Published:Updated:

காவேரியை நீக்கக் கையெழுத்துப் போடுறீங்களா இல்லையா?

தைலாபுரத்தில் கொந்தளித்த ராமதாஸ்!

காவேரியை நீக்கக் கையெழுத்துப் போடுறீங்களா இல்லையா?

தைலாபுரத்தில் கொந்தளித்த ராமதாஸ்!

Published:Updated:
##~##

'கட்சி நடத்துறீங்களா... கம்பெனி நடத்துறீங்களா?’ என்ற தலைப்பில் கடந்த ஜூ.வி-யில் பா.ம.க. பற்றி கட்டுரை வெளியிட்டோம். பா.ம.க-வின் எடப்பாடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான காவேரி, கட்சியின்  நிலைமையைப்பற்றி பகிரங்கமாகப் பேசவே, கட்சி வட்டாரமே கிடுகிடுத்தது. அதனால், காவேரியை கட்சியைவிட்டு நீக்கிவிட்டனர். அவருடன் தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ-வான காமராஜும் நீக்கப்பட்டு உள்ளார். 

கடந்த 19-ம் தேதி காலை தைலா புரம் தோட்டத்தில் பா.ம.க. முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கொந்தளிப்பாகக் காணப்பட்டாராம் ராமதாஸ். கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ''சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்காகத்தான் இந்தக் கூட்டத்தை ஐயா ஏற்பாடு செய்து இருந்தார். 'காவேரி இதுவரை கட்சிக்கு என்னவெல்லாம் எதிராகப் பேசி இருக்கிறார்’ என்று ஒரு பட்டியலைத் தயார் செய்து வரச்சொல்லி இருந்தாங்க. சேலம் மாவட்ட நிர்வாகிகளும் அதைக் கொண்டுவர, ஐயா அதை வாங்கிவெச்சுக்கிட்டார். ஆலோசனைக் கூட்டத்தில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவேரியை நீக்கக் கையெழுத்துப் போடுறீங்களா இல்லையா?

ஐயா, 'நம்ம கட்சிக்கு உள்ளேயே இருந்துட்டு, நம்ம வீட்டுலயே சாப்பிட்டுட்டு, காவேரி எப்படிப் பேசி இருக்கிறார் பாருங்க. நானும் என் மகனும் கம்பெனி மாதிரியா இந்தக் கட்சியை நடத்திட்டு இருக்கோம்? தலைவர் மணி இந்தக் கட்சிக்காக எப்படி எல்லாம் தியாகம் செய்து இருக்கிறார் என்பதுபற்றி காவேரிக்கு என்ன தெரியும்? அவருக்கு மறுபடியும் எம்.எல்.ஏ. ஸீட் கிடைக்கலை. அந்த எரிச்சலில்தான் இப்படிப் பேசி இருக்கார். அவருக்கே திரும்பத் திரும்ப ஸீட் கொடுத்துட்டு இருக்க முடியுமா? எல்லோருக்கும்தான் வாய்ப்பு கொடுக்கணும். இனியும் அவரைப்பத்தி பேசுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவர் நம்ம கட்சிக்குத் தேவையும் இல்லை. உடனே, கடிதத்தைத் தயார் பண்ணுங்க!’ என்று சொல்லிவிட்டார்.

அடுத்து எழுந்த கோ.க.மணி, 'காவேரி என்னைப் பத்தித்தான் நிறையப் பேசி இருக்கார். பேசிட்டுப் போகட்டும் விடுங்க. ரொம்ப வருஷமா கட்சியில் இருக்கார். ஏதோ உணர்ச்சிவசப்பட்டுப் பேசிட்டார். இந்த ஒரு தடவை எச்சரிக்கை பண்ணி விட்ருவோம்’ என்று சொல்ல, நிர்வாகிகள் சிலரும் ஆமோதித்தார்கள். ஆனால், இதை ஐயா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவரது முகம் மாறிவிட்டது.

'ஜூ.வி’-யைத் தூக்கிக் காட்டி, 'அப்போ இதுல சொல்லி இருக்கிறது சரின்னு ஒப்புக்கிட்டு காவேரி கால்ல விழச் சொல்றீங்களா? நீக்கம் செய்யும் லெட் டர்ல நீங்க கையெழுத்துப் போடுறீங்களா... நான் போடவா?’ என கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். அதன் பிறகுதான் காவேரியை கட்சியில் இருந்து நீக்கம் செய்யும் கடிதத்தில் மணி கையெழுத்துப் போட்டார்.

காவேரியை நீக்கக் கையெழுத்துப் போடுறீங்களா இல்லையா?

அதன் பிறகு, காமராஜ் விஷயத்துக்கு ஐயா வந்தார்!

'மேட்டூர் தொகுதியில நம் கட்சித் தலைவர் மணி தோற்றதுக்குக் காரணம் நம்ம கட்சியை சேர்ந்த ஒருத்தர் தான். தாரமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான காமராஜ், அவருடைய சொந்த ஊரான

காவேரியை நீக்கக் கையெழுத்துப் போடுறீங்களா இல்லையா?

மேச்சேரியில் வேலையே பார்க்கவில்லை. மேச்சேரியில்தான் மணிக்கு ரொம்பவும் குறைந்த ஓட்டுகள் கிடைச்சிருக்கு. அதனால, காமராஜையும் கட்சியைவிட்டு நீக்கித்தான் ஆகணும்’ என்று மருத்துவர் ஐயா அடுத்த குண்டைப் போட்டார். அவருக்கும் உடனே கடிதம் தயாரானது...'' என்று தைலாபுரம் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விவரித்தார்கள்.

கட்சியின் இந்த நடவடிக்கை பற்றி எடப்பாடி காவேரியிடம் பேசினோம். ''யார் சொல்வதையும் கேட்கும் நிலையில் இன்று மருத்துவர் ஐயா கிடையாது. அவரும் அவரோட மகனும் என்ன நினைக்கிறாங்களோ... அதைத்தான் எல்லோரும் நினைக்கணும். அவங்க சொல்றதைத்தான் கேட்டுக்கணும். எங்களோட கருத்தைச் சொல்லும் ஜனநாயகம் பா.ம.க-வில் கிடையாது. பணத்தின் மீது பேராசையும், பதவியின் மீது அதீதப் பாசமும் உள்ளவராக ராமதாஸ் மாறிவிட்டார். பா.ம.க. கடந்த மூன்று மாதங்களா நோய்வாய்ப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்குது. அதைப் பார்த்துட்டு எவ்வளவு நாள் சும்மாவே இருக்க முடியும்? கருத்து சொன்னதால், கட்சியைவிட்டு நீக்கிட்டாங்க. இனி எந்தக் கட்சிக்காரனாவது வாய் திறப்பானா? சாதாரண ஆரம்பப் பள்ளிக்கூட வாத்தியாராக இருந்து மாசம்

காவேரியை நீக்கக் கையெழுத்துப் போடுறீங்களா இல்லையா?

2,000 சம்பளம் வாங்கிட்டு இருந்த மணிக்கு, இன்றைக்கு கடப்பாவுல கிரானைட் கம்பெனி, மலேசியாவில் நகைக் கடை, தமிழ்நாட்டுல பல பகுதிகளில் ரியல் எஸ்டேட் பிசினஸ். இவ்வளவு பணமும் எங்கே இருந்து வந்தது? இதை எல்லாம் கேள்வி கேட்டால்... தப்பா? பல்வேறு விவகாரங் களில் ராமதாஸின் குடுமி மணியோட கையில் இருக்குது. அதனாலதான், மணியை எதிர்த்து ராமதாஸ் ஒரு வார்த்தைகூட பேசுவது கிடையாது, பேசவும் முடியாது.

என்னுடைய பேட்டியைப் படிச்சுட்டு தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் எனக்கு ஆயிரக் கணக்கான போன்கள். 'நாங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருந்தோமோ... அதைச் சொல்லிட்டீங்க. பூனைக்கு மணி கட்டிய பெருமை உங்களுக்கே சேரட்டும்’னு ரொம்பவும் சந்தோஷப்பட்டாங்க. என்னை கட்சியைவிட்டு நீக்கிய பிறகும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பலர் எனக்கு போன் பண்ணி, 'இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க காவேரி, நாங்க இருக்கோம்’னு ஆறுதல் சொன்னாங்க. கூடிய சீக்கிரமே பா.ம.க-வை நம்பி ஏமாந்து நிற்கும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களையும், உணர்வுள்ள பா.ம.க. தொண்டனையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் நடத்தத் திட்டமிட்டு இருக்கேன். அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அடுத்த கட்ட முடிவுகளை அறிவிப்போம். 'ஏழை மக்களுக்கு விழிப்பு உணர்வு வந்தால், நம்மைப் புறக்கணிச்சிடுவாங்க. அதனால, அவங்களுக்கு விழிப்பு உணர்வே வராமப் பார்த்துக்கணும்’னு நினைக்கிறவர் ராமதாஸ். அப்படிப்பட்ட ராமதாஸை நம்பி தங்களையே அடகுவைத்து அவருக்காக உழைத்துக்கொண்டு இருக்கும் ஏழை, எளிய மக்களை அவரிடம் இருந்து மீட்பதுதான் எங்கள் முதல் வேலை!'' என்று கைகளை உயர்த்திச் சொன்னார் காவேரி.

தாரமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான காமராஜை சந்தித்தோம். ''வன்னியர் சங்கமா இருந்த காலத்தில் இருந்து நான் இயக்கத்தில் இருக்கேன். கட்சிக்காக உண்மையா உழைச்ச எல்லோரையுமே பின்னுக்குத் தள்ளிட்டாங்க. பண முதலைகளோட கையில் கட்சி சிக்கி, பலவீனம் அடைந்து எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது. கடந்த முறை எம்.எல்.ஏ-வாக இருந்தபோது தொகுதிக்கு வந்திருந்தால்தானே, மக்கள் ஓட்டுப் போடுவாங்க. மணி,தொகுதிக்கு வந்ததும் கிடையாது. மக்களுக்கு எதுவும் செஞ்சதும் கிடையாது. அப்படி இருக்கும்போது நான் வேலை செய்யலைன்னு... தோல்விக்கு ஒரு உப்பு சப்பில்லாத காரணத்தைச் சொல்லி என்னைக் கட்சியைவிட்டு நீக்கி இருப்பது வேதனையாக இருக்கிறது. கருத்து சுதந்திரம் என்பதே இல்லாத ஒரு கட்சியாக பா.ம.க. மாறிவிட்டது. மணி சொல்றதுதான் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் வேத வாக்கு. இப்படியே போயிட்டு இருந்தால், ஆண்டவனால்கூட பா.ம.க-வைக் காப்பாற்ற முடியாது. என் ஆதரவாளர்களுடன் கலந்து பேசி கூடிய சீக்கிரமே நல்ல முடிவை அறிவிப்பேன்!'' என வார்த்தைகளில் வருத்தங்களைக் கலந்து பேசினார்.

பா.ம.க தரப்பில் பேசியபோது, ''கட்சிக் கட்டுப் பாட்டை மீறியதற்காகத்தான் காவேரியையும் காமராஜையும் கட்சியைவிட்டு நீக்கி இருக்கிறோம். கட்சியைவிட்டு நீக்கப்பட்டவங்க, கட்சிக்கு எதிராகப் பேசுவது வழக்கமான நிகழ்வுதான். அதைப் பெருசா எடுத்துக்கத் தேவை இல்லை. இங்கே காவேரிக்குன்னோ... காம ராஜுக்குன்னோ தனிப்பட்ட கூட்டம் கிடையாது. எல்லாமே மருத்துவர் ஐயாவுக்காகக் கூடும் கூட்டம். யார் வந்தாலும் யார் போனாலும், கட்சிக்காரன் எப்போதும் ஐயா பக்கம்தான் இருப்பான்!' என்று சொன்னார்கள்.

இதற்கிடையில் நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் இருவரும் கூடிய விரைவிலேயே புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கு வதற்கான வேலைகளைத் தொடங்கி விட்டார்களாம். புதிய இயக்கத்துக்கு 'மறுமலர்ச்சிப் பாட்டாளி மக்கள் கட்சி’ என்று பெயர் வைக்கலாமா என தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம் காவேரி!

- கே.ராஜாதிருவேங்கடம்

படங்கள்: க.தனசேரன், எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism