர, இழுத்து மூடக் கூடாது. தனியாருக்கு இணையான சேவையை அரசும் செய்துகொடுத்தால், எதற்காக மக்கள் தனியார் நிறுவனங்களை நோக்கிச் செல்லப் போகிறார்கள்? தேவை இல்லாத விஷயங்களுக்கு எல்லாம் குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள், அஞ்சல் நிலையங்களுக்காகக் குரல் கொடுக்கலாமே!

- இ.ஜே.தீன், திருநள்ளாறு

அஞ்சல் நிலையத்துக்கு அஞ்சலியா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism