Published:Updated:

இணைந்து கோயிலுக்கு சென்ற ஜெ. - சசி!

Vikatan Correspondent
இணைந்து கோயிலுக்கு சென்ற ஜெ. -  சசி!
இணைந்து கோயிலுக்கு சென்ற ஜெ. - சசி!
இணைந்து கோயிலுக்கு சென்ற ஜெ. -  சசி!

சென்னை: பிரிந்த பின்னர் மீண்டும் சேர்ந்த தோழிகளான தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், சசிகலாவும் இன்று ஒன்றாக  சேர்ந்து கோயிலுக்கு சென்று வழிபட்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் ஜெயலலிதாவால் போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, கடந்த வார இறுதியில்  மீண்டும் போயஸ் தோட்டம் திரும்பினார்.அவர் அளித்த் விளக்கத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்த ஜெயலலிதா,  கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவரது உறவினர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒன்ராக சேர்ந்து சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள பிள்ளையார்  கோயிலுக்கு சென்றனர். இருவரும் அங்கு சுமார் 30 நிமிடம் பிள்ளையாரை வணங்கி வழிபட்டனர்.