Published:Updated:

ஜெயலலிதா உடலுக்கு தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி

ஜெயலலிதா உடலுக்கு தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி
ஜெயலலிதா உடலுக்கு தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி
ஜெயலலிதா உடலுக்கு தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி

மறைந்த ஜெயலலிதா உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள்  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நேற்றிரவு காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா உடலுக்கு தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி

நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, நிர்வாகி பொன்வண்ணன், நடிகர் பிரபு, தனது மகன் விக்ரம் பிரபு மற்றும் குடும்பத்தினருடன் வந்து ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், நடிகர்கள் ராதாரவி, விஜய், கவுண்டமணி, செந்தில், மன்சூர் அலிகான்,   சிவகார்த்திகேயன், தாமு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா உடலுக்கு தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி

அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இசைஞானி இளையராஜா, ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதா உடலுக்கு தலைவர்கள், நடிகர்கள் அஞ்சலி

மேலும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நடிகர் அருண்பாண்டின், விவேக், இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், கே.டி.குஞ்சுமோன், பி.வாசு,  நடிகைகள் கெளதமி,  நிரோசா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.