Published:Updated:

லோக்பால்: மத்திய அரசுக்கு அண்ணா ஹஜாரே 'கெடு'

லோக்பால்:  மத்திய அரசுக்கு அண்ணா ஹஜாரே 'கெடு'
லோக்பால்: மத்திய அரசுக்கு அண்ணா ஹஜாரே 'கெடு'

லோக்பால்: மத்திய அரசுக்கு அண்ணா ஹஜாரே 'கெடு'

லோக்பால்:  மத்திய அரசுக்கு அண்ணா ஹஜாரே 'கெடு'

புனே: லோக்பால் மசோதாவை வருகிற மே மாசத்துக்குள் நிறைவேற்றபடவேண்டும் என்று மத்திய அரசுக்கு அண்ணா ஹஜாரே கெடு விதித்துள்ளார்.

இது தொடர்பாக அவ்ர் தமது சொந்த ஊரான மகாராஷ்ட்ரா மாநிலம் ராலேகான் சித்தியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "லோக்பால் மசோதாவை நிறைவேற்றாமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. லோக்பால் மசோதா நிறைவேற்றப்படுகிறதா என்பதை அறிய நடப்பு நாடாளூமன்ற கூட்டத்தொடர் நிறைவ்டையும் வரை,  அதாவது  மே மாதம் வரை பொறுத்திருப்போம்.

அதன் பின்பு எங்கள் போராட்டம் தொடரும்.நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களை திரட்ட திட்டமிட்டுள்ளேன்.

ஊழல் பற்றியும் ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா கொண்டு வருவதன் அவசியம் பற்றியும் மக்களிடம் எடுத்துக்சொல்லி விழிப்புணர்வு ஏற்பபடுத்துவேன்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நாட்டு மக்களிடையே இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 2014 ஆம் ஆண்டுக்கான நாடாளும்ன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே, டெல்லி ராம் லீலா மைதானத்தில் மீண்டும் அமர்ந்து எனது போராட்டத்தை தொடங்குவேன்.

இப்போதைக்கு உடனடியாக் தேர்தல்கள் எதுவும் இல்லை என்ப்தால், லோக்பால் விஷயத்தில் மத்திய அரசு காலத்தை கடத்துகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு