Published:Updated:

ஒடிசா: அரசுக்கு அளித்த கெடு மேலும் ஒரு நாள் நீட்டிப்பு

Vikatan Correspondent
ஒடிசா: அரசுக்கு அளித்த கெடு மேலும் ஒரு நாள் நீட்டிப்பு
ஒடிசா: அரசுக்கு அளித்த கெடு மேலும் ஒரு நாள் நீட்டிப்பு
ஒடிசா: அரசுக்கு அளித்த கெடு மேலும் ஒரு நாள் நீட்டிப்பு

புவனேஸ்வர்:பிணைக்கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் ஒடிசா அரசுக்கு விதித்த கெடுவை மாவோயிஸ்டுகள் மேலும் ஒரு நாள்  நீட்டித்துள்ளனர்.

ஒடிசாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா மற்றும் இத்தாலி சுற்றுலா பயணி பாவ்லோ போகஸ்கோ இருவரையும்  மாவோயிஸ்டுகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இருவரையும் விடுவிக்க மாவோயிஸ்டுகள் 13 நிபந்தனைகளை  அறிவித்தனர். அதோடு இன்று மாலை வரை காலக் கெடுவும் விதித்தனர்.

இந்நிலையில், மாவோயிஸ்டுகளின் முக்கிய கோரிக்கையை ஏற்பதாக அறிவித்த ஒடிசா அரசு,  27 கைதிகளை சிறையிலிருந்து  விடுவிக்க ஒடிசா அரசு முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து அரசுக்கு விதித்த கெடுவை மேலும் ஒரு நாள் நீட்டிப்பதாக மாவோயிஸ்டுகள் இன்று அறிவித்தனர்.அதன்படி கெடு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிறையில் இருந்து விடுவிக்கப்படும் 27 பேரும் யார்-யார் என்ற விவரத்தை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்  அரிவித்துள்ளார். விடுவிக்கப்படும் 27 கைதிகளில் 8 பேர் மாவோயிஸ்டுகள். மற்றவர்கள் சாசி மூலியா எனும் ஆதிவாசி  சங்கத்தை சேர்ந்தவர்கள். மேலும் கைதிகள் விடுதலை செய்யப்படுவதால், எம்.எல்.ஏ.வை உடனே விடுவிக்க வேண்டும் என்று   நவீன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.